10 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட பாடகர்களைத் தந்த விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்குபவர்கள், கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில், கோலோச்சி வருகின்றனர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் எனப் பிரிவுகளாக இளைஞர்களுக்கும், சிறு வயதினருக்குமாக நடைபெறுகிறது. இந்த பிரிவுகளிலிருந்தும் பல திறமையான பாடகர்கள் திரைத்துறையில் பிரபல … Read more

Sundari 2: சுந்தரிக்கு ஜோடியாகும் நடிகை சாயா சிங் கணவர்.. அந்த ஒரு \"டுவிஸ்ட்” வேற இருக்காமே..!

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் இன்னும் ஒரு சில எபிசோடுகளில் முடிவுக்கு வரும் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதைத்தொடர்ந்து நடிகை கேப்ரல்லா செல்லஸ் நடிப்பில் சுந்தரி சீசன் 2 தொடங்கப்பட இருக்கிறது என்ற தகவல்களும் பரவி வருகிறது. சுந்தரி 2 சீரியலின் கதாநாயகனாக தெய்வமகள் சீரியல் பிரகாஷ் தான் நடிக்க இருக்கிறார்

‛கிரிமினல்' பர்ஸ்ட் லுக் வெளியீடு

அறிமுக இயக்குனர் தக்ஷிணா மூர்த்தி இயக்கத்தில் சரத்குமார், கவுதம் கார்த்திக் இணைந்து நடித்து வரும் படம் 'கிரிமினல்'. கருணாகரன், ஜனனி, ரவினா ரவி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிகட்ட பணி நடைபெற்று வருகிறது. சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விரைவில் இந்த படத்தின் டீசர் மற்றும் ஆடியோ வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

அக்கா.. என் நெஞ்சு நிறைஞ்சிருக்கு.. நடிகை பிரீதா ஹரி காலில் விழுந்து ஆசி வாங்கிய சுஜா வருணி!

சென்னை: படையப்பா படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்த நடிகை பிரீதா ஹரி காலில் விழுந்து பிக் பாஸ் சுஜா வருணி ஆசி வாங்கிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். நடிகர் விஜயகுமாரின் மகளான பிரீதா இயக்குநர் ஹரியை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், சினிமாவில் நடிப்பதை 2002ம் ஆண்டே நிறுத்திக்

ரஜினி பெயரை மறந்தும் கூட உச்சரிக்காத துடிக்கும் கரங்கள் படக்குழு

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1983ல் வெளியான படம் துடிக்கும் கரங்கள். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு எஸ்பி பாலசுப்ரமணியம் இசையமைத்து இருந்தார். தற்போது 40 வருடங்கள் கழித்து இதே பெயரில் நடிகர் விமல் நடிக்கும் படம் தயாராகியுள்ளது. இயக்குனர் வேலுதாஸ் இயக்கியுள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை சமீபத்தில் நடத்தினார்கள். ஆனால் படக்குழுவினர் மட்டுமல்லாது விழாவில் கலந்து கொண்ட சிறப்பு … Read more

Prakash Raj: \"ஜெய்பீம் படத்துக்கு எப்படி தேசிய விருது தருவார்கள்..?” பிரகாஷ் ராஜ் ஆதங்கம்!

சென்னை: 69வது தேசிய திரைப்பட விருதுகள் இரு தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இதில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்பீம், சார்பட்டா பரம்பரை போன்ற தமிழ்ப் படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைக்கவில்லை. சூர்யாவின் ஜெய்பீம் படத்துக்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து பிரபலங்கள் பலரும் ஆதங்கம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜும் இதுகுறித்து மிக காட்டமாக ட்வீட் செய்து

'ஜெயிலர்' வியாபாரம் 125 கோடி, வசூல் 525 கோடி

நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த், வசந்த் ரவி, யோகி பாபு, தமன்னா மற்றும் பலர் நடிக்க ஆகஸ்ட் 10ம் தேதி வெளிவந்த படம் 'ஜெயிலர்'. இப்படம் 525 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இப்படத்தைப் பொறுத்தவரையில் உலகம் முழுவதும் சுமார் 125 கோடிக்கு வியாபாரம் நடந்ததாக படம் வெளிவருவதற்கு முன்பே பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவித்தார்கள். தமிழக உரிமையாக 62 கோடி, தெலுங்கு உரிமையாக 12 கோடி, கர்நாடக உரிமையாக 10 கோடி, கேரளா … Read more

Jawan: சென்னையில் ஜவான் இசை வெளியீட்டு விழா… ஷாருக்கானின் சர்ப்ரைஸ் பிளான் இதுதானா..?

சென்னை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாகிறது. அட்லீ இயக்கத்தில் இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாகவுள்ளது. ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், நயன்தாரா உள்ளிட்ட பலர் ஜவானில் நடித்துள்ளனர். இந்நிலையில் ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்த முடிவு

ஸ்கந்தா படத்தின் டிரைலரை வெளியிடும் பாலையா

போயபட்டி சீனு இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஸ்கந்தா'. இதில் கதாநாயகியாக நடிகை ஸ்ரீலீலா நடிக்கிறார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. சமீபத்தில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவு பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா இன்று(ஆக., 26) ஐதராபாத்தில் நடைபெறுகிறது. … Read more

வந்தாள் மகாலட்சுமியே.. பட்டுப் புடவையில் தேவதை போல ஜொலித்த ஸ்ரீ தேவி!

சென்னை: விஜயகுமாரின் மகளான நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் தன்னுடைய வீட்டில் வரலட்சுமி பூஜையின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா விஜயகுமார் மகளாக ஸ்ரீதேவி விஜயகுமார் குழந்தை நட்சத்திரமாக 1992ல் சத்யராஜ் நடித்த ரிக்சா மாமா திரைப்படத்தில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு,