ஷசாம் – பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம்

ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களுக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் 2019ம் ஆண்டு புதிதாக வந்த சூப்பர் ஹீரோ ஷசாம். தற்போது அதன் தொடர்ச்சியாக வர இருக்கிறது. ஷசாம் : பியூரி ஆப் காட். சச்சேரி லீவி சூப்பர் ஹீரோ ஷசாமாக நடித்திருக்கிறார். அவருடன் அஷர் ஏஞ்சல், ஜாக் டியான் கிராசர், ரோச்சல் செக்லர், ஆடம் பரோடி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். டேவிட் எப்.சான்பெர்க் இயக்கி உள்ளார். டி.சி காமிக்ஸ் கேரக்டரான இதற்கு கென்டி … Read more

குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம்

நடிப்பு, அரசியல் என இரண்டு துறைகளிலும் கவனம் செலுத்தி வரும் நடிகை குஷ்பு, அடிக்கடி வெளியூர், வெளிநாடுகளுக்கும் பயணித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் சென்ற கார் விபத்துக்குள்ளாகி அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு அவரது கண்ணில் காயம் ஏற்பட்டதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போதும் அவர் வெளிநாட்டுக்கு பயணம் செய்ய திட்டமிட்ட நிலையில் திடீரென அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக சிகிச்சை எடுத்து வருகிறார் குஷ்பூ. … Read more

சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ்

ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விக்ரமுடன் பார்வதி மேனன், மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தங்கலான் பட பாடல்கள் குறித்து ஜி.வி.பிரகாஷ் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். அதில், தங்கலான் படத்தின் பாடல்களுக்கு மிக உற்சாகமாக இசையமைத்து வருகிறேன். இரண்டு பாடல்களை பதிவு செய்து விட்டேன். இதுவரை நான் முயற்சி செய்யாத தனித்துவமான சர்வதேச … Read more

டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan”

அஜித்தின் 62வது படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட அந்தப் படம் எப்போது ஆரம்பமாகும் என்பது குறித்து இன்னும் தகவல் இல்லை. இதனிடையே, அஜித்தின் 62வது படத்தின் இயக்குனர் மாற்றப்படலாம் என்றும், விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக வேறு ஒரு இயக்குனர் நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே, டுவிட்டரில் சற்று முன் “#JusticeforVigneshShivan” என சிலர் டிரெண்டிங் செய்ய … Read more

'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்?

'துணிவு' படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கும் அவரது 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாக கடந்த வருடமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் முதல் முறையாக நடிக்கும் இப்படத்திற்காக அவருக்கு முந்தைய சம்பளத்தை விட அதிகமான சம்பளம் பேசப்பட்டது என்றும் சொன்னார்கள். 'துணிவு' படம் வந்து பெரும் வெற்றி பெற்ற பிறகு அஜித்தின் எண்ணத்தில் மாறுதல் ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அடுத்தும் ஆக்ஷன் படமாகக் கொடுப்பதுதான் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் என்று யோசிக்கிறாராம். விக்னேஷ் … Read more

100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்'

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடித்து ஜனவரி 25ம் தேதி வெளிவந்த படம் 'பதான்'. முதல் நாளில் 100 கோடி வசூலை அள்ளிய இப்படம் இரண்டாம் நாளிலும் 100 கோடியைக் கடந்தது. நேற்றைய மூன்றாம் நாளிலும் 100 கோடி வசூலைப் பெற்று ஹாட்ரிக் 100 கோடியை வசூலித்துள்ளது. இதன் மூலம் மூன்றே நாட்களில் 300 கோடி வசூலைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் மொத்த வசூலாக 200 கோடியையும், … Read more

`ரஜினிகாந்த் பெயர், குரல், போட்டோவை அனுமதியின்றி பயன்படுத்தினால்…’-வழக்கறிஞர் எச்சரிக்கை

நடிகர் ரஜினிகாந்தின் அனுமதியின்றி அவரது பெயர், புகைப்படம் மற்றும் குரலை பயன்படுத்துவோருக்கு எதிராக உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்தின் வழக்கறிஞர் எஸ்.இளம்பாரதி பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்திய திரை உலகில் பிரபலமான, பாராட்டு பெற்ற, வெற்றிகரமான நடிகரான ரஜினிகாந்த் என்கிற சிவாஜி ராவ் கெய்க்வாட், ஒரு நடிகராகவும், மனிதனாகவும் அவரது கவர்ச்சி மற்றும் இயல்பின் மூலம் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான … Read more

அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67'

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்க உள்ள அவரது 67வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. 'வாரிசு' படம் வெளியான பிறகு அறிவிப்பு வரலாம் என்றார்கள். ஆனால், இன்னமும் வெளியாகவில்லை. பட அறிவிப்பு ஒரு வீடியோ முன்னோட்டத்துடன் வர உள்ளது என்பது மட்டும் உறுதி. அது விரைவில் வெளிவர வாய்ப்புள்ளது. படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பே இன்னும் வெளியாகவில்லை. அதற்குள் படத்தின் தெலுங்கு வினியோக உரிமை விற்கப்பட்டுள்ளதாக டோலிவுட்டிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. பல வெற்றிகரமான தெலுங்குப் … Read more

வழக்கறிஞர் மூலம் ரஜினிகாந்த் விடுத்துள்ள எச்சரிக்கை!!

தனது பெயர், புகைப்படம், குரலை அனுமதியின்றி பயன்படுத்துவோருக்கு எதிராக உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நடிகர் ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் உச்ச நட்சத்திரமாக உள்ளார். அவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. அதே போல் அவரது மகள் இயக்கும் லால் சலாம் என்ற படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இதனால் ரஜினி ரசிகர்கள் … Read more

கோலிவுட்டுக்கு வரும் `சீதா மகாலக்‌ஷ்மி’? மிருணால் தாகூர் கோலிவுட் எண்ட்ரி இந்தப் படத்திலா?

‘சீதா ராமம்’ படம் மூலம் கவனம் ஈர்த்த நடிகை மிருணால் தாகூர், கோலிவுட்டில் ‘சூர்யா 42’ படத்தின்மூலமாக கால் பதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கும் திரைப்படத்தில் சூர்யா நடிக்கிறார். ‘சூர்யா 42’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பட்டானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று … Read more