டிஜிட்டல் அடையாள அட்டைகளை விரைவுபடுத்தல் , அரசாங்க சேவையை ஜிட்டல் மயமாக்குவதற்குத் தேசிய கொள்கை – பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ 

டிஜிட்டல் அடையாள அட்டைகளை வெளியிடுதல் உள்ளிட்ட அரசாங்க சேவையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு அவசியமான தேசிய கொள்கையைத் தயாரிப்பதற்கான பணிப்புரையை தேசிய பேரவையின் ஊடாக முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல் ராஜபக்ஷ நேற்று (18) தெரிவித்தார். பாராளுமன்றத்தல் இன்று நடைபெற்ற உப குழுவின் முதலாவது கூட்டத்தில் அரச நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள், … Read more

தாமரைக் கோபுரத்தின் வளாகம் திறந்திருக்கும் புதிய நேரஅட்டவணை 

தாமரைக் கோபுரத்தின் வளாகம் திறந்திருக்கும் புதிய நேரஅட்டவணை  1. தாமரைக் கோபுரத்தின் வளாகம் பொதுமக்களின் பார்;வைக்காக திறந்திருக்கும் நேரம் பின்வாருமாறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.    திங்கள் முதல் வெள்ளி வரை – மு. ப. 09.00 முதல் இரவு 09.00 வரை நுழைவுச்சீட்டுக்கள்  விநியோகிக்கப்படுவதுடன், இரவு 10.00மணி வரை பார்வையிடலாம் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக் கிழமை வரை – மு.ப. 09.00 முதல் இரவு 10.00வரை நுழைவுச்;சீட்டுக்கள் வழங்கப்படுவதுடன், இரவு 10.00 மணி வரை பார்வையிடலாம்.  2. … Read more

எரிபொருள் விநியோகம் தொடர்பாக மின் சக்தி , எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர

ஊழியர்கள் எவரேனும் அல்லது தொழிற்சங்கம் எரிபொருள் விநியோக சேவையை சீர்குழைத்தால் சட்டம் மற்றும் ஒழுங்குவிதிகளின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: எரிபொருள் சேவை கடந்த ஆறு மாத காலப்பகுதியில் அத்தியவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை மசகு எண்ணெய் உற்பத்தி தொடர்பான விசேட ஒழுங்கு விதிகள் திருத்த சட்ட மூலம்; மீதான விவாதம் இன்று (18) … Read more

முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஸவுக்கு பிரதமர் பதவி- எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை

முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஸவுக்கு பிரதமர் பதவி வழங்குவது தொடர்பில் எந்தவித பேச்சுவார்த்தையும் இதுவரை நடத்தப்படவில்லை என்று வெகுஜன ஊடக, போக்குவரத்து அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (18) அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பை அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தினித்; சிந்தக கருணாரத்ன நெறிப்படுத்தினார். தற்போது வெளிநாட்டிலிருக்கும் பஸில் ராஜபக்ஸவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளதா? என ஊடகவியாளர் … Read more

இஸ்லாம் பாடநூல்கள்: திருத்தம் செய்யபட்டு மீள வழங்க நடவடிக்கை – கல்வி அமைச்சர் தெரிவிப்பு

இஸ்லாம் பாடநூல்கள் அனைத்தையும் திருத்தங்களுடன் 2023இல் மீள வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் இன்று(18) பாராளுமன்றத்தில்; கேட்ட கேள்விக்கு பதிலலிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பாடத்திட்ட, பாடசாலை இஸ்லாம் கல்விக்கான பாடப்  புத்தகங்கள் தரம் 6 இலிருந்து தரம் 11இற்கு 2021மற்றும்; 2022இல்; விநியோகிக்கப்பட்டன. ஆனால் இன, மத, குல வாதம் காரணமாக தன்னுடைய மார்க்கத்தைக் … Read more

எதிர்வரும் நாட்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கலாம்

எதிர்வரும் நாட்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கலாம். அத்தனகல்ல ஓயா, களனி கங்கை, களுகங்கை, கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கை ஆகியவற்றை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிக விளிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் (நீர் விஞ்ஞான மற்றும இடர் முகாமைத்துவ) எஸ். பீ. சீ. சுகீஷவர தெரிவித்தார். கங்கைகளின் நீர் மட்டம் நேற்று (17) குறைந்து, நீரோட்டம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த தினங்களில் பெய்த மழையினை அடுத்து முகத்துவாரத்தில் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் … Read more

இலங்கை மாணவர்கள் 396 பேருக்கு பாகிஸ்தானில் புலமைப்பரிசு

இலங்கையை சேர்ந்த 396 மாணவர்களுக்கு  பாக்கிஸ்தானில் உயர் கல்வி கற்கைநெறிகளைப் பின்பற்றுவதற்கு புலமைப்பரிசில்களைப் பெற்றுள்ளனர். கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்துடன் இணைந்து பாகிஸ்தானின் உயர் கல்வி ஆணைக்குழு (HEC), இலங்கை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் விருது வழங்கும்  நிகழ்வு கடந்த 15ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பித்த 1400 இலங்கை மாணவர்களில் 396 பேர் பாக்-இலங்கை உயர்கல்வி ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் அல்லாமா இக்பால்  புலமைப்பரிசில்களைப் பெற்றுள்ளனர். அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டத்தின் … Read more

பனை சார்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகள் அனைத்தும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சருடன் இணைந்து தீர்க்கப்படும்

கற்பக தருவான பனை சார்ந்த தொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்தும் துறைசார்ந்த பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் வைத்திய கலாநிதி ரமேஸ் பத்திரனவுடன் இணைந்து தீர்த்து வைக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பனை அபிவிருத்தி சபையின் தலைமைக் காரியாலயத்திற்கான கட்டிடத் தொகுதியின் திறப்பு நிகழ்வில் நேற்றைய தினம் (13) உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார். 40 வருடங்களுக்கு பின்னர் பனை அபிவிருத்தி சபைக்கு வாடகை … Read more

2023 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

2023ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) இன்று (18) பாராளுமன்றத்தில் (முதலாவது மதிப்பீட்டுக்காக) சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த வாரத்துக்கான பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் குறித்துத் தீர்மானிப்பதற்காக அண்மையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. பாராளுமன்றம்  இன்று முதல் 21ஆம் திகதி வரை கூடவிருப்பதுடன், ஒவ்வொரு நாளும் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய  இன்று மு.ப 9.30 மணிக்குப் … Read more