ரிலையன்ஸ் ஜியோவின் மலிவான ரீசார்ஜ் பிளான்… தினம் 2GB 4G டேட்டா உடன் அன்லிமிடெட் 5G டேட்டா

Reliance Jio Prepaid Plan: கடந்த ஜூலை மாதம், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் வோடபோன் உள்ளிட்ட முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போஸ்ட் பெய்ட் மற்றும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கட்டணங்களை 15% வரை உயர்த்தின. இதன் காரணமாக மலிவான திட்டங்களை வழங்கும் பிஎஸ்என்எல் பக்கம் சாயத் தொடங்கினர். இந்நிலையில், வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் அவ்வப்போது சில புதிய மலிவான ரீசார்ஜ் திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகின்றன. ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை … Read more

வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கை விவகாரம்: இந்தியாவில் மெட்டாவுக்கு ரூ.213 கோடி அபராதம்

புதுடெல்லி: கடந்த 2021-ல் வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கை புதுப்பிப்பு சார்ந்த விவகாரத்தில் தவறாக நியாயமற்ற முறையில் வணிக ஆதாயம் சார்ந்த முயற்சியை மேற்கொண்ட காரணத்துக்காக மெட்டா நிறுவனத்துக்காக இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) திங்களன்று ரூ.213.14 கோடி அபராதம் விதித்தது. மேலும், இந்த போட்டி நடைமுறையை நிறுத்தவும் சிசிஐ அறிவுறுத்தியுள்ளது. அதற்கான தீர்வை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மெட்டா மற்றும் வாட்ஸ்அப் செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் தளத்தில் சேகரிக்கப்படும் பயனர்களின் தரவுகளை மெட்டாவின் மற்ற … Read more

கூகுள் குரோமுக்கு வந்த சோதனை! – விற்றுவிட நீதித்துறை நிர்பந்தம்

வாஷிங்டன்: கூகுள் குரோம் பிரவுசரை விற்பனை செய்ய வேண்டிய நிர்பந்தத்தை அமெரிக்க நீதித்துறை கொடுக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் பலரும் தங்களது ஸ்மார்ட்போன், லேப்டாப், டெஸ்க்டாப், டேப்லெட் என டிஜிட்டல் சாதனங்களில் கூகுள் குரோம் இன்டர்நெட் பிரவுசரை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். இந்த நிலையில் அந்த பிரவுசரை கூகுள் விற்பனை செய்ய வேண்டிய சூழல் எழுந்துள்ளது. அதற்கான காரணம் என்ன என்பது குறித்து பார்ப்போம். கூகுள் நிறுவனம் சட்டவிரோதமாக Search சந்தையை குரோம் … Read more

ஐபோன் முதல் சாம்சங் வரை… பிளிப்கார்ட்டில் போன்களுக்கு அதிரடி தள்ளுபடிகள்

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் ஃபோன்கள் என்பது ஆடம்பர பொருள் என்ற நிலையில் இருந்து அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. பட்ஜெட் போன் வாங்குபவர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகமாக இருந்தாலும், இஎம்ஐ கடன் வசதி கிடைப்பதால், எளிய மற்றும் நடுத்தர மக்களும், பிரீமியம் போன்கள் பக்கமாக தங்கள் பார்வையை அதிகமாக திருப்பி வருகின்றனர். அந்த வகையில் ஐபோன் என்பது பலர் வாங்க நினைக்கும் பிரீமியம் ஃபோன்களில் ஒன்று.  ஐபோன் வாங்கும் கனவு உங்களுக்கு இருந்தால், அதை நிறைவேற்ற மிக … Read more

வாட்ஸ்-ஆப்பில் திருமண பத்திரிகை வந்தால் நம்ப வேண்டாம்!! அதிர்ச்சியூட்டும் பெரிய மோசடி..

New Scam Alert On Whatsapp : வாட்ஸ் ஆப் பயணாளர்கள், நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றனர். ஒருவர் புதிதாக செல்பாேன் வாங்குகிறார் என்றால், அவர் முதலில் இன்ஸ்டால் செய்யும் செயலியாக இருக்கிறது, வாட்ஸ்-ஆப். பலரையும் நொடிப்பொழுதில் கனெக்ட் செய்யும் இந்த செயலியை, இந்திய அளவில் லட்சக்கணக்காணோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த டிஜிட்டல் யுகத்தில், போன் கால்கள், குறுஞ்செய்திகள், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட பல விஷயங்கள் மூலம் மோசடிகள் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு மோசடி குறித்து … Read more

Samsung Galaxy S23 Ultra… பாதி விலையில் வாங்க அற்புத வாய்ப்பு… மிஸ் பண்ணாதீங்க

Samsung Galaxy S23 Ultra 256GB ஸ்மார்போன் வாங்க சிறந்த வாய்ப்பை பிளிப்கார்ட் தளம் வழங்கியுள்ளது. தீபாவளி சலுகை விற்பனைக்குப் பிறகு, ஈ-காமர்ஸ் இணையதளமான பிளிப்கார்ட் மீண்டும் சிலவற்றுக்கு தள்ளுபடிகளையும் சலுகைகளையும் அறிவித்துள்ளது. நல்ல கேமரா கொண்ட போனில், Samsung Galaxy S23 Ultra முக்கிய இடத்தை பெறுகிறது. இந்த ஃபோன் மூலம் நிலவைக் கூட தெளிவாக படம் பிடிக்க முடியும். அந்த அளவிற்கு அதன் கேமரா மிகவும் சிறப்பாக உள்ளது. DSLR கேமராக்களுடன் கூட போட்டியிடும் … Read more

ஜியோ 5ஜி பயனர்களுக்கு குட் நியூஸ்… டேட்டாவை வாரி வழங்கும் அம்பானி – புதிய பிளானில் டாப் நன்மைகள்!

Jio Unlimited 5G Data New Plan: நீங்கள் ஜியோ வாடிக்கையாளர் என்றால் இந்த திட்டத்தை நிச்சயம் தெரிந்துவைத்துக்கொள்வது நல்லது. இப்போது  பலரும் 4ஜி மொபைலில் இருந்து 5ஜி மொபைலுக்கு மாறி வருகின்றனர். காரணம், ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி சேவையை சில தேர்ந்தெடுத்த பிளான்களுக்கு வரம்பற்ற வகையில் வழங்கி வருகின்றன. எனவே, வாடிக்கையாளர்களும் 5ஜி ஸ்மார்ட்போனை நோக்கி படையெடுக்க, அனைத்து நிறுவனங்களும் 5ஜி மொபைல் தயாரிப்பையும் முடுக்கிவிடத் தொடங்கிவிட்டன.  இதில், ஜியோ நிறுவனம் முன்னர் அனைத்து … Read more

ஜியோ Vs ஏர்டெல்: மலிவான பிராட்பேண்ட்… அதிவேக அன்லிமிடெட் டேட்டா உடன் OTT நன்மைகள் கொடுக்கும் திட்டம் எது

இந்தியாவில் தொலைதொடர்பு சேவை முன்னனி நிறுவனமாக விளங்கும் ஜியோ நிறுவனம், பிராட்பேண்ட் சேவையிலும் முதலிடத்தை பிடிக்கும் வகையில், தனது ஜியோ பைபர் பிராட்பேண்ட் சேவை பெற விரும்புபவர்களுக்கு, குறைந்த கட்டணத்தில் அதிவேக இணையம், வரம்பற்ற அழைப்பு மற்றும் இலவச OTT சந்தாக்கள் கொண்ட திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் சிறந்த பிராட்பேண்ட் சேவை வழங்கும் நிறுவனமாக வளர்ந்து வரும் ஏர்டெல் நிறுவனமும், இதே போன்ற சலுகைகள் கொண்ட பல பிராட்பேண்ட் திட்டங்களை வழங்கி வருகிறது.  ஜியோ மற்றும் ஏர்டெல் … Read more

உதவி கேட்ட மாணவரை ‘செத்துப்போ’ எனக்கூறிய AI Chatbot! மனிதர்களின் அழிவு ஆரம்பமா?

AI Chatbot Gemini Verbally Abuses College Student : கடந்த இரண்டு ஆண்டுகளில், அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல உலக நாடுகளில் அதிகவேகமாக வளர்ந்த தொழில்நுட்பமாக இருக்கிறது, AI (Artificial intelligence). AI என்பது ஒரு விஞ்ஞானத் துறை. இது பொதுவாக மனித நுண்ணறிவு தேவைப்படும் வழிகளில் கற்றுக்கொள்ள, பகுத்தறிவு பெற்று செயல்படக்கூடிய இயந்திரங்களை உருவாக்குபவையாக இருக்கின்றன. தரவுகளை பகுப்பாய்வு செய்ய, பிற பணிகளைச் செய்யவும் AI பயன்படுகிறது. இதன் ஆதிக்கம் அனைத்து துறைகளிலும் பெருகி … Read more

டிஜிட்டல் டைரி 20: ஃபேஸ்புக் ‘அல்காரித’மும் பாதிக்கப்படும் நகரவாசிகளும்

இங்கிலாந்தில் உள்ள சிறிய நகரம் ஒன்று, ஃபேஸ்புக் அல்காரிதம் அளிக்கும் தண்டனைக்கு உள்ளாகியிருக்கிறது. நகரின் பெயரில் ‘பிரச்சினை’ இருப்பதாக ஃபேஸ்புக் அல்காரிதம் தவறாகப் புரிந்துகொண்டதே இதற்கான காரணம் என்பது தெரியவந்துள்ளது. ‘கூல்ஸ்டன்’ (Coulsdon) எனும் அந்த நகரைச் சேர்ந்த தனிநபரும் விற்பனையாளரும் ஃபேஸ்புக் தளத்தில் வைத்துள்ளனர். அந்த நகரிலோ, நகரின் பெயரிலோ எந்தப் பிரச்சினையும் கிடையாது. ஆனால் ‘Coulsdon’ எனும் பெயரில் அமைக்கப்பட்டுள்ள ஃபேஸ்புக் பக்கங்கள், குழுக்களில் பதிவேற்றப்படும் பதிவுகள் நீக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஃபேஸ்புக் விதிமுறைகளை மீறியதற்காகப் … Read more