Oppo Reno 7 Pro 5G விற்பனை இந்தியாவில் தொடங்கியது, முழு விவரம் இதோ

Oppo Reno 7 Pro 5G இன்று முதல் அதாவது பிப்ரவரி 7 முதல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த வாரம் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் இது சிறந்த அம்சங்களுடன் நிறுவனத்தின் முதன்மை ஸ்மார்ட்போன் ஆகும். இது 6.5-இன்ச் முழு HD + AMOLED டிஸ்ப்ளே மற்றும் MediaTek Dimensity 1200-Max செயலியில் வேலை செய்கிறது மற்றும் இதில் 12ஜிபி ரேம் உள்ளது. (5G Smartphone in India) இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்கும் … Read more

யூடியூப், ஜிமெயில் உள்ளிட்ட கூகுள் சேவைகள் முடங்கின; உலகளாவிய அளவில் பாதிப்பு

யூடியூப், ஜிமெயில் உள்ளிட்ட கூகுள் சேவைகள் தற்காலிகமாக முடங்கியுள்ளன. இதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. பிரபல வீடியோ தளமான யூடியூப், மின்னஞ்சல் சேவையான ஜிமெயில், கூகுள் டாக்ஸ், கூகுள் மீட், கூகுள் க்ளாஸ்ரூம் உள்ளிட்ட கூகுள் நிறுவனத்தின் சேவைகள் முடங்கியுள்ளன. சர்வதேச அளவில் பல பயனர்கள் இந்தப் பிரச்சினையைச் சந்தித்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) மதியத்தில் இருந்து கூகுளின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மாலையில் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பயனர்கள், தங்களால் மின்னஞ்சலை … Read more

இத உடனே பண்ணுங்க… இல்லனா உங்க போன் அவ்வளவுதான்!

ஸ்மார்ட்போனில் உள்ள செயலிகளின் பாதுகாப்பிற்காக இரண்டடுக்கு அங்கீகார பாதுகாப்பு முறையை ( 2FA ) பலர் பின்பற்றி வருகின்றனர். இதற்காக பல செயலிகள் கூகுள் ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது. இதில் முக்கியமானதாக சில செயலிகளை பயனர்கள் உபயோகித்து வருகின்றனர். மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை வழங்குவதாக இந்த செயலிகள் மீது பயனர்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால், தற்போது இந்த செயலிகளே, பயனர்களுக்கு எமனாக மாறியிக்கிறது. கூகுள் பிளே ஸ்டோரில் இரண்டடுக்கு அங்கீகாரம் தருவதாகக் கூறி மால்வேர் … Read more

Apple iPhone 13 வாங்க ஆசையா? Amazon, Flipkart இல் விலை மலிவானது

Flipkart நிறுவனம் ஆப்பிள் சாதனங்களின் தொடர்களில் எக்ஸ்சேஞ்ச் சலுகையை அவ்வப்போது வழங்குகிறது. Apple iPhone 13 Flipkart இல் ₹74,900க்கு விற்கப்படுகிறது, ஆனால், அதை ₹58,300 வரை வாங்கலாம். ஆம் Flipkart இணையதளத்திற்குச் சென்று, உங்கள் தற்போதைய மொபைலின் எக்ஸ்சேஞ்ச் மதிப்பைச் சரிபார்த்து, மலிவான விலையில் iPhone 13 ஐ வாங்கலாம். இதே போன்ற சலுகை Amazon இந்தியா இணையதளத்திலும் கிடைக்கிறது. அமேசான் ஸ்மார்ட்போன் மற்றும் டிவி அப்கிரேடு டேஸ் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் முழு … Read more

மோசமான டிஜிட்டல் பணியிடமாக ஸொமேட்டோ தேர்வு: தவறை ஏற்றுக்கொண்ட தலைமைச் செயல் அதிகாரி 

செயலிகளைச் சார்ந்து இயங்கும் பணிகளில், இந்தியாவிலேயே மிக மோசமான டிஜிட்டல் பணியிடமாக ஸொமேட்டோ நிறுவனம் தர மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முழு பொறுப்பு தன்னுடையது என்று ஏற்றுக்கொண்ட அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தீபிந்தர் கோயல் அடுத்த வருடம் இந்தச் சூழலை மேம்படுத்த சிறந்த முயற்சியைத் தருவோம் என்று கூறியுள்ளார். ஃபேர்வொர்க் இந்தியா என்கிற அமைப்பு டிஜிட்டல் தொழில்நுட்பத்தைச் சார்ந்து இயங்கும் பணியிடங்களைப் பற்றிய ஆய்வினைச் செய்துள்ளது. இதில் சிறந்த, மோசமானப் பணியிடங்கள் என்ற தரப்பட்டியலை வெளியிட்டுள்ளது. … Read more

ட்விட்டர் கணக்குகளை சரிபார்க்கும் புதிய முறை: ஜனவரி 20 முதல் தொடக்கம்

ஜனவரி 20 முதல் தங்கள் தளத்தில் புதிதாக சரிபார்க்கும் முறையும், விதிகளும் அமல்படுத்தப்படும் என்றும், சரிபார்க்கப்பட்ட (verified) கணக்குகள் முழுமையற்றோ, பயன்படுத்தப்படாமலோ இருந்தால் அதன் சரிபார்க்கப்பட்ட சின்னம் (badge) நீக்கப்படும் என்றும் ட்விட்டர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தப் புதிய விதிகளின் படி, மீண்டும் மீண்டும் அதிகமாக தங்களது தளத்தின் விதிகளை மீறிய கணக்குகளின் சின்னமும் நீக்கப்படும் என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது. “அது போன்ற கணக்குகளை ஒவ்வொன்றாக நாங்கள் ஆய்வு செய்வோம். எங்களது விதிகளை அமல்படுத்துவதற்கும், … Read more

ஜனவரி 1 முதல் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்குகளுக்கும் வாய்ஸ் கால் இலவசம்

ஜனவரி 1 (நாளை) முதல் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்குகளுக்கும் உள்நாட்டு வாய்ஸ் கால் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஏற்கெனவே இந்த வசதி இருந்துவந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இந்த சேவை ரத்து செய்யப்பட்டது. மாறாக ஒரு நிமிடத்திற்கு 6 பைசா வீதத்தில் மற்ற நெட்வொர்க் உள்நாட்டு வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) அறிவுறுத்தலின் படி, ஜனவரி 1 முதல் அனைத்து உள்நாட்டு வாய்ஸ் … Read more

கூகுள் தேடலில் தனிப்பட்ட வாட்ஸ் அப் குழுக்களின் லிங்க்: மீண்டும் எழும் வாட்ஸ் அப் பாதுகாப்பு அச்சம்!

வாட்ஸ் அப் தனிப்பட்ட குழுக்களின் இணைப்புகள் கூகுள் தேடியந்திரத்தில் தேடினால் கிடைத்திருப்பது மீண்டும் தெரியவந்துள்ளது. அதாவது, இவை ரகசியமான, தனிப்பட்ட வாட்ஸ் அப் உரையாடல் குழுக்களாக இருந்தாலும் அவற்றின் இணைப்பு (லிங்க்) இருந்தால் அதை கூகுளில் தேடியே எளிதில் அந்தக் குழுவில் இணைந்துவிடலாம். சுயாதீன இணையப் பாதுகாப்பு ஆய்வாளர் ராஜேஷகர் என்பவர் இது குறித்துப் பகிர்ந்துள்ளார். இதனால் வாட்ஸ் அப் தனிப்பட்ட குழுக்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்வியெழுந்துள்ளது. அண்மையில், தனிப்பட்ட வாட்ஸ் அப் குழுக்களில் இணையக் … Read more

வாட்ஸ் அப் கணக்கு நீக்கப்படாது: மே 15 வரை கால அவகாசம்

தங்களுடைய நிபந்தனைகளை ஏற்காத கணக்குகள் பிப்ரவரி 8-ம் தேதியன்று முடக்கப்படும் என்று தெரிவித்திருந்த வாட்ஸ் அப், தனது முடிவில் இருந்து தற்போது பின்வாங்கியுள்ளது. புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிந்துகொள்ள ஏதுவாக மே 15 வரை கால அவகாசம் அளிக்கப்படுவதாகவும் வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. முன்னணி மெசேஜிங் சேவையான வாட்ஸ் அப் விதிகள் மற்றும் நிபந்தனைகள் புதுப்பிக்கப்பட்டிருப்பது இணைய உலகில் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப்பின் மாற்றி அமைக்கப்பட்ட நிபந்தனைகளில், ஃபேஸ்புக்குடன் தரவுகள் பகிர்ந்து கொள்ளப்படுவது … Read more

100 கோடி பயனர்களைத் தாண்டிய ஐஃபோன்: வருவாயிலும் புதிய சாதனை

சர்வதேச அளவில் ஐஃபோன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 100 கோடி என்கிற எண்ணிக்கையைத் தாண்டியதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. டிசம்பார் காலாண்டு முடிவில் ஐஃபோன் மூலம் அந்நிறுவனம் 65.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை வருவாயாகப் பெற்று சாதனை படைத்தது. இது கடந்த வருடத்தை விட 17 சதவீதம் அதிகமாகும். தற்போது செயல்பாட்டில் இருக்கும் ஐஃபோன்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதாக ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் கூறியுள்ளார். “டிசம்பர் காலாண்டில் விற்பனையில் 165 கோடி … Read more