ஹோண்டாவின் `எலவேட்' கார் அறிமுகம்
சென்னை: ஹோண்டா நிறுவனத்தின் எஸ்யுவி வகை `எலவேட்’ கார் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. ஹோண்டா நிறுவனம் சார்பில் எஸ்யுவி வகையிலான எலவேட் என்னும் கார் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஹோண்டா இந்தியா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு இயக்குநர் யூச்சி முராட்டா காரை அறிமுகம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஹோண்டாவுக்கு நம்பிக்கைக்குரிய இடமாக தமிழகம் விளங்கி வருகிறது. … Read more