பிரபல கோவிலுக்குள் நுழைய நடிகை அமலா பாலுக்கு அனுமதி மறுப்பு..!!

2010-ல் வெளியான ‘வீரசேகரன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அமலா பால்.அதன்பின் சிந்து சமவெளி, மைனா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மைனா படத்தில் மலைவாழ் கிராமத்தில் வாழும் அழகிய பெண்ணாக இவர் வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து தெய்வத்திருமகள், தலைவா படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். தெய்வத்திருமகள் படத்தின் படப்பிடிப்பின் போது ஏ.எல்.விஜய் மற்றும் அமலாபால் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. பின்னர் 2014-ம் ஆண்டு திருமணம் … Read more

Shahrukh Khan: உலகின் பணக்கார நடிகர்கள் பட்டியல்! ஷாருக்கானுக்கு எந்த இடம் தெரியுமா?

பாலிவுட்டின் கிங் என்று அழைக்கப்படும் ஷாருக்கான் விரைவில் ‘பதான்’ படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்கள்முன் வர உள்ளார். தனது நடிப்பால் உலகையே ஆண்டவர் நடிகர் ஷாருக்கான். அந்தவகையில் தற்போது உலக புள்ளிவிவரங்கள் வெளியிட்ட உலகின் எட்டு பணக்கார நடிகர்களின் பட்டியலின் படி, டாம் குரூஸ், ஜாக்கி சான் மற்றும் ராபர்ட் டி நீரோ, ஜார்ஜ் குளூனி போன்ற நடிகர்களை மிஞ்சி ஷாருக் முன்னோக்கி வந்துள்ளார். மேலும் இந்தப் பட்டியலின்படி ஷாருக்கானின் சொத்து மதிப்பு 770 மில்லியன் டாலர்கள் … Read more

சத்யராஜ் – வசந்த் ரவியின் `வெப்பன்’ படப்பிடிப்பில் விபத்து; லைட் மேன்-க்கு நேர்ந்த துயரம்!

கும்மிடிப்பூண்டி அருகே ஏ.ஆர்.ஆர். பிலிம் சிட்டியில் படப்பிடிப்பிற்காக 40 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபர் தவறி விழுந்து உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஐயர்கண்டிகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்குச் சொந்தமான ஏ.ஆர்.ஆர். பிலிம் சிட்டி உள்ளது. இங்கு பல்வேறு திரைப்படங்களின் படப்பிடிப்பு, இசையமைப்பு, பின்னணி இசையமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், சத்யராஜ் நடிக்கும் ‘வெப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்த ஏ.ஆர்.ஆர். பிலிம் சிட்டியில் இன்று காலை சென்னை சாலிக்கிராமத்தை சேர்ந்த குமார் … Read more

வாரிசு படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா? – வெளியிட்ட படக்குழு!!

துணிவு, வாரிசு கடந்த 11 ஆம் தேதி வெளியான நிலையில் முதல் நாளில் வாரிசை பின்னுக்கு தள்ளி துணிவு முதலிடத்தைப் பிடித்தது. அதனைத் தொடர்ந்து வாரிசுக்கு வசூல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு குடும்ப பார்வையாளர்களின் ஆதரவு காரணமாக இருக்கலாம் என தெரிகிறது. இந்நிலையில் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆகி 7 நாட்கலில் 210 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் தனது … Read more

Pay Tax: நடிகை ஐஸ்வர்யா ராய் வரி செலுத்தவில்லையா? தகவல்கள் எழுப்பும் கேள்விகள்

மும்பை: நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், வரி செலுத்தவில்லை என்பதால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகள், மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. மகாராஷ்டிர மாநிலம், நாசிக் நகருக்கு அருகில் உள்ள சின்னார் மாவட்டத்தில் உள்ள நிலம் தொடர்பாக மகாராஷ்டிரா  மாநில அரசு, ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு வரி நிலுவை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஐஸ்வர்யாவுக்கு சொந்தமான நிலம், விவசாயம் அல்லாத நிலம் என்று தெரியவந்துள்ளது. வரி செலுத்தாதது தொடர்பாக நோட்டீஸ் கிடைத்ததாக தகவல் வந்துள்ளதை நடிகையில் தரப்பு இதுவரை … Read more

சிறகடித்து பறக்க தயாராகும் சமந்தா! 'வொர்க் அவுட்' புகைப்படத்தை பகிர்ந்து நெகிழ்ச்சி

உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி மேற்கொள்ளும் போது பயிற்சியாளரால் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நடிகை சமந்தா. பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்து வரும் நடிகை சமந்தா, ‘மயோசைட்டிஸ்’ எனப்படும் அரியவகை தசை அழற்சி நோயால் சமீபத்தில் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். இதில் சமந்தாவின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகளும் பரவின. அதுகுறித்து சமந்தாவே வேதனை தெரிவித்திருந்தார். குறிப்பாக தன்னுடைய அழகு போய்விட்டதாகவும், படுத்த படுக்கையாக பலவீனத்துடன் இருப்பதாகவும், உயிருக்கே ஆபத்தான நிலையில் இருக்கிறேன் என்றெல்லாம் … Read more

துபாயில் நடைபெற்ற பிரம்மாண்ட பொங்கல் நிகழ்ச்சி

துபாயில் டிபி எனப்படும் துபாய் புள்ளைங்கோ அமைப்பு சார்பில் பிரமாண்டமான பொங்கல் நிகழ்ச்சி காலை முதல் மாலை வரை நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். காலையில் பெண்களுக்கான கோலப்போட்டி, சிறுவர் சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள், …

`பிச்சைக்காரன் 2’ படப்பிடிப்பில் விபத்து; விஜய் ஆண்டனிக்கு விரைவில் அறுவை சிகிச்சை!

விபத்துக்குள்ளான நடிகர் விஜய் ஆண்டனி இன்று அறுவை சிகிச்சைக்காக சென்னை வர இருக்கிறார். நடிகர் விஜய் ஆண்டனி தான் இயக்கி நடிக்கும் `பிச்சைக்காரன் 2’ படத்திற்கான படப்பிடிப்பை, மலேஷியாவில் நடத்தி வந்தார். இரு தினங்களுக்கு முன் லங்கா தீவில் சேசிங் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. கடலில் படகை வேகமாக ஓட்டிச் சென்ற விஜய் ஆண்டனி எதிர்பாராத விதமாக இன்னொரு படகில் மோதி விபத்துக்குள்ளானார். இதனால் முகம் மற்றும் வாய் பகுதிகளில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சுய … Read more

நான்கே படங்கள் ரூ.450 கோடி வசூல்

2022ம் ஆண்டில் இந்தியத் திரையுலகத்தில் தென்னிந்தியப் படங்கள்தான் அதிக வசூலைக் குவித்தன. பல பெரிய நடிகர்களின் படங்கள் வந்தாலும் ஹிந்திப் படங்கள் பெரிய அளவில் வசூலைக் குவிக்கவில்லை. 'ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2, விக்ரம், பொன்னியின் செல்வன், காந்தாரா' ஆகிய தென்னிந்தியப் படங்கள் மட்டுமே சுமார் 3800 கோடியை வசூலித்தன. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தென்னிந்தியப் படங்கள் நல்ல வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு சாட்சியாக இந்த வருடப் பொங்கலுக்கு வெளிவந்த படங்கள் அமைந்துள்ளன. … Read more

பணத்துக்காகத்தான் நடிக்க வந்தேன் – பிரபல நடிகையின் ஓபன் டாக்!

செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கி சின்னத்திரை தொடர் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் பிரபலமான மற்றும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.  இவர் தமிழில் வைபவ் ஜோடியாக ‘மேயாத மான்’ என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.  இப்படத்திற்கு இவருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுக்கடுக்காக பல பட வாய்ப்புகள் குவிந்தது, தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ஓ மணப்பெண்ணே, யானை … Read more