மோகன்ராஜாவுடன் 3வது முறையாக இணைந்த நயன்தாரா

மோகன்ராஜாவுடன் 3வது முறையாக இணைந்த நயன்தாரா

மோகன்ராஜாவுடன் 3வது முறையாக இணைந்த நயன்தாரா

2/18/2022 5:18:05 PM

மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன்’மற்றும் வேலைக்காரன் படங்களில் நடித்த நயன்தாரா தற்போது அவர் இயக்கும் தெலுங்கு படமான காட்பாதர் படத்திலும் நடித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ’லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக் இது. தற்போது இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. மோகன்லால் நடித்த கேரக்டரில் சிரஞ்சீவி நடிக்கிறார். மஞ்சுவாரியர் நடித்த கேரக்டரில் நயன்தாரா நடிக்கிறார். சில மாதங்களாக அவர் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நயன்தாரா நடித்தார். தற்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்து விட்ட நிலையில் அவர் மோகன் ராஜாவுக்கு நன்றி தெரிவித்து விட்டு கேரளா சென்று விட்டார்.  இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார் நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.