ஜூலை 15-16 Amazon Prime Day Sale: ஏகப்பட்ட சலுகைகள்.. ஷாப்பிங்குக்கு ரெடியா?

அமேசான் ப்ரைம் டே விற்பனை: ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி!! அமேசான் தனது பிரைம் டே விற்பனையை (Amazon Prime Day sale) அறிவித்துள்ளது. இந்தியாவில் இந்த விற்பனை ஜூலை 15-16 தேதிகளில் நடைபெறும் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விற்பனையில் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்கள், உபகரணங்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், அணியக்கூடிய பொருட்கள், ஆடைகள் மற்றும் பிற பொருட்களுக்கு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளைப் பெறுவார்கள். வங்கி சலுகைகளைப் பொறுத்தவரை, அமேசான் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட்/டெபிட் … Read more

திடீரென பேஸிக் பிளானை ரத்து செய்து வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த நெட்ஃபிக்ஸ்!

கொரோனா காலத்துக்குப் பிறகு நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி நிறுவனங்களின் வளர்ச்சி அபாரமாகிவிட்டது. அமேசான், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட நிறுவனங்கள் ஓடிடியில் உலகளவில் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன. மற்ற நிறுவனங்களின் வருகை நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு பாதிப்பை உருவாக்கியுள்ளது. அதனால் அந்த நிறுவனம் பல மறுசீரமைப்புகளை செய்து வருகிறது. அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப பிளான்களையும் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் புதிய பிளான்கள் அறிமுப்படுத்தப்பட்டு வருகிறது.  இப்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் அடிப்படை பிளான் ஒன்றை நீக்கியிருக்கிறது. … Read more

இந்திய சாலைகளில் 22 ஆண்டுகால பயணம்: 3 கோடிக்கும் மேற்பட்ட ‘ஆக்டிவா’ ஸ்கூட்டர்கள் விற்பனை!

சென்னை: இந்திய இருசக்கர வாகன சந்தையில் 22 ஆண்டுகால பயணத்தை கொண்டுள்ளது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர். கடந்த 2001-ம் ஆண்டு இந்த ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகமானது. அந்த நாள் முதல் இந்த நாள் வரையில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. விற்பனையில் இந்த மைல்கல் சாதனை குறித்த தகவலை ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) நிறுவனம் பகிர்ந்துள்ளது. ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ், டிவிஎஸ் ஜூபிடர், சுசுகி … Read more

உலகின் மிகப்பெரிய ஐபோன்: ஐஓஎஸ் அம்சங்களுடன் 8 அடி அளவில் வடிவமைத்த யூடியூபர்!

நியூயார்க்: உலகின் மிகப்பெரிய ஐபோனை வடிவமைத்துள்ளார் மேத்யூ பீம் எனும் யூடியூபர். இந்தப் பணியில் அவரது குழுவினர் அவருக்கு உதவியுள்ளனர். ஐஓஎஸ் அம்சங்களுடன் 8 அடி அளவில் இந்த ஐபோனை அவர் வடிவமைத்துள்ளார். தற்போது சந்தையில் கிடைக்கும் ஐபோன்களில் 6.7 இன்ச் கொண்ட ஐபோன் புரோ மேக்ஸ் மாடல் போன்கள் தான் ஆப்பிள் நிறுவன தயாரிப்பின் பெரிய போன்களாக உள்ளன. ஆப்பிள் தரப்பில் மினி சைஸ் போன்களுக்கு கடந்த ஆண்டு ஐபோன் 14 சீரிஸ் போன்கள் அறிமுகம் … Read more

ஜூலை மாதம் 5 அட்டகாசமான 5G போன்கள் அறிமுகம்: பட்டியல் இதோ

ஜூலை 2023 இல் இந்தியாவில் அறிமுகம் ஆகவுள்ள 5G போன்கள்: ஜூலை மாதத்தில் பல ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. பல 5G போன்கள் அறிமுக வரிசையில் உள்ளன. சாம்சங் கேலக்சி எம்34 (Samsung Galaxy M34), நத்திங் போன் (2) ( Nothing Phone (2)), ஒன்பிளஸ் நார்ட் 3 ( OnePlus Nord 3), ஐக்யூ00 நியோ ப்ரோ (iQoo Neo 7 Pro) மற்றும் ரியல்மீ நார்ஸோ 60 (realme Narzo 60) சீரிஸ் … Read more

Flipkart-ல் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்: பழைய போன், டிவி, ஃப்ரிட்ஜ் விற்று சம்பாதியுங்கள்

பிளிப்கார்ட் நிறுவனம் வீட்டில் இருக்கும் உங்கள் பழைய பொருட்களை விற்பதற்கான சூப்பர் ஆபரை அறிவித்துள்ளது. இதில் உங்கள் வீட்டில் இருக்கும் பழைய எலக்ட்ரானிக் பொருள்களை விற்று அல்லது எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய பொருள்களை குறைந்த விலையில் வீட்டிற்கு கொண்டு வாருங்கள். வாடிக்கையாளர்கள் தாங்கள் ஏற்கனவே பயன்படுத்திய மின்னணு சாதனங்களான ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், டிவிகள், ஃப்ரிட்ஜ்கள் மற்றும் வாஷிங் மெஷின்கள் போன்றவற்றை எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ளலாம். இருப்பினும், செகண்ட் ஹேண்ட் பொருளின் மதிப்பை பிளிப்கார்ட் நிறுவனம் தான் முடிவு … Read more

சாம்சங்கின் சூப்பர் டூப்பர் 5ஜி ஸ்மார்ட்போன்! வியக்கவைக்கும் அம்சங்கள்

சாம்சங் நிறுவனம் Galaxy M வரிசையின் புதிய ஸ்மார்ட்போனை ஜூலை 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கு Galaxy M34 5G என்று பெயரிடப்பட்டுள்ளது. சாம்சங் சமீபத்தில் கைபேசியின் சில சிறந்த அம்சங்களையும் வெளியிட்டுள்ளது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) கொண்ட 50 மெகாபிக்சல் நோ ஷேக் கேமரா இந்த மொபைலில் இடம்பெற்றிருப்பது மிகவும் முக்கியமானது.  மேலும், கைபேசியில் 120Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இதைவிட கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தரமான … Read more

Nothing Phone (2): ப்ரீ ஆர்டரிலேயே ஏகப்பட்ட சலுகைகள், இந்த தேதியில் துவக்கம்

Nothing Phone (2) முன்பதிவு சலுகைகள்: ஸ்மார்ட்போன் பயனர்கள் Nothing Phone (2) ஃபோனுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த போனை நிறுவனம் ஜூலை 11 ஆம் தேதி அறிமுகம் செய்யும். இப்போது நிறுவனம் இந்த போனை வெல்லும் வாய்ப்பை வழங்குகிறது. அதாவது, நீங்கள் அதை வாங்க முன்பதிவு செய்தால், இந்த தொலைபேசியை இலவசமாகப் பெறலாம். இதற்கான வாய்ப்பை பெற, ரூ.2,000 -க்கு முன்பதிவு செய்ய வேண்டும். ப்ரீ ஆர்டர் ஜூன் 29 மதியம் 12 மணி முதல் … Read more

இந்தியாவில் வரும் ஜூலை 5-ம் தேதி அறிமுகமாகிறது ஒன்பிளஸ் நார்ட் சிஇ 3 ஸ்மார்ட்போன்!

சென்னை: இந்தியாவில் எதிர்வரும் ஜூலை 5-ம் தேதி ஒன்பிளஸ் நார்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் நார்டின் கோடை கால அறிமுகமாக இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனுடன் ஒன்பிளஸ் நார்ட் 3 5ஜி ஸ்மார்ட்போன், நார்ட் பட்ஸ் 2ஆர், BWZ2 ANC என மேலும் மூன்று சாதனங்கள் அறிமுகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை … Read more

லித்தியம்-அயன் பேட்டரி உருவாக்கிய ஜான் குட்இனஃப் காலமானார் – சாதனை நாயகனின் சரித்திரம்

நியூயார்க்: லித்தியம்-அயன் பேட்டரியை வடிவமைத்து, தொழில்நுட்ப உலகில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்களில் ஒருவர் ஜான் குட்இனஃப். 100 வயதான அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 25) காலமானார். கடந்த 2019-ல் வேதியியல் துறையில் நோபல் பரிசை அவர் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நமது அன்றாட வாழ்க்கையில் லித்தியம்-அயன் பேட்டரிகள் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கின்றன. கிட்டத்தட்ட இன்றைய டிஜிட்டல் யுகத்தை இயக்கும் சக்தி என்றும் இந்த பேட்டரிகளை சொல்லலாம். நாம் பயன்படுத்தி வரும் மொபைல் போன் தொடங்கி … Read more