ட்வீட்களை முடக்கச் சொன்ன மத்திய அரசின் உத்தரவுக்கு எதிரான ட்விட்டரின் வழக்கை தள்ளுபடி செய்தது கர்நாடக ஐகோர்ட்
பெங்களூரு: ஒரு சில ட்வீட்கள் மற்றும் கணக்குகளை முடக்கச் சொன்ன மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து ட்விட்டர் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதோடு, அரசின் உத்தரவை பின்பற்றாத ட்விட்டருக்கு 50 லட்ச ரூபாய் அபராதமும் விதித்துள்ளது உயர் நீதிமன்றம். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணா, சமூக வலைதளங்களில் கருத்துகளை, பதிவுகளை தடை செய்யும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என்றும் ட்விட்டர் நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். … Read more