அன்பை வெளிப்படுத்த அஞ்ச வேண்டாம் – கிருத்திகா உதயநிதி பதிவு

உதயநிதி – கிருத்திகா தம்பதியரின் மகன் இன்பநிதி மேற்படிப்பிற்காக லண்டனில் உள்ளார். இந்நிலையில் ஒரு பெண்ணுடன் இன்பநிதி நெருக்கமாக இருக்கும் போட்டோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதை வைத்து நிறைய விமர்சனங்களும், டிரோல்களும் அவர் மீது முன் வைக்கப்பட்டன. இந்நிலையில் இந்த விவகாரத்தை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக பதிவுட்டுள்ள கிருத்திகா, ‛‛அன்பையும், அதை வெளிப்படுத்தவும் அச்சப்பட வேண்டாம். இயற்கையை அதன் முழு மேன்மையுடன் புரிந்து கொள்ளும் வழிகளில் இதுவும் ஒன்று'' என குறிப்பிட்டுள்ளார்.

உத்தம வில்லனால் நஷ்டம் அடைந்த லிங்குசாமிக்கு கமல் உதவி

2015ம் ஆண்டு வெளியான படம் உத்தம வில்லன். ரமேஷ் அரவிந்த் இயக்கிய இந்த படத்தில் கமல், ஊர்வசி, ஜெயராம், பூஜா குமார், பார்வதி, நாசர், ஆண்ட்ரியா உள்பட பலர் நடித்திருந்தார்கள். ராஜ்கமல் பிலிம்சுடன் திருப்பதி பிக்சர்சும் இணைந்து தயாரித்தது. பெரிய பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் பெரும் தோல்வி அடைந்தது. இதில் முதலீடு செய்த இயக்குனர் லிங்குசாமி பெரும் நஷ்டத்தை அடைந்தார். அதன்பிறகு அவரால் பொருளாதார ரீதியாக எழுந்து நிற்க முடியவில்லை. இந்த நிலையில் உத்தம வில்லன் … Read more

'வாரிசு' திடீர் அறிவிப்பு, வெளிநாடு தியேட்டர்களில் குழப்பம்

விஜய் நடித்துள்ள 'வாரிசு' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பை நேற்று டிரைலருடன் வெளியிடாமல் நள்ளிரவில் தனியாக அறிவித்தார்கள். முன்னதாக 'வாரிசு' படம் ஜனவரி 12ம் தேதிதான் வெளியாகும் என வெளிநாட்டில் உள்ள தியேட்டர்களில், குறிப்பாக, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பிரிமீயர் காட்சிகளுக்கான முன்பதிவை ஆரம்பித்தனர். அந்த இரண்டு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் தீடீரென பட வெளியீட்டுத் தேதியை ஜனவரி 11 என அறிவித்தது. இதனால், பிரிமீயர் காட்சி பார்க்கவும், … Read more

ஓடிடி தளத்தில் மிலிக்கு முதலிடமா?

மலையாளத்தில் வெளிவந்த ஹெலன் படம் தமிழில் அன்பிற்கினியாள் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதே படத்தின் இந்தி ரீமேக்தான் மிலி. இதில் ஜான்வி கபூர் நடித்திருக்கிறார். ஒரு பாஸ்ட் புட் கடையின் பிரீசர் அறைக்குள் மாட்டிக் கொள்ளும் ஒரு பெண் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறாள் என்கிற கதை. முதலில் தியேட்டரில் வெளியாகி பின்னர் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியான இந்த படம் கடந்து ஆண்டு அதிகம் பார்க்கப்பட்ட பாலிவுட் படம் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. இது … Read more

விஜய்யை மீண்டும் புகழ்ந்த ஷாரூக்கான்

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஷாரூக்கான் நேற்று ரசிகர்களுடன் டுவிட்டரில் 'சாட்' செய்தார். அப்போது பல்வேறு விதமான கேள்விகளை ரசிகர்கள் அவரிடம் கேட்டனர். ஒரு ரசிகர், 'விஜய்யைப் பற்றிச் சொல்லுங்கள்,” என்று கேட்டதற்கு “அவர் மிகவும் இனிமையானவர், அமைதியானவர். எனக்கு அன்பான டின்னரையும் அளித்தார்,” என்று புகழ்ந்து பதிலளித்துள்ளார். இதற்கு முன்பு கடந்த நவம்பர் மாதம் ரசிகர்களுடன் 'சாட்' செய்த போதும் விஜய் பற்றிய ரசிகர் ஒருவரின் கேள்விக்கு, “விஜய் மிகவும் கூல் ஆன மனிதர்” என்று … Read more

8 ஆண்டுகளுக்கு பிறகு நட்சத்திர ஜோடிக்கு ஆண் குழந்தை!!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதில் சரவணன் ரோலில் மிர்ச்சி செந்தில் நடித்தார். இவருக்கு ஜோடியாக ஸ்ரீஜா சந்திரன் மீனாட்சியாக நடித்தார். கேரளாவை சேர்ந்த இவர், இதற்கு முன்பு மலையாளத்தில் ஒரு சில படங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் தமிழிலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உருவானது. ரீல் ஜோடியான இவர்கள் நிஜத்தில் இணைந்தாலும் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வந்தனர். … Read more

ராஷ்மிகாவுக்கு மறைமுகமாக அறிவுரை கூறிய கிச்சா சுதீப்

குறுகிய காலத்தில் தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையாக மாறிவிட்டார் ராஷ்மிகா மந்தனா. கன்னட திரையுலகில் அறிமுகமான இவர் தனது தாய்மொழியை ஒதுக்கிவிட்டு மற்ற மொழிகளில் மட்டும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் என்றும் கன்னட திரையுலகை மதிப்பதில்லை என்றும் இவர் மீது குற்றச்சாட்டு உண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற காந்தாரா திரைப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை என்று இவர் கூறியது கன்னட திரையுலகில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ராஷ்மிகாவை திரையுலகிற்கு … Read more

ஜெயம் ரவியை சந்தித்த லோகேஷ் கனகராஜ்

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். சென்னையில் படப்பிடிப்பு துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவியை சமீபத்தில் சந்தித்து பேசி உள்ளார் லோகேஷ் கனகராஜ். அப்போது ஒரு கதையை அவரிடம் கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை நடிகர் ஜெயம் ரவி ஒரு ஊடகத்தின் பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு அகிலன் திரைப்படத்தின் … Read more

அஜித்தின் ‘துணிவு’ ட்ரெய்லர் சாதனையை முறியடிக்காத விஜய்யின் ‘வாரிசு’!

அஜித்தின் ‘துணிவு’ படத்தின் ட்ரெய்லரை சாதனையை ஒருநாளில் விஜய்யின் ‘வாரிசு’ படம் முறியடிக்க முடியவில்லை. அதேநேரத்தில் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் சாதனையை ‘துணிவு’ படத்தின் ட்ரெய்லர் நெருங்கி வருகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அஜித்தின் 61-வது படமாக உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படத்தின் ட்ரெய்லர் கடந்த மாதம் 31-ம் தேதி யூட்யூப் தளத்தில் வெளியானது. வெளியான ஒருமணி நேரத்தில் 3 மில்லியன் பார்வையாளர்களையும், 24 மணிநேரத்தில் 30 மில்லியனுக்கு கூடுதலான பார்வையாளர்களையும் பெற்றதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் போனி … Read more

யோகிபாபு நடித்துள்ள 'பொம்மை நாயகி'.. ரிலீஸ் தேதி வெளியீடு

காமெடி நடிகராக நடித்து வந்த யோகிபாபு, தற்போது கதாநாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‛பொம்மை 'நாயகி'. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் தன் மகளுக்காக போராடும் ஒரு தந்தையின் கதை தான் இப்படம். 'சூப்பர் சிங்கர்' புகழ் ஸ்ரீமதி யோகிபாபுவின் மகளாக நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் ஷான் இயக்கி வருகிறார். சுந்தரமூர்த்தி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் வருகின்ற … Read more