37 இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் 37 இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர். பதியேற்ற புதிய இராஜாங்க அமைச்சர்களின் விபரம் பின்வருமாறு: 01. ஜகத் புஷ்பகுமார – வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர்02. ரஞ்சித் சியபலாபிட்டிய – நிதி இராஜாங்க அமைச்சர்03. லசந்த அழகியவன்ன – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்04. திலும் அமுனுகம – முதலீடு மற்றும் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்05. கனக ஹேரத் – தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர்06. ஜானக வக்கும்புர – மாகாண சபைகள் … Read more

“பாராளுமன்ற சார சங்ஹிதா” புலமை இலக்கிய நூலின் இலத்திரனியல் பிரதி பாராளுமன்ற இணையத்தளத்தில்

பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் “பாராளுமன்ற சார சங்ஹிதா” புலமை இலக்கிய நூலின் இலத்திரனியல் பிரதி பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. https://www.parliament.lk/ta/secretariat/academic-journal எனும் இணைப்பின் ஊடாக “பாராளுமன்ற சார சங்ஹிதா” புலமை இலக்கிய நூலின் முதலாவது மற்றும் இரண்டாவது தொகுப்பை பார்வையிட முடியும். சட்டவாக்க செயற்பாடுகள், நிலைபேறான அபிவிருத்தி, தேர்தல் முறைமை மற்றும் அதன் திருத்தங்கள், பாராளுமன்ற அறிக்கையிடலும் வெகுஜன ஊடகமும், பொதுமக்கள் தொடர்பு மற்றும் இலங்கை பெண்கள் அரசியலில் புதிய போக்கு ஆகிய … Read more

பொருளாதார நெருக்கடி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தல்…..

நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியின் பாரதூரமான நிலைமை தொடர்பில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் தெளிவுபடுத்த அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைமையின் கீழ் தொடர் நிகழ்ச்சித்திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என குழுவின் உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டுள்ளது. அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா தலைமையில் நேற்றுக் (06) கூடியபோதே இவ்வாறு முன்மொழியப்பட்டது. இதில் கடந்த யூலை 27ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட “ 2022ஆம் ஆண்டின் அரையாண்டு … Read more

கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் முடிவுக்கு வரும்

நாட்டில் நிலவும் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் முடிவுக்கு வரும் என நம்புவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். கோதுமை மாவுக்கான தீர்வாக துருக்கியில் இருந்து கோதுமை மாவை இறக்குமதி செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய கிண்ண ரி 20 கிரிக்கெட் சூப்பர் 4 போட்டி: இலங்கை அணி வெற்றி

இந்தியாவிற்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் இலங்கை அணி வெற்றி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆசிய கிண்ண ரி 20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் டுபாயில் நேற்று (6) நடைபெற்ற சூப்பர் 4 பிரிவு ஆட்டத்தில் இந்தியாஇ இலங்கை அணிகள் விளையாடின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படிஇ முதலில் துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் … Read more

சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான மழை வீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு ,தேசியவளி மண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 செப்டம்பர்07ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு2022 செப்டம்பர்07ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும்வடமேல் மாகாணங்களில் பலதடவைகள்மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, களுத்துறை,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை … Read more