உலகின் நட்பு நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இலங்கை

2022 ரீடர்ஸ் சாய்ஸ் விருதுகளின் 2022 Readers’ Choice Awards முடிவுகளின் அடிப்படையில், நட்பு நாடுகளின் Friendliest country  பட்டியலில் இலங்கை 9 வது இடத்தை பெற்றுள்ளது. மேலும் உலகின் முதலாவது நட்பு நாடாக பிரெஞ்சு பாலினேசியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. உலகின் முதல் 10 நட்பு நாடுகளின் பட்டியல் விபரம்: 1. பிரெஞ்சு பாலினேசியா2. கொலம்பியா3. நியூசிலாந்து4. தாய்லாந்து5. கோஸ்ட்டா ரிக்கா6. போட்ஸ்வானா7. பேரு8. பெலிஸ்9. இலங்கை10. பிலிப்பைன்ஸ்

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க நீண்ட கால திட்டம் முன்வைக்கப்படும் – காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன

.பொருளாதாரமும் சுற்றுச்சூழலும் ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பதால், காலநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கான நீண்டகாலத் திட்டத்தை முன்வைக்க எதிர்பார்ப்பதாக காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார். அண்மையில் தாய்லாந்தின் பாங்கொக் நகரில் நடைபெற்ற ‘காலநிலை நிதி’ (Climate Finance) தொடர்பான கலந்துரையாடலின் ஆரம்ப அமர்வில் உரையாற்றும்போதே ருவன் விஜயவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். காலநிலை மாற்றம் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளுடன் தொடர்புடைய பல சர்வதேச அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களைச் … Read more

'அரச தகவல் தொடர்புப் பொறிமுறையில் அமைச்சுக்களின் ஊடகச் செயலாளர்களின் பங்கு'

அமைச்சுக்களின் ஊடகச் செயலாளர்களின் முக்கிய பங்கு, அரச அபிவிருத்தி மற்றும் கொள்கைத் தொடர்பிலான விடயங்களை மக்கள் மயப்படுத்துவதில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தும் செயலமர்வு அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றது. இதன் ஆரம்ப நிகழ்வில் வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் ஷாந்த பண்டார, வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனூஷ பெல்பிட,  சிங்கள மொழிப் பத்திரிகை லங்காதீபவின்  பணிப்பாளரும் பிரதம ஆசிரியருமான ஸ்ரீ ரணசிங்க, ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் தனுஷக ராமநாயக்க, … Read more

துல்லியமான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க பொறுப்புடன் செயற்படுங்கள் – ஊடகச் செயலாளர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை.

தற்போதைய சவாலில் இருந்து நாட்டை மீட்டெடுக்க நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் எனவும், அதற்கு துல்லியமான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது அவசியம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரவித்தார். பிரசாரம் இன்றி எதனையும் சாதிக்க முடியாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை தாமதமின்றி மக்களுக்கு கொண்டு சேர்க்க அர்ப்பணிப்புடன் செயற்படுமாறும், அனைத்து ஊடக செயலாளர்களிடமும் கோரிக்கை விடுத்தார்.   அரச தொடர்பாடல் பொறிமுறை தொடர்பில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் … Read more

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக விசேட குழுவின் மூலம் இறுதித் தீர்மானம் – கடற்றொழில் அமைச்சர்

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட முல்லைதீவு மாவட்ட கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக ஆராய்வதற்காக விசேட குழுவினை அனுப்பி குறித்த குழுவின் பரிந்துரைக்கு அமைய எதிர்வரும் 12 ஆம் திகதி இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் முன்னிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு தரப்புக் கடற்றொழிலாளர்களினதும் பிரதிநிதிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடிய போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பாகவும் சுருக்கு வலைத் தொழிலை மேற்கொள்வது தொடர்பாகவும் இரண்டு … Read more

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது அமர்வு நேற்று (06) ஆரம்பமானது. பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் தற்போது இடம்பெறுகின்றது. எதிர்வரும் 8 ஆம் திகதி வரை மூன்று நாட்களில் எட்டு அமர்வுகளாக இடம்பெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு விழாவில் 2,378 பேர் பட்டங்களையும் தகைமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வட மாகாண ஆண்களுக்கான மென்பந்தாட்ட துடுப்பாட்ட போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட அணி

வட மாகாண ஆண்களுக்கான மென்பந்தாட்ட துடுப்பாட்ட போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட அணி முதலாம்  இடத்தை பெற்றுக் கொண்டது. மன்னாரில் (02) நடைபெற்ற போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட அணி கால் இறுதி போட்டியில் யாழ் மாவட்ட அணியை வெற்றி கொண்டு, அரையிறுதியில் மன்னார் மாவட்ட அணியை வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்கு தெரிவாகி, கிளிநொச்சி மாவட்ட அணியை வெற்றி கொண்டு 1 ஆம் இடத்திற்கு தெரிவாகியுள்ளது. இதன்போது முல்லைத்தீவு மாவட்ட அணி யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி ஆகிய மூன்று மாவட்டங்களுடனும் … Read more

சந்தை தொடர்பை உருவாக்கும் நிகழ்ச்சித் திட்டம் – 2022

சந்தை தொடர்பை உருவாக்கும் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று (07) யாழ்.மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.  இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் USAID SCORE PROJECT நிறுவனத்தின் நிதி அனுசரணையில் சர்வோதய நிறுவனத்தின் பங்களிப்பில் இந்த நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  USAID நிறுவனத்தின் ஆறு இலட்சம் பெறுமதியான நிதியுதவியை பெற்று யாழ்.மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 06 சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் … Read more

முல்லைத்தீவு மாவட்ட நுகர்வோர் அதிகார சபையால் கடந்த மாதம் 36 வழக்குகள் பதிவு

முல்லைத்தீவு மாவட்ட நுகர்வோர் அதிகார சபை கடந்த மாதத்தில் மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கைகளின் அடிப்படையில் 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட இணைப்பதிகாரி த.வசந்தசேகரம் தெரிவித்துள்ளார். பொருட்களின் விலையை மாற்றியமைத்து புதிய விலையில் விற்பனை செய்தமை தொடர்பில் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை மற்றும் குறித்த பொருட்களை காட்சிப்படுத்தாமை தொடர்பில் 21 வழக்குகளும், அத்தியாவசிய பொருட்களின் விலையினை வெளிக்காட்டாது விற்பனை செய்தமை … Read more