அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பான சுற்றுநிருபம்………

அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பாக ,பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம். பீ. கே. மாயாதுன்ன புதிய சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கமைவாக தற்போது நடைமுறையிலுள்ள ஓழுங்கு விதிகள் மேலும் ஒருமாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். அரச ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிப்பதில் எதிர் நோக்கப்படும் சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள … Read more

ஜனாதிபதி மாளிகை ,அலரிமாளிகைக்கு சேதம்:தொல்பொருள் திணைக்களம் விசாரணை

கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரிமாளிகைக்கு ஏற்பட்டிருக்கும் சேத விபரம் தொடர்பில் முழுமையான விசாரணை இடம்பெறுவதாக தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்காக இரண்டு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறித்த அலுவலகங்களில் உள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருப்பது அடையாளங் காணப்பட்டுள்ளது . இந்தப் பொருட்களில் சில  திருடப்பட்டுள்ளன. பொதுச் சொத்து மற்றும் தேசிய மரபுரிமைகளுக்கு உட்படும் இடங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதும் அங்குள்ள பொருட்களைத் திருடுவதும் தண்டனைக்குரிய பாரிய குற்றமாகும்.

கலிபோனியாவில் காட்டுத் தீ: அவசரநிலை பிரகடனம்

கலிபோனியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு காட்டுத்தீ விரைவாகப் பரவி வருவதை அடுத்தே அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாக கலிபோனிய நிர்வாகம் அறிவித்துள்ளது. 12 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி காட்டுத் தீயினால் தீக்கிரையாகியுள்ளது. மேற்கத்திய நாடுகளில் கடந்த சில தினங்களாக அதிக வெப்பம் நிலவுகிறது. இதனால் வீதி சமிக்ஞை விளக்குகளும் விமான நிலைய ஓடுபாதைகளும் உருகியுள்ளன. பொதுவாக அமெரிக்காவில் ஜூலை மாதத்திற்கு பின் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத் தீ ஏற்படுவது வழக்கம். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஏற்படும் காட்டுத் தீ … Read more

QR குறியீட்டு முறையின் கீழ் எரிபொருள் விநியோகம்

வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குரிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகிக்கப்படுகின்றது. இறுதி இலக்கமான 3, 4, 5 ஆகிய இலக்கங்களைக் கொண்ட வாகனங்களுக்கு இன்று (24) எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை,  QR குறியீட்டு முறைமையின் பிரகாரம் 4,700ற்கு மேற்பட்ட வாகனங்களுக்கு நேற்று (23) எரிபொருள் விநியோகிக்கப்பட்டதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

முக கவசம் அணிவது அவசியம்

தற்போது பரவி வரும் புதிய வகையான வைரஸை கண்டுபிடிப்பதற்கு மிகவும் சிரமம் என்பதாலும், உயிருக்கு ஆபத்து என்பதாலும் மக்கள் அவசியம் முக கவசங்களை அணிய வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இது டெல்டா வைரசை விட ஐந்து மடங்கு சக்தி வாய்ந்ததாகும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார். மூட்டு வலி, தலைவலி, கழுத்து வலி, முதுகின் மேல் பகுதியில் வலி, நிமோனியா என்பன இதன் அறிகுறிகளாகும். குறுகிய காலத்திற்குள் இந்த நோயின் … Read more

விசேட டெங்கு ஒழிப்பு தினம் நாளை  

விசேட டெங்கு ஒழிப்பு தினமாக நாளை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது டெங்கு தொற்று அதிகளவில் பரவும் அபாயம் நிலவுகிறது. இதனால் விசேட டெங்கு ஒழிப்பு தினம் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.   2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 43,000க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார். ஜூலை 21ஆம் திக தி  வரை 8,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்நிலை நீடித்தால் டெங்கு நோய்  வேகமாக … Read more