பிரதமரை பதவியில் இருந்து நீக்க முடியாது – ஜனாதிபதி அறிவிப்பு

சகலரையும் ஒன்றிணைத்து அரசாங்கத்தை அமைக்கத் தயார் எனவும், ஆனால் பிரதமரை பதவியில் இருந்து நீக்க முடியாது எனவும், அவ்வாறு செய்வது நாட்டை சீர்குலைத்து பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 11 சுயேச்சைக் கட்சிகளுடன் நேற்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். பிரதமரை நீக்கினால் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய சர்வதேச உதவிகள் கிடைக்காமல் போகும் அபாயம் காணப்படுவதாக ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு, அது … Read more

சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஏப்ரல்30ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 30ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது … Read more

காங்கேசந்துறை – பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 30ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான ஆழம் குறைந்த மற்றும் ஆழம் கூடிய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மே 01 ஆம் திகதியிலிருந்து அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட … Read more

மூன்றாம் திகதி விழிப்புடன் இருக்கவும்! அனுர எச்சரிக்கை (Photo)

மக்கள் விடுதலை முன்னணியின்  தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க  எதிர்வரும் மூன்றாம் திகதி இரகசிய ஆவணங்கள் சிலவற்றை வெளியிடப்போவதாக  சிங்கள ஊடகம் ஒன்று செய்தி  வெளியிட்டுள்ளது.  ராஜபக்ச குடும்பம் மற்றும் அமைச்சர்களின் ஊழல் மோசடிகள்  தொடர்பான கோப்புக்களை பொதுமக்களிடம் அவர் முன்வைக்கவுள்ளதாக அவர் இதற்கு முன்னர் அறிவித்திருந்தார்.  இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் இது குறித்த பதிவொன்றையும் அவர் இட்டுள்ளார்.  குறித்த பதிவில் ‘உரிமையாளர்களும் கோரியவர்களும் மே 03ஆம் திகதி விழிப்புடன் இருக்கவும்’ என … Read more

29.04.2022 அன்று, வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால்  29.04.2022 அன்று வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:     இலங்கை மத்திய வங்கியினால்  29.04.2022 அன்று வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:    

IMF முடிவால் திண்டாடும் இலங்கை! மறைக்கப்படும் மக்களுக்கான கடைசி சந்தர்ப்பம் (VIDEO)

சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகள் பெரும்பாலும் அந்த நாட்டினுடைய பெரும்பாலான மக்களை சந்தோசப்படுத்துவதாக நிச்சயம் இருக்க முடியாது என கலாநிதி கணேசமூர்த்தி பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் (கொழும்பு பல்கலைகழகம்) தெரிவித்துள்ளார்.S லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி, சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு வார்தை்தையின் போது முக்கியமாக கடன்களை மீள சீரமைத்துவிட்டு,கடன் வழங்கியவர்களிடம் … Read more

தொழில் முயற்சிகளில் ஈடுபடவிரும்பும் வெளிநாடுகளிலுள்ள, இலங்கையருக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும்

தொழிற்பேட்டைகள், வர்த்தக மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் என்பனவற்றை மேற்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடவிரும்பும் வெளிநாட்டுகளிலுள்ள இலங்கையர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும். இதற்காக மாகாண சபை, பிரதேச சபை மூலம் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க கூறினார். கொழும்பில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இராஜாங்க அமைச்சர் இதுதொடர்பாக  மேலும் தெரிவிக்கையில், நாடு இன்று எதிர் நோக்கியுள்ள டொலர் பிரச்சினைக்கு தீர்வாக வெளிநாட்டில் பணியாற்றுபவர்கள் டொலரினை இலங்கைக்கு அனுப்புவதனை ஊக்குப்படுத்தும் வகையில் அரச அதிகாரிகள் … Read more

கொழும்பில் நாளை வன்முறைகள் வெடிக்கும் அபாயம் – அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை

கொழும்பில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு முன்னதாக இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஆர்ப்பாட்ட எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டின் பொருளாதார நிலைமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மே முதலாம் திகதியான நாளை கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டங்கள் கொழும்பிற்கு பயணித்தல், கொழும்பில் இருந்து பயணித்தல், கொழும்பிற்குள் பயணித்தல் போன்ற அனைத்தையும் ஏனைய பயணங்களை மிகவும் கடினமாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாள் … Read more