இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தார்
இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவர் பொனீ ஹோர்பக் (Bonnie Horbach) அவர்கள் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை நேற்று (05) பாராளுமன்றத்தில் சந்தித்திருந்தார். பாராளுமன்ற பணியாட்கள் தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீரவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார். நெதர்லாந்தின் அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பெறுமதிமிக்க உள்நாட்டு தொல்பொருட்களை நல்லெண்ண அடையாளமாக இலங்கைக்கு திருப்பி வழங்கும் நோக்கத்தை தூதுவர் இதன்போது தெரிவித்தார். இரு நாடுகளுக்குமிடையிலான சுற்றுலாத்துறை அபிவிருத்தி வாய்ப்புக்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இதேவேளை, பல்வேறு துறைகளில் … Read more