சதொசவில் சில பொருட்களின் விலைகள் குறைப்பு

இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை நாட்டரிசி, சிவப்பு பருப்பு, வெள்ளை சீனி மற்றும் நெத்தலி போன்ற பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சதோச நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். இந்த விலை குறைப்பு இன்று முதல் அமுல்படுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். 210 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட வெள்ளை பச்சை அரிசி ஒரு கிலோ 185 ரூபாவாக விலை குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று 200 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட இறக்குமதி வெள்ளை நாட்டரிசி 194 ரூபாவாகவும் சிவப்பு பருப்பு ஒரு … Read more

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் குறித்து அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ சபையினால்; அனுமதி வழங்கப்பட்ட பின்னர் இறுதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார். அனைத்துக் கட்சிகளைக் கொண்ட தேசிய சபையை நியமித்த பின்னர் ஒப்பந்தம் குறித்த கொள்கையை தேசிய சபைக்கு முன்வைக்க எதிர்பாரத்திருப்பதாகவும் அமைச்சர் மேலும் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எலிஸபெத் மகாராணியின் மறைவுக்கு இலங்கைப் பாராளுமன்றத்தில் இரங்கல்

பாராளுமன்றத்தில் இன்று (09) பொதுநலவாய நாடுகளின் அமைப்பின் தலைவி என்ற வகையில் இரண்டாவது எலிஸபெத் மகாராணியின் மறைவுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரதமர் தினேஷ் குணவர்தன: தனது 96 வயதில் மறைந்த அவரை பாராளுமன்றத்தில் நினைவு கூறுவதற்காக விசேட தினமொன்றை ஒதுக்கித் தருமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன ஆளும் கட்சி மற்றும் எதிர்ககட்சி சார்பாக சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல: தனது 96 வயதில் மறைந்த இரண்டாவது எலிஸபெத் தந்தையின் … Read more

2 வீதமானோர் கூட வரி செலுத்துவது இல்லை

நாட்டின் மொத்த சனத்தொகையில் 2 வீதமானோர் நேரடி வரியை செலுத்துவது இல்லை என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (8) விசேட அறிக்கை ஒன்றை விடுத்து அமைச்சர் இதனை தெரிவித்தார். வரி பின்னல் அமைப்பை விரிவுப்படுத்தலின் ஊடாக நேரடி வரிகளை அதிகரித்து , மறைமுக வரிகளைக் குறைக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். தற்பொழுது  இறைவரி திணைக்களத்தில் வரி கோப்புக்கள் பல உண்டு. இதுவரையில் பதிவு செய்யப்பட்டுள்ள வரி கோப்புக்களின் எண்ணிக்கை 68 … Read more

பால்மோரல் கோட்டைக்கு வெளியே மக்கள் அஞ்சலி

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணத்தைத் தொடர்ந்து பால்மோரல் கோட்டைக்கு வெளியே பொதுமக்கள் மலர்கள் வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர். எலிசபெத் மகாராணி தனது இறுதிமூச்சை விட்ட ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டைக்கு வெளியே ஏராளமான பொதுமக்கள் மலர்கள் வைத்து இவ்வாறு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் நேற்று (08) காலமானார் என்பது குறிப்பிட்டார்.

இங்கிலாந்தின் புதிய மன்னர் சார்ல்ஸ்

இளவரசர் 3 ஆம் சார்ல்ஸ் (Charles III) இங்கிலாந்தின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து ராணி 2 ஆம் எலிசபெத் காலமானதையடுத்து இங்கிலாந்தின் புதிய மன்னராக இளவரசர் 3 ஆம் சார்ல்ஸ்  (Charles III) அரியணை ஏறியுள்ளார். சார்ல்ஸ் பிலிப் அர்துர் ஜார்ஜ் என்ற இயற்பெயர் கொண்ட 3 ஆம் சார்ல்ஸ்  காலமான  2 ஆம் எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார். 73 வயதான சார்ல்ஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அரியணை ஏறும் விழா விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மன்னராக … Read more

இரண்டாம் எலிசபெத் மகாராணி நேற்று காலமானார்

பிரிட்டனின் இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது 96ஆவது வயதில் காலமானார். பிரிட்டனின் 70 ஆண்டு முடியாட்சியை மேற்கொண்ட மகாராணி இரண்டாம் எலிசபெத் ,நேற்று (08) காலமானார். இறக்கும் போது அவருக்கு 96 வயது. லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில், ராணியின் உடல்நிலை குறித்த அறிவிப்புகளுக்காகக் காத்திருந்த மக்கள், அவரது மரணத்தைக் கேள்வியுற்றதும் அவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர் இந்நிலையில் அரண்மனையின் உச்சியில் இருந்த யூனியன் கொடி பிரிட்டன் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 6.30 மணிக்கு அரைக்கம்பத்தில் பறக்க … Read more

மகாராணியின் மறைவுக்கு ஜனாதிபதி அனுதாபம் தெரிவிப்பு

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு , ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகளின் தலைவரும், 1952-1972 வரை இலங்கை ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு தொடர்பில் இங்கிலாந்து அரச குடும்பம், மற்றும் இங்கிலாந்து மக்களுக்கு ஜனாதிபதி ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளார். இதேவேளை ,இலங்கையின் கடைசி மகாராணியாக பதவி வகித்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று (09) முதல் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் … Read more