சீனாவில் நிலநடுக்கம் – 46 பேர் உயிரிழப்பு

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று (5) பகல் 12.25 மணியளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தினால் 46 பேர் இது வரையில் உயிரிழந்துள்ளனர்.   சீனா லுடிங் நகரில் இருந்து 39 கிலோமீட்டர் தொலைவை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள பல்வேறு கட்டிடங்கள் அதிர்ந்துள்ளமையினால் மக்கள் பாதுகாப்பு கருதி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில், நிலநடுக்கத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். … Read more

இந்தியாவில் புதிதாக 4,417 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,417 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை இந்திய மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4 ஆயிரத்து 417 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 44 இலட்சத்து 66 ஆயிரத்து 862 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 23 … Read more

சுரேஷ் ரெய்னா, கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு

ஐ.பி.எல் வரலாற்றில் மிகவும் திறமையான துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா இந்திய ரி 20 லீக் மற்றும் நடைபெறும் பிற உள்நாட்டுப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஐ.பி.எல் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர்களில் ஒருவரான இவர், பல ஆண்டுகளாக சி.எஸ்.கே அணிக்கு சிறந்த துடுப்பாட்ட வீரராக இருந்தவர். அவர் 205 ஐ.பி.எல் போட்டிகளில் 32.5 சராசரி மற்றும் 136.7 ஸ்ட்ரைக் ரேட்டில் 5528 ஓட்டங்களை தனதாக்கியுள்ளார். இவர் 2020 ஆம் ஆண்டு … Read more

ஆசிய வெற்றிக்கிண்ண கிரிக்கெட் சூப்பர் 4 : இலங்கை – இந்திய அணிகளுக்கான போட்டி இன்று

ஆசிய கிண்ண ரி20 கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 போட்டிapy; இன்று இலங்கை, இந்திய அணிகள் போட்டியிடவுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய அணிகள் இடையே சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இந்நிலையில், இலங்கை அணி இன்று இந்திய அணியை எதிர்கொள்கிறது. டுபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகின்றது. இதேவேளை ஆசியக் கிண்ண ரி20 தொடரின் … Read more

பெட்ரோலிய கூட்டுத்தாபனம் குறித்து எரிசக்தி அமைச்சர்

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான பொறுப்பை எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் நிதியமைச்சு மற்றும் அது தொடர்பான அதிகாரிகளிடம் கையளிக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.   இன்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்… ‘மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு வழங்கும் பரிந்துரைகளுக்கு அமையவே நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். இன்று உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறையும் … Read more

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் – பிரதமர்

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னேவுக்கு ,பிரதமர் தினேஷ் குணவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை திட்டமிடுமாறு நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அமைச்சின் செயலாளர் மாயாதுன்ன பணிப்புரை விடுத்துள்ளார். மேலும் கடந்த இரண்டு நாட்களில் சீரற்ற காலநிலை தொடர்பான சம்பவங்களில்  இருவர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“ELLA ODYSSEY” ரயில் : மேலும் இரண்டு புதிய சேவைகள்

மலையக ரயில் பாதையினூடாக வார இறுதியில் சேவையில் ஆடுபடும் “ELLA ODYSSEY”  ரயில், எதிர்வரும் 8 ஆம் திகதி முதல், தற்போதைய ரயில் சேவைக்கு மேலதிகமாக இன்னும் இரண்டு ரயில் சேவைகளை மேற்கொள்ள உள்ளதாக ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர் டி. எஸ். பொல்வத்தகே அறிவித்துள்ளார். உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கைக்கு அமைய ஒவ்வொரு வியாழன் தோறும் கொழும்பில் இருந்து பதுளை வரையிலும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பதுளையிலிருந்து கொழும்பு வரையிலும் இந்த ரயில் சேவைகள் இடம்பெறும். இதற்கான ஆசன … Read more

மட்டக்களப்பில் மாபெரும் தொழிற் சந்தை

மட்டக்களப்பு மாவட்ட செயலக தொழில் நிலையம், மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம் ஆகியன இணைந்து ,மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கே.கருணாகரனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக ஏற்பாடு செய்துள்ள 2022 ஆம் ஆண்டிற்கான மாபெரும் தொழிற் சந்தையொன்று எதிர்வரும் சனிக்கிழமை (10) திகதி மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில் இடம்பெறவுள்ளது. மு.ப. 09.00 மணி முதல் இடம்பெறவுள்ள தொழிற்சந்தையில் பல தொழில் வழங்கும் தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ளவுள்ளன.

வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

மத்திய மாகாணத்தில் தவுலுகலயில் யாலேகொட என்ற இடத்தில் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (5) இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட கடும் மழையே இதற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலத்த காயங்களுக்கு உள்ளான இவர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். யாலேகொடயை சேர்ந்த 39 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக தவுலுகல பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

22 ஆவது திருத்த மூலத்தில், சில சரத்துக்கள் அரசியல் யாப்புக்கு  முரண்பாடு

உத்தேச 22 ஆவது  திருத்த மூலத்தில் ,சில சரத்துக்கள் அரசியல் யாப்புக்கு முரண்பாடானது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இருப்பினும், பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்புடன் இதனை நிறைவேற்ற முடியும் என்று உயர் நீதிமன்றம் அர்த்தப்படுத்தி இருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.