துப்பறியும் போலீஸ் அதிகாரியாக மம்முட்டி நடிக்கும் கண்ணூர் ஸ்குவாட்

மலையாள திரை உலகின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் மம்முட்டி நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படம் அவர் இப்படி எல்லாம் கூட எளிமையான, வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பாரா என்கிற ஆச்சர்யத்தை மீண்டும் ஒருமுறை ஏற்படுத்தியது. அந்த அளவிற்கு ஒரு எளிய கிராமத்து மனிதனாக அந்த படத்தில் நடித்திருந்தார் மம்முட்டி. இதைத்தொடர்ந்து அடுத்ததாக அவர் நடிக்க இருக்கும் புதிய படத்தில் இதற்கு நேர் மாறாக துப்பறியும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் … Read more

ஷாருக்கானின் பதான் குறித்து கமல்ஹாசன் போட்ட டுவீட்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு ஜீரோ என்ற படம் வெளியானது. ஆனால் அந்த படம் தோல்வி அடைந்து விட்டது. அதையடுத்து நான்கு வருடங்களுக்கு பிறகு தற்போது அவர் நடித்துள்ள பதான் என்ற படம் நேற்று திரைக்கு வந்திருக்கிறது. சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ள இந்த படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே நாயகியாகவும், ஜான் ஆபிரகாம் வில்லனாகவும் நடிக்க, சல்மான்கான் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் காவி நிறத்தில் பிகினி உடை … Read more

விஜய் 67வது படத்தின் அப்டேட் எப்போது? : லோகேஷ் தகவல்

மாஸ்டர் படத்தை அடுத்து விஜய்யின் 67வது படத்தை தற்போது இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. அடுத்தபடியாக மூன்றாம் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாரிசு படம் திரைக்கு வந்ததும் விஜய் 67வது படம் குறித்த அப்டேட் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்திருந்த லோகேஷ் கனகராஜ், தற்போது பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இப்படத்தின் … Read more

"தாமரைக்குளம் டூ தலைநகரம்" – ஸ்டன்டில் கோலோச்சிய ஜூடோ ரத்தினம்

தமிழ் சினிமாவை மட்டுமல்லாது இந்திய சினிமாவில் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக ஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றியவர் ஜூடோ ரத்தினம். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1500 படங்களுக்கு ஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றிய இவர், வயது மூப்பு காரணமாக குடியாத்தத்தில் இன்று(ஜன., 26) மாலை 4:30 மணியளவில் காலமானார். சினிமாவில் இவர் கடந்து வந்த பாதையை பார்க்கலாம் உயிரை பணயம் வைத்து, நிஜத்தில் பல சாகசங்கள் புரிந்து திரையில் தோன்றும் கதாநாயக நடிகர்களுக்கு நல்ல பெயர் வாங்கித் … Read more

மூத்த ஸ்டன்ட் இயக்குனர் ஜூடோ கே.கே ரத்தினம் மறைவு

தமிழ் சினிமாவில் அரை நூற்றாண்டுக்கு மேலாக தனது அதிரடியான சண்டைக்காட்சிகளால் ரசிகர்களை கவர்ந்த மூத்த ஸ்டன்ட் இயக்குனர் ஜூடோ கே.கே ரத்தினம்(93) வயதுமூப்பால் காலமானார். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் ஜூடோ ரத்தினம். 1959ல் தாமரைக்குளம் என்ற படத்தில் நடிகராக அறிமுகமான இவர் 1966ல் வல்லவன் ஒருவன் படம் மூலம் ஸ்டன்ட் இயக்குனராக மாறினார். அந்தக்கால சிவாஜி தொடங்கி ஜெய்சங்கர், ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜூன் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் அனேக நடிகர்களின் படங்களுக்கு ஸ்டன்ட் … Read more

மோகன்லாலுக்கு வில்லனாகிறார் ரிஷப் ஷெட்டி?

கடந்தாண்டு காந்தாரா என்கிற படம் வெளியாவதற்கு முன்பு வரை கன்னட இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி என்கிற பெயர் கன்னட திரை உலகில் மட்டுமே பிரபலமாக இருந்தது. தற்போது காந்தாராவின் வெற்றியால் தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை பேசப்படும் மனிதராக மாறிவிட்டார் ரிஷப் ஷெட்டி. அடுத்ததாக காந்தாரா-2 படத்திற்கான கதை விவாதத்தில் ரிஷப் ஷெட்டி ஈடுபட்டுள்ளார் என்று அந்த படத்தின் தயாரிப்பாளரே சமீபத்திய பேட்டி கூறியிருந்தார். இந்த நிலையில் ரிஷப் ஷெட்டியின் இந்த திடீர் புகழால் தற்போது … Read more

"நீ ஒரு சூப்பர் ஸ்டாருன்னு ப்ரூப் பண்ணிட்ட” – ரஜினியின் மங்காத மகுடமும் விஜய்யின் ஆசையும்!

சூப்பர் ஸ்டார் பட்டமும் தொடரும் விவாதமும் சமீப காலமாக சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பான விவாதம் அனல் பறந்து கொண்டே இருக்கிறது. வசூல் சக்கரவர்த்தியாக வலம்வரும் நடிகர் விஜய்தான் தற்போதைய சூப்பர் ஸ்டார் என்று பலரும் கூறி வருகிறார்கள். வைரலாகும் தீ வீடியோ! ரஜினிகாந்த் நடிப்பில் 1981 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் தீ. ரஜினியின் சினிமா கேரியரில் பில்லா போன்று மிகவும் ஸ்டைலிஸ் ஆன கேங்ஸ்டர் படம்தான் தீ. தன்னுடைய யதார்த்தமான, ஸ்டைலான நடிப்பில் … Read more

இறுதிக்கட்டத்தை நோக்கி சூர்யா 42வது படம்

சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 42வது படத்தின் படப்பிடிப்பு எண்ணூர் துறைமுகத்தில் தொடங்கி சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகி வருகிறது. 10 மொழிகளில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தில் சூர்யா ஐந்து விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பீரியட் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இதற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. அந்த வகையில் பிப்ரவரி, … Read more

”அப்போதெல்லாம் தினமும் குடி, சிகரெட் தான்!” – ரஜினியின் கலகல பேச்சால் அதிர்ந்த அரங்கம்!

நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் புதிதாய் தொடங்கியுள்ள SARP PRODUCTIONS மற்றும் அதன் மூலம் தயாரிக்கப்பட உள்ள “சாருகேசி” திரைப்படம் குறித்த அறிவிப்பு விழாவானது சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். ரஜினிகாந்த் பேசியதன் முழுவிபரம்;- அன்று என்னை உள்ளேயே அனுமதிக்கவில்லை; அறிவிப்பை அடுத்து பேசிய ரஜினிகாந்த், “ரகசியம் பரம ரகசியம் நாடகத்தை பார்க்க 45 வருடத்திற்கு முன்பு உள்ளே சென்றபோது, என்னை அனுமதிக்கவில்லை. … Read more

குக் வித் கோமாளி சீசன் 4ல் என்ட்ரியாகும் பிரபலங்கள் : ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்

சின்னத்திரை ரசிகர்களின் விருப்ப நிகழ்ச்சியான குக் வித் கோமாளி, முதல் மூன்று சீசன்களின் வெற்றியை தொடர்ந்து நான்காவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. முன்னதாக வெளிவந்த புரோமோவில் முந்தைய சீசனில் இடம்பெற்ற சில குக்குகளும், கோமாளிகளும் இடம்பெறவில்லை. எனவே, இந்த சீசனில் புதிதாக யார் யார்? என்ட்ரி கொடுக்கிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள புது புரோமோவில் செலிபிரேட்டிகளின் என்ட்ரி காண்பிக்கப்பட்டுள்ளது. இதில், ஜி.பி.முத்து, சிங்கப்பூர் தீபன், ரவீனா, ஓட்டேரி சிவா, சில்மிஷம் … Read more