கடைசி விவசாயியை கொண்டாட வேண்டும்: மிஷ்கின்

கடைசி விவசாயியை கொண்டாட வேண்டும்: மிஷ்கின்

கடைசி விவசாயியை கொண்டாட வேண்டும்: மிஷ்கின்

2/18/2022 5:28:32 PM

காக்கமுட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை படங்களை இயக்கிய மணிகண்டன். தற்போது கடைசி விவசாயி படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் சமீபத்தில் தியேட்டரில் வெளிவந்தது. படத்தை பற்றி பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார் இயக்குனர் மிஷ்கின். அதில் கடைசி விவசாயி படத்தை நாம் கொண்டாட வேண்டும் என்று  என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: கடந்த 100 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மிகச் சிறந்த படமென்று கடைசி விவசாயி படத்தை சொல்வேன்.  நானும் ஒரு பத்து படங்களை எடுத்துள்ளேன். இவை அனைத்தையும் விட கடைசி விவசாயி மிகச் சிறந்த படம் என்று சொல்வேன்.  20 வருடங்களில் நாம் எவ்வளவு  படங்களை பாத்திருப்போம், மோசமான படங்களையும் நாம் கொண்டாடி தீர்த்திருக்கிறோம். இந்த படத்தையும், இந்த படத்தை இயக்கிய எம்.மணிகண்டனை கொண்டாடவில்லை என்றால் நமக்குள் எந்த ஆன்மீக தன்மையும் இல்லை என்று அர்த்தம்.

இந்த படத்தை நாம் அனைவரும் குடும்பத்தோடு சென்று பார்க்க வேண்டும். இது வாழ்க்கையில் பார்க்க வேண்டிய முக்கியமான படம் என்று நாம் நம் குழந்தைகளிடம் சொல்ல வேண்டும். இந்திய மக்களுக்காக, இந்நாட்டு மண்ணுக்காக எடுக்கப்பட்ட படம் இது. இப்படத்தில் நடித்த முதியவரை பார்க்கும்போது எனக்கு ஹாலிவுட் நடிகர் கிளின்ட் ஈஸ்ட்வுட் தான் நினைவுக்கு வந்தார். இப்படத்தில் கிளின்ட் ஈஸ்ட்வுட் நடித்திருந்தால் 20 ஆஸ்கர் விருதுகள் கிடைத்திருக்கும். இப்படத்தை அனைத்து உதவி இயக்குனர்களும், அனைத்து இயக்குனர்களும் பார்க்க வேண்டும். இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரது கால்களையும் நான் முத்தமிடுகிறேன். இவ்வாறு மிஷ்கின் பேசியிருக்கிறார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.