இன்ஸ்டாகிராமாக மாறும் வாட்ஸ்அப்! மொபைல் எண்ணை தெரிவிக்காமலேயே செய்தி அனுப்புவது எவ்வாறு?

கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சர்வதேச தகவல் தொடர்பு செயலியாக வாட்ஸ்அப் பயன்படுகிறது. தகவல் தொடர்பு சுலபமாக மாறியதில், வாட்ஸ்அப் செயலிக்கும் கணிசமான பங்கு உண்டு. முதலில் தகவல்களை சுருக்கமாக பகிர்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ்அப், தற்போது வேலையையும் சுலபமாக்கிவிட்டது. வாட்ஸ்அப் பயனர்களே எதிர்பார்க்காத புதுப்பிப்புகள், புதுப்புது வசதிகளை நிறுவனம் அடிக்கடி பல அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. தற்போது வெளியாகியிருக்கும் புதிய அறிவிப்பு,  வாட்ஸ்அப் செயலியும் இன்ஸ்டாகிராமில் உள்ள பல்வேறு வசதிகளையும் பெறலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை பயனர்களுக்குக் கொடுத்துள்ளது. இந்த புதிய … Read more

உலகின் நம்பர் ஒன் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ! சீனாவுக்கும் டஃப் ஃபைட் கொடுத்த முகேஷ் அம்பானி!

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, உலகின் நம்பர் 1 தொலைதொடர்பு நிறுவனம் என்ற அந்தஸ்தை எட்டிவிட்டது. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உலக அளவில் சீன நிறுவனங்களை பின்னுக்கு தள்ளியுள்ளது. டேட்டா பயன்பாட்டில் இதுவரை இருந்துவந்த அனைத்து சாதனைகளையும் முறியடித்து நம்பர் 1 ஆனது எப்படி? விரிவாக தெரிந்துக் கொள்வோம். தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஆசியாவின் பணக்கார தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. டேட்டா … Read more

போன் திருடு போய்விட்டதா… அதில் பதிவாகியுள்ள UPI IDஐ நீக்குவது எப்படி..!

ஸ்மார்ட்போன் திருடு போய் விட்டால், ஏற்படும் பொருள் நஷ்டம் ஒரு புறம் இருக்க, ஸ்மார்போன் என்பதை பர்ஸை போல் பண பரிவர்த்தனைக்காக பயன் படுத்தப்படுவதால், அதில் பதிவாகியுள்ள யுபிஐ ஐடி மூலம், சைபர் மோசடிக்கு பலியாகும் வாய்ப்பு உள்ளது. அது தவிர ஸ்மார்ட் போனில் நமது முக்கியமான ஆவணங்கள், புகைப்படங்கள், வங்கித் தகவல்கள் ஆகியவை இருப்பதால், பாதுக்காப்பு அச்சுறுத்தல் உள்ளது என்பதை மறுக்க இயலாது.  இந்நிலையில், போன் திருடு போன நிலையில், அதில் பதிவாகியுள்ள உங்கள் UPI … Read more

நீதா அம்பானியிடம் ரூ.90 கோடி மதிப்பிலான ஆடி கார்… தீயாய் பரவும் தகவல்… உண்மை என்ன..!!

மும்பையில் ஜாம்நகரில் ஆடம்பரமாக மூன்று நாள் நடைபெற்ற முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமண விழா தான் கடந்த சில நாட்களாக பேசு பொருளாக இருந்து வருகிறது. முகேஷ் அம்பானியின் மனைவியும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனருமான நீதா அம்பானி சமீபத்தில் நடந்த தனது இளைய மகன் ஆனந்தின் திருமண விழாவில், தனது சிறப்பான ஆடை அலங்காரம்  மூலம் அனைவரையும் ஈர்த்து வந்தார். இந்நிலையில், ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் … Read more

Bajaj CNG பைக்… ₹1200 EMI செலுத்தி வாங்கினால் பெட்ரோல் செலவும் மிச்சம்..!!

Bajaj Freedom 125 CNG Bike: நாட்டின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ உலகின் முதல் CNG பைக்கான பஜாஜ் ஃப்ரீடம் பைக்கை இந்த மாத தொடக்கத்தில் அறிமுகம் செய்தது. இந்த பைக்கை ப்யன்படுத்துவதால், தினசரி எரிபொருள் செலவு தோராயமாக 50% குறையும் என நிறுவனம் கூறுகிறது. இதன் மூலம், 5 ஆண்டுகளில் தோராயமாக ரூ.75,000 சேமிக்கலாம் எனக் கூறுகிறது பஜாஜ் ஆட்டோ நிறுவனம். பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி விலையில் சுமார் ரூ.25 … Read more

அமேசான் பிரைம் டே சேல்…சோனி முதல் சாம்சங் வரை.. 45% தள்ளுபடியில் 42 இன்ச் டிவி..!!

அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் சிறப்பு சலுகை விற்பனைகளில் ஒன்றான அமேசான் பிரைம் டே 2024 விற்பனை (Amazon Prime Day 2024 Sale) தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சலுகை விற்பனை ஜூலை 20ஆம் தேதி தொடங்கி ஜூலை 21ஆம் தேதி வரை நடைபெறும். அமேசானின் சலுகை விற்பனையில் பல விதமான பொருட்கள் மற்றும் எலக்ட்ரிக் சாதனங்களை நீங்கள் மிக குறைந்த விலையில் வாங்க வாய்ப்பு. சலுகை விற்பனை தினங்களில் பிரபலமான ஸ்மார்ட்போன்கள் மற்றும் … Read more

“சிக்கலுக்கு தீர்வு காண பணியாற்றி வருகிறோம்” – விண்டோஸ் செயலிழப்பு குறித்து சத்யா நாதெள்ளா

ரெட்மாண்ட்: கிரவுட்ஸ்ட்ரைக்கின் தவறான அப்டேட் காரணமாக உலகம் முழுவதும் விண்டோஸ் கணினிகள் செயலிழந்தன. இதன் காரணமாக உலகெங்கிலும் உள்ள விமானப் போக்குவரத்து, வங்கி, தொலைத்தொடர்பு, ஊடக நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் செயல்பாடு முடங்கி உள்ளது. இந்த சூழலில் மைக்ரோசாப்ட் சிஐஓ சத்யா நாதெள்ளா ட்வீட் செய்துள்ளார். கிரவுட்ஸ்ட்ரைக்கின் Falcon சென்சருக்கான அப்டேட் காரணமாக இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த தவறான அப்டேட் தற்போது திரும்பப்பெறப் பட்டுள்ளது. இருந்தாலும் ப்ளூ ஸ்க்ரீன் எரர் சிக்கலை எதிர்கொண்ட கணினி … Read more

மைக்ரோசாப்ட் விண்டோஸ் செயலிழப்பு – ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ சிக்கலும், சில புரிதல்களும் | HTT Explainer

புதுடெல்லி: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் முடங்கியதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. சாப்ட்வேர் அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்தான் கோளாறு ஏற்படுவதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இதனால், விண்டோஸ் பயனர்களின் சிஸ்டம்களில் ப்ளூ ஸ்க்ரீன் எரர் ‘Blue Screen of Death (BSOD)’ எனக் காண்பிக்கிறது. மேலும், அதில், ‘உங்கள் கணினியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். நடந்த தவறு தொடர்பான தரவுகளை சேகரித்து வருகிறோம். அதன்பின்னர், ரீஸ்டார்ட் செய்வோம்’ என … Read more

செவ்வாய் கிரகத்தின் மிகப் பெரிய ரகசியத்தை கண்டறிந்த கியூரியாசிடி ரோவர்! கந்தகத்தில நாத்தமே இல்ல???

சிவப்பு கிரகமான செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வரும் கியூரியாசிடி ரோவர் தற்போது அந்த கிரகத்தின் Gediz Vallis சேனலை ஆராய்ந்து வருகிறது, 5-கிலோமீட்டர் உயரமான மலையில் உள்ள ஒரு பள்ளம். அதிலுள்ள ஒவ்வொரு அடுக்கும் செவ்வாய் கிரகத்தை பற்றிய ரகசியங்களை புதைத்து வைத்துக் கொண்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் வெவ்வேறு காலகட்டத்தைக் குறிக்கும் இந்த மலையை ஆராய்ந்தால் செவ்வாய் கிரகத்த்தைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துக் கொள்ளலாம்.   நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் பல கண்டுபிடிப்புகளை செய்துள்ள நிலையில், … Read more

உங்கள் மைக்ரோசாப்ட் செயலிழந்து விட்டதா… சரி செய்வது எப்படி..!!

மைக்ரோசாஃப்ட் செயலிழப்பு: உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் சேவைகளில் பெரும் இடையூறுகள் காணப்பட்ட நிலையில், மைக்ரோசாப்ட் 365 பயன்பாடுகள் மற்றும் சேவைகள் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதனால், உலகம் முழுவதும் விமான நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செயல்பாடுகள் என பல நிறுவனங்கள் முடங்கின. இணைய பாதுகாப்பு கம்பெனியான கிரவுட்ஸ்டிரைக்கில் ( CrowdStrike) ஏற்பட்ட பாதிப்பு ஒன்றின் காரணமாக மைக்ரோசாப்ட் முடங்கியுள்ளதால், அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ், அலெஜியன்ட் ஏர் ஆகியவை தங்கள் … Read more