Lal Salaam First Single – லால் சலாமின் தேர் திருவிழா.. போடு தியேட்டரில் பெரும் கொண்டாட்டம் இருக்கு

சென்னை: Ther Thiruvizha (தேர் திருவிழா) ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் லால் சலாம் படத்திலிருந்து தேர் திருவிழா பாடல் வெளியானது. ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் சில வருடங்களுக்கு முன்பு திருமண உறவிலிருந்து வெளியே வந்தார். திருமண உறவிலிருந்து வெளியே வந்தாலும் அதிலேயே முடங்கிவிடாமல் தனது சினிமா

2024 பொங்கல் வெளியீட்டில் மாற்றங்கள் வருமா ?

2024ம் ஆண்டின் பொங்கல் வெளியீடாக “அயலான், அரண்மனை 4, கேப்டன் மில்லர், லால் சலாம்” ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 'அரண்மனை 4' பற்றி அதன்பின் எந்த சத்தமும் கேட்கவில்லை. ஜனவரி 26ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த 'தங்கலான்' படம் தள்ளிப் போகலாம் என ஒரு தகவல் வந்துள்ளது. அப்படி அந்தப் படம் தள்ளிப் போனால், பொங்கல் போட்டியிலிருந்து ஏதாவது ஒரு படம் விலகி, ஜனவரி 26க்கு மாற வாய்ப்புள்ளது. 'அயலான்' படத்திற்கான வியாபாரம் எதிர்பார்ப்பை விடவும் … Read more

Vijay Sethupathi: மீண்டும் இணைந்த விஜய் சேதுபதி -மணிகண்டன் காம்போ.. இந்த முறை வெப் சீரிஸிற்காக கூட்டணி

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் மணிகண்டன் கூட்டணியில் வெளியானது ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி படங்கள். இந்தப் படத்தை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி தற்போது இணைந்துள்ளது. இந்த முறை இவர்கள் இணைந்துள்ளது வெப் தொடருக்காக. இவர்கள் இருவரும் இணைந்து புதிய வெப் தொடரை உருவாக்கி வருகின்றனர். இதன் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து

குடிப்பழக்கத்திலிருந்து மீண்டேன் : ஓபன் ஆகப் பேசிய ஸ்ருதிஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் மும்பையில் அவரது காதலருடன் லிவிங் டு கெதர் ஆக வசித்து வருகிறார். அவர் நடித்துள்ள 'சலார்' படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. சமீபத்திய வீடியோ பேட்டி ஒன்றில் ஸ்ருதிஹாசன் ஒரு காலத்தில் அவருக்கு இருந்த குடிப்பழக்கம் பற்றி ஓபன் ஆகப் பேசியுள்ளார். “நான் கடந்த எட்டு ஆண்டுகளாக தெளிவாக இருக்கிறேன். நீங்கள் குடிக்காத போது பார்ட்டிகளில் மற்றவர்களைப் பொறுத்துக் கொள்வது கடினம். எனக்கு நிதானமாக இருப்பதுதான் சிறந்தது. … Read more

Actor Simbu: அவதார் படத்தை பின்பற்றும் சிம்பு படம்.. சூட்டிங் எப்ப தெரியுமா?

சென்னை: நடிகர் சிம்பு -தேசிங்கு பெரியசாமி கூட்டணியில் உருவாகவுள்ள STR48 படத்தின் சூட்டிங் நீண்ட நாட்களாக துவங்காமல் உள்ளது. இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கவுள்ள நிலையில் இந்தப் படத்தின் அறிவிப்புடன் படம் தற்போது உள்ளது. வரலாற்று பின்னணியில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் பிரீ புரொடக்ஷன்ஸ் வேலைகளுக்கு அதிகமான நேரம் எடுப்பதால் படத்தின் சூட்டிங்

தனி ஒருவன் 2 அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்குகிறது

பிரதர், ஜெனி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்த படத்தை அடுத்து தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 படத்தில் ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. முதல் பாகத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடித்த நிலையில், இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடிப்பதற்கு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் தற்போது தற்போது ஜெயம் ரவி கைவசம் … Read more

Baakiyalakshmi serial: ராதிகாவிடம் மாட்டிய கோபி.. சப்போர்ட் செய்த ஈஸ்வரி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்கள் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்துள்ளன. இன்றைய எபிசோடில் நீண்ட நாட்களாக தன்னுடைய கிரெடிட் கார்ட் பில்லை கட்டாமல் போக்கு காட்டிவந்த கோபியின் விஷயம் தற்போது ராதிகாவிற்கு தெரியவந்துள்ளது. மறுபுறம் பொருட்காட்சி கேன்டீனை அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில் பாக்கியா நடித்தி வருவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.

ஹீரோயின் ஆனார் மதுரா

3எஸ் பிக்சர்ஸ் சார்பில் சிவா தயாரித்து இயக்கி உள்ள படம் ஆலன். வெற்றி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவரது ஜோடியாக ஜெர்மன் நாட்டை சேர்ந்த தபேயா மதுரா நடித்துள்ளார். விஜய் சேதுபதி நடித்த 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தில் வெளிநாட்டு பத்திரிகையாளராக நடித்திருந்த இவர் இந்த படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார். இவரது அம்மா இலங்கையை சேர்ந்த தமிழர், அப்பா ஜெர்மனியை சேர்ந்தவர். சட்டம் படித்துள்ள இவர் நடனம், இசை முறைப்படி கற்றுள்ளார். மாடலிங் … Read more

Mari Selvaraj: 20 கிராமங்களை தொடர்புகொள்ள முடியவில்லை.. காப்பாற்றுங்கள்! மாரி செல்வராஜ் வேண்டுகோள்

சென்னை: அடுத்தடுத்த படங்களை சிறப்பாக கொடுத்து வருகிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். சமீபத்தில் அவரது இயக்கத்தில் மாமன்னன் படம் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. மாரி செல்வராஜின் இயக்கத்தில் வெளியாகிவரும் படங்கள் சமூக அக்கறையையும் வெளிப்படுத்தி வருகின்றன. இயக்குநர் மாரி செல்வராஜ்: இயக்குநர் மாரி செல்வராஜின் பயணம் பரியேறும் பெருமாள் படத்தில் துவங்கியது தொடர்ந்து

பார்க்கிங் வெற்றி சந்தோஷத்தையும் தாண்டி பயத்தையும் பொறுப்பையும் கொடுத்துள்ளது : ஹரிஷ் கல்யாண்

அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர் நடித்த 'பார்க்கிங்' படம் கடந்த 1ம் தேதி வெளிவந்தது. படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி தயாரித்துள்ளது. ஒரே காம்பவுண்டில் வசிக்கும் இருவருக்கு இடையில் கார் பார்க்கிங் தொடர்பாக வரும் ஈகோ மோதலை பற்றிய படம். ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது. இந்த விழாவில் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண் … Read more