பயம் இல்லாமல் பால் அபிஷேகம்… துணிவு படத்தை துணிவுடன் கொண்டாடும் அஜித் ரசிகர்கள்

Thunivu Movie Celebration : தமிழ் திரையுலகில் நாயகர்கள் இடையே போட்டி என்பது இயல்பானதுதான். அந்த காலத்தில் தியாகராஜ பாகவதர் – கிட்டப்பா, எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல் என்ற போட்டி தற்போது அஜித் – விஜய் என ரசிகர்கள் இடையே போட்டி உச்சத்தை அடைந்துள்ளது.  உச்ச நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானால் இரு தரப்புக்கும் இடையே பரபரப்பு தொற்றிக்கொள்ளும். பல ஆண்டுகளுக்குப் பிறகு பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடித்துள்ள துணிவு படமும், விஜய் … Read more

விஜய்யின் வாரிசு படம் வெளியாவதில் புதிய சிக்கல்!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ படம் தெலுங்கில் ‘வாரசுடு’ என்கிற பெயரில் வெளியாகவுள்ளது.  வரும் பொங்கல் பண்டிகையையொட்டி வாரிசு படத்தை ஜனவரி 11ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது.  ஆனால் ‘வாரிசு’ படத்தோடு மோதவிருந்த துணிவு படத்தின் வெளியீட்டு தேதியினை படக்குழு ஒரு நாள் முன்னதாக அதாவது ஜனவரி 11ம் தேதி வெளியிட முடிவு செய்தது.  இதனால் ‘வாரிசு’ படக்குழுவும் ‘துணிவு’ படம் வெளியாகும் அதே தேதியில், ஜனவரி 11ம் தேதியே படத்தை வெளியிடுகிறது.  … Read more

கள்வன் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்ட தனுஷ்!…

பி.வி.ஷங்கர் படத்தில் பாரதிராஜாவுடன் ஜி.வி. பிரகாஷ் இணைந்து நடிக்க உள்ளதாக தனுஷ் தெரிவித்துள்ளார். அறிமுக இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கள்வன். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இவர் நடித்த ‘பேச்சுலர்’, ‘ஐங்கரன்’, ‘ஜெயில்’ போன்ற படங்கள் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இவர் அறிமுக இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ‘கள்வன்’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஆக்சஸ் பிலிம் … Read more

ஆளே மாறிப்போன சமந்தா: அதிர்ச்சியில் ரசிகர்கள்

சமீபத்தில், சமந்தா நடித்த 'யசோதா' படம், ஐந்து மொழிகளில் வெளியானது. அடுத்து, 'சாகுந்தலம்' படம் வெளியாக உள்ளது. விஜய் தேவரகொண்டாவுடன், 'குஷி' என்ற படத்திலும் சமந்தா நடித்து வருகிறார். இதனிடையே, 'மயோசிடிஸ்' என்ற அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு உள்ள சமந்தா, 'யசோதா' பட டப்பிங்'கின் போதே சிகிச்சை பெறத் துவங்கினார். தொடர் சிகிச்சையில் சமந்தா தேறி வந்தாலும், படப்பிடிப்பில் பங்கேற்காமல் இருந்தார். இந்நிலையில், நோயின் தீவிரத்தைத் தொடர்ந்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி, உயர்ரக சிகிச்சைக்காக … Read more

நெஞ்சு வலியா? : வதந்திக்கு நடிகர் விமல் முற்றுப்புள்ளி

நடிகர் விமல், நடித்த பசங்க, களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது துடிக்கும் கரங்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் விமல் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக நடிகர் விமல், தன் சமூக வலைதளப் பக்கத்தில், ‛நலமுடன் படப்பிடிப்பில்' எனப் பதிவிட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதன்மூலம் நெஞ்சுவலி என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

'வாரிசு, துணிவு' – அதிகாலை காட்சிகளுக்கு தியேட்டர்கள் தயக்கம்

ஜனவரி 11ம் தேதி விஜய் நடித்துள்ள 'வாரிசு', அஜித் நடித்துள்ள 'துணிவு' ஆகிய படங்கள் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் இந்த இரண்டு படங்களும் வெளியாக உள்ளது. பொதுவாக முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படங்களுக்கு அதிகாலை 4 மணிக்கே சிறப்புக் காட்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், 'வாரிசு, துணிவு' படங்களின் சிறப்புக் காட்சிகளை அதிகாலை 4 மணிக்கு நடத்த தியேட்டர்காரர்கள் தயக்கம் காட்டுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஒரே சமயத்தில் இரண்டு படங்களையும் … Read more

வாரிசு படத்தின் புரொடக்சன் டிசைனர் சுனில் பாபு மாரடைப்பால் மரணம்!

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 66வது படம் வாரிசு. தில்ராஜூ தயாரித்து உள்ள இந்த படம் 80 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். தமன் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவரும் நிலையில் வருகிற 11ம் தேதி வாரிசு படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தற்போது வாரிசு படத்தில் புரொடக்சன் … Read more

விஜய் படத்தை அடுத்து ஆர்யா படத்தில் இணைந்த மாஸ்டர் மகேந்திரன்!

கார்த்தி நடித்த விருமன் படத்தை அடுத்து ஆர்யா நடிப்பில் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தை இயக்குகிறார் முத்தையா. ஆக்சன் கதையில் உருவாகி வரும் இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்த சித்தி இத்னானி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவில்பட்டியில் நடந்து வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் ஒரு கருப்பு நிற உடையில் நாற்காலியில் ஆர்யா அமர்ந்திருப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இந்த படம் பல்வேறு … Read more

ரஜினியின் ஜெயிலர் படத்தில் மலையாள நடிகர் மோகன்லால்!

அண்ணாத்த படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தில் அவருடன் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அதோடு தமன்னா ஹீரோயினாக ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக கூறப்படும் நிலையில், ஏப்ரல் மாதத்தோடு படப்பிடிப்பை நடத்தி முடிக்கவும் இயக்குனர் நெல்சன் திட்டமிட்டு இருக்கிறார். அதோடு ஏப்ரலில் இசை வெளியீட்டு … Read more

அஜித் 62வது படத்தின் நாயகி காஜல் அகர்வால்?

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு படம் வருகிற 11ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் அடுத்தபடியாக அஜித் 62வது படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 17ம் தேதி தொடங்கப்பட உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த அஜித் 62வது படத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்த நயன்தாராவே மீண்டும் நாயகியாக நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாக இப்படத்தில் திரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்தன. ஆனால் … Read more