அது உண்மையல்ல – போனி கபூர் பதிவு

ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதையடுத்து லவ் டுடே என்ற படத்தை இயக்கி தானே ஹீரோவாகவும் நடித்தார். ஏழு கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகி கிட்டத்தட்ட ரூ.75 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து சத்யராஜ், இவானா, ராதிகா, யோகி பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். லவ் டுடே படத்தின் … Read more

கமல்ஹாசனை இயக்க ராஜமவுலி வாய்ப்பு?

பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கிய ராஜமவுலி அடுத்தபடியாக மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். அந்த படம் நான்கு பாகங்கள் வரை உருவாக வாய்ப்பு இருப்பதாக அப்படத்திற்கு கதை எழுதி வரும் ராஜமவுலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத் சில தினங்களுக்கு ஒரு தகவல் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் கமல்ஹாசனும் ராஜமவுலியும் சந்தித்துக் கொண்டதாகவும், அப்போது கமல்ஹாசனை வைத்து ஒரு படம் இயக்க ராஜமவுலி பேசி உள்ளதாகவும் தகவல் … Read more

சமந்தாவின் சாகுந்தலம் பிப்ரவரி 17ல் ரிலீஸ்!

சமந்தா கதையின் நாயகியாக நடித்த யசோதா படம் சமீபத்தில் வெளியான நிலையில் குஷி, சாகுந்தலம் போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் தற்போது சாகுந்தலம் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்த படம் கடந்த நவம்பர் நான்காம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தாமதமாவதாக சொல்லி ரிலீஸ் செய்தியை ஒத்தி வைத்திருந்தார்கள். இந்த நிலையில் இன்றைய தினம் சாகுந்தலம் படம் வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி திரைக்கு வருவதாக … Read more

சீனியர் ஹீரோக்களுடன் நடிப்பது ஏன்? – ஸ்ருதிஹாசன் அளித்த அதிரடி பதில்

சிரஞ்சீவி உடன் வால்டேர் வீரய்யா, பாலகிருஷ்ணா உடன் வீர சிம்ஹா ரெட்டி, பிரபாஸ் உடன் சலார் போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இவற்றில் சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள படங்கள் வருகிற சங்கராந்திக்கு திரைக்கு வருகிறது. இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் அளித்த ஒரு பேட்டியில் சீனியர் ஹீரோக்களுடன் ஜோடியாக நடிப்பது ஏன்? என்று ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர், நடிப்பு துறையில் வயது குறைந்தவர்கள் வயது அதிகமானவர்கள் என்ற வித்தியாசம் … Read more

இசைக்கு பார்வை குறைபாடு பொருட்டல்ல.. 30 இசைக்கருவிகளை வாசித்து அசத்தும் காட்சன் ரூடுல்ஃப்!

பார்வை குறைபாடுடைய வளரும் இசை கலைஞர் காட்சன் ரூடுல்ஃப். அவர் கிட்டத்தட்ட 30 இசைக்கருவியை வாசித்து வருகிறார். இவரது தந்தை ஒரு கட்டிட வடிவமைப்பாளர். இவர் சிறு வயதில் தனது கைப்பேசியில் இசையை இசைத்ததும் இசையின் மேல் இவருக்கு இருந்த ஆர்வத்தை பார்த்த இவரது தந்தை இவருக்கு முறையாக இசை பயிற்சி அளிக்க இவருக்கான இசைபள்ளியை தேடினார். ஆனால் கிடைக்கவில்லை. அதே சமயம், இவருக்கு இசையின் மேல் உள்ள ஆர்வத்தால், தனது இசை கருவியைக்கொண்டு தானாக இசையை … Read more

விஜய்யின் 67 படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

கடந்தாண்டு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து அவர் வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். பொங்கலுக்கு படம் வெளியாக உள்ளது. இந்த படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் 67 வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். மாஸ்டர் படத்திற்கு பின் மீண்டும் இவர்கள் இணைகின்றனர். அனிருத் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது. திரிஷா, சஞ்சய் தத், இயக்குனர் மிஷ்கின், கவுதம் மேனன் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் … Read more

சுவாரசியமான மேக்கிங் ஓகே..லாஜிக் மட்டும் சேர்ந்திருந்தால்..- ’டிரைவர் ஜமுனா’ திரைப்பார்வை

தவறான நபர்களை காரில் ஏற்றிச்செல்லும் டிரைவர் ஜமுனா என்னென்ன பிரச்னைகளை சந்திக்கிறார் என்பதே இந்த டிரைவர் ஜமுனா. தன் அப்பாவின் மரணத்துக்குப் பின்னர், கார் ஓட்டுநராக குடும்பத்தை நடத்திவருகிறார் ஜமுனா. தம்பியும் வீட்டைவிட்டு ஓடிவிட, நோயுற்ற அம்மாவை பார்த்துக்கொள்ளும் பொறுப்பும் மொத்தமாய் ஜமுனாவின் மேல் விழுகிறது. இப்படியானதொரு சூழலில் ஏற்கெனவே பிரச்னை செய்துவிட்டு, அடுத்த பிரச்னைக்கு தயாராகும் ஒரு கூட்டம் கார் புக் செய்கிறார்கள். அந்த புக்கிங் நாம் எதிர்பார்த்ததைப் போலவே ஜமுனாவின் காருக்கு வருகிறது. பணத்துக்காக … Read more

இயக்குனரான கதாசிரியர்

காக்கா முட்டை, குற்றமே தண்டனை படங்களின் கதை, திரைக்கதை எழுதியவர் ஆனந்த் அண்ணாமலை. மேலும் திரைப்படம் தொடர்பான நிறைய புத்தகங்களும் எழுதி உள்ளார். தற்போது ஆனந்த் அண்ணாமலை காகங்கள் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் ஆகியிருக்கிறார். இந்த படத்தில் கிஷோர், லிஜோமோல் ஜோஸ், விதார்த், குரு சோமசுந்தரம், யோகி பாபு, இளவரசு, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சரவணன் இளவரசுவின் ஒளிப்பதிவில், எம்.எஸ்.கிருஷ்ணாவின் இசையில், படம் உருவாகிறது. படம் பற்றி ஆனந்த் அண்ணாமலை கூறியதாவது: நான் எனது … Read more

700 எபிசோட்களை கடந்த பாக்யலட்சுமி: கேக் வெட்டி கொண்டாட்டம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. பெங்காலி மொழியில் ஒளிபரப்பாகி வரும், ஸ்ரீமோகி என்ற சீரியலின் ரீமேக் தொடர் இது. இரண்டு மொழிகளிலுமே நல்ல வரவேற்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. பெற்றோரின் வற்புறுத்தல் காரணமாக, காதலித்த ராதிகாவை திருமணம் செய்து கொள்ளாமல், பெற்றவர்கள் நிச்சயித்த பாக்யலட்சுமியை திருமணம் செய்து கொண்டு வாழும் கோபிக்கு, மூன்று பிள்ளைகள் பிறந்து வளர்ந்த பிறகு, தன்னுடைய பழைய காதலி ராதிகாவுடன் மீண்டும் நட்பு ஏற்படுகிறது. ராதிகா கணவரை பிரிந்து வாழ்கிறவர். இவர்களின் … Read more

சின்னத்திரைக்கு வந்தார் பொன்னியின் செல்வன்

தமிழ் சினிமாவின் பிரமாண்ட படைப்பாக வெளிவந்தது பொன்னியின் செல்வன். கல்கியின் புகழ்பெற்ற வரலாற்று புதினத்தை மணிரத்னம் திரையில் கொண்டு வந்தார். இரண்டு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது, பெரிய வரவேற்பையும், வசூலையும் குவித்தது. தற்போது இந்த படத்தை ஓடிடி தளத்திலும் பார்க்கலாம். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 8ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்புகிறது. பொன்னியின் செல்வனில் விக்ரம், … Read more