துணிவு, வாரிசு படங்களுக்கு இந்த 3 நாட்கள் மட்டும் சிறப்பு கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி
தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்று, ‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ படங்களுக்கான கூடுதல் சிறப்புக் காட்சி 3 நாட்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படமும், அஜித்தின் ‘துணிவு’ படமும் பொங்கலை முன்னிட்டு நேரடியாக இன்று வெளியிடப்பட்டுள்ளன. இருநடிகர்களின் படங்கள் தனித்தனியாக வெளியிடப்பட்டாலே கொண்டாட்டமாக இருக்கும் நிலையில், ஒரேநாளில் இரு படங்களும் வெளியிடப்பட்டுள்ளதால், ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஏனெனில் சிறப்புக் காட்சிகளை பார்த்துவிடலாம் என ரசிகர்களும், சிறப்புக் … Read more