மக்களவை தேர்தல்2024: உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை முதல் 2 நாள் தமிழ்நாட்டில் பிரசாரம்!

சென்னை: மக்களவை தேர்தலையொட்டி, பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை முதல் 2 நாட்கள் தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அப்போது பல இடங்களில் ரோடு ஷோ நடத்துகிறார். நாட்டின்  18வது மக்களவை அமைக்கப்படுவதற்காக மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  அதன்படி, தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில்  முற்கட்ட  பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி வாக்குப்பதிவு  நடை பெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தில் … Read more

இந்த சமுதாயமே இப்படித்தான்! கார்த்தியாயினி பேசும் போதே.. வாயை மூடும்மா! குறுக்கிட்ட விசிக நிர்வாகி

சிதம்பரம்: சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை பார்த்து விசிக நிர்வாகிகள் வாயை மூடும்மா என்று கூறியதும் அதற்கு பதிலடியாக “இந்த” சமுதாய மக்களே இப்படித்தான் என்று கார்த்தியாயினி கூறியதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக சார்பாக சிதம்பரம் தொகுதிக்கு பி கார்த்தியாயினி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயரான கார்த்தியாயினி கடந்த Source Link

மணிப்பூர் கலவரம் தொடர்பான ஆவணப்படம்: தேவாலயத்தில் திரையிடப்பட்டதால் பரபரப்பு

பெரும்பாவூர், கேரளா ஸ்டோரிஸ் திரைப்படம் கேரளாவில் திரையிடப்படுவதற்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இடுக்கி மறை மாவட்டத்தில் உள்ள ஜீரோ மலபார் தேவாலயத்தில் பங்கு தந்தை ஜீன்ஸ் காரக்கட் என்பவர் மூலம் கேரளா ஸ்டோரிஸ் திரைப்படம் முதல் முறையாக வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக விமர்சனம் எழுந்ததால், இந்த படத்தை திரையிடக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது. இதை மீறி கண்ணூர் மறைமாவட்டத்தில் உள்ள செம்பண்தொட்டி தேவாலயத்தில் கேரளா ஸ்டோரிஸ் படம் திரையிடப்பட்டது. இதேபோல் எர்ணாகுளத்தில் உள்ள சில தேவாலயங்களில் … Read more

ஏதெர் 450S, 450X மற்றும் Rizta எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் ரேஞ்ச், சிறப்புகள் மற்றும் ஆன்ரோடு விலை பட்டியல்

இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஏதெர் எனர்ஜி (Ather Energy) நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற மாடல்களின் சிறப்புகள் மற்றும் ஆன் ரோடு விலை பட்டியலை முழுமையாக அறிந்து கொள்ளலாம். ஏதெர் எனர்ஜி மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் ஸ்கூட்டர் வடிவமைப்பினை ஏற்படுத்தி 450 சீரியஸ் மாடலானது அமோக வரவேற்பினை சந்தையில் பெற்று நாட்டின் மூன்றாவது பெரிய எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பாளராக இந்நிறுவனம் விளங்குவதற்கு ஒரு காரணமாக இருக்கின்றது. தற்பொழுது புதிதாக வந்துள்ள ஏத்தர் Rizta … Read more

மும்பை குடியிருப்புகள், கைவிடப்பட்ட தொழிற்சாலைகளில் போதைப் பொருள் தயாரிப்பு! – போலீஸார் அதிர்ச்சி

ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு அங்கு போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதால், அங்கிருந்து மும்பைக்கு வரக்கூடிய சரஸ் என சொல்லப்படும் போதைப்பொருள் தடைபட்டுள்ளது. இதனால் மும்பையில் போதைப்பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்கிறார்கள். அந்த வெற்றிடத்தை போக்க எம்.டி என்ற மலிவு விலை போதைப்பொருள் மார்க்கெட்டிற்கு வந்துள்ளது. எம்.டி.போதைப்பொருள் தயாரிப்பது மிகவும் எளிது, ஒரு சிறிய அறையில் அதனை தயாரித்துவிட முடியும் என்கிறார்கள். இதனால் எம்.டி போதைப்பொருள் மகாராஷ்டிரா தயாரிப்பு முழுக்க விரிவடைந்துள்ளது. குறிப்பாக … Read more

அரசியல் கட்சிகள் பேனர்கள் வைக்க கடும் கட்டுப்பாடு! தேர்தல் கமிஷன் எச்சரிக்கை…

டெல்லி: அரசியல் கட்சிகள் வைக்கும் பேனர்களில் அச்சகத்தின் பெயர், பேனர் வைப்பவர் பெயர் தொலைபேசி எண், மற்றும் தேர்தல் ஆணைய ஒப்புதம் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது அரசியல் கட்சியினரிடையே எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் வரும் 19ந்தேதி தொடங்க உள்ள நிலையில், அனல்பறக்கும் தேர்தல் பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலுக்காக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும், தங்களது வேட்பாளர்களை ஆதரித்து,  விளம்பர … Read more

அரசியல் கட்சிகள் வைக்கும் பேனர்களில் அச்சகத்தின் பெயர் இடம்பெற வேண்டும் – தேர்தல் கமிஷன் உத்தரவு

புதுடெல்லி, நாடாளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் விளம்பர பலகைகள், பேனர்கள், சுவரொட்டிகள், பதாகைகள் மூலம் விளம்பரம் செய்து வருகிறார்கள். ஆனால் இந்த விளம்பர பொருட்களில் அவற்றை அச்சிட்ட அச்சகத்தின் பெயரோ, வெளியீட்டாளரின் பெயரோ இடம்பெறுவதில்லை என்று புகார்கள் எழுந்தன. ஆம் ஆத்மி கட்சி சார்பில் தேர்தல் கமிஷனிடம் இதுதொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தியது. அதன் அடிப்படையில், தேர்தல் கமிஷன் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- விளம்பர … Read more

"சேசுகிட்ட இனி உன் காட்டுல மழைடான்னு சொன்னாங்க! ஆனா…" – வருந்தும் `சிறகடிக்க ஆசை' பழனியப்பன்

விஜய் டிவியில் ஒளிபரப்பான `லொள்ளு சபா’ நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பரிச்சயமானவர் `லொள்ளு சபா’ பழனியப்பன். `கல்யாண வீடு’ தொடரில் நடித்திருந்தவர் கொரோனாவிற்குப் பிறகு தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `சிறகடிக்க ஆசை’ தொடரில் நடிக்கிறார். அவரிடம் பேசினோம். `சிறகடிக்க ஆசை’ பழனியப்பன் “நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு நடிக்கப் போறேன்னு கிளம்பி வந்துட்டேன். ஆனா, எந்தக் கம்பெனியிலும் நம்மள கூப்பிடல. விஜய் சாருடைய `மாண்புமிகு மாணவன்’ படத்துல கம்பெனி ஆர்ட்டிஸ்ட் ஆக பத்து நாள் போனேன். அதுதான் என் முதல் படம். … Read more

சபரிமலை ஐயப்பன் கோவில் சித்திரை மாத பூஜைக்காக நடை திறப்பு

சபரிமலை நேற்று சபரிமலை ஐயப்பன் கோவில் சித்திரை மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு மாதமும் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் சபரிமலையில் நடை திறந்து பூஜை, வழிபாடுகள் நடைபெறும். மண்டல மகரவிளக்கு சீசன், பங்குனி உத்திரம் திருவிழா நாட்கள் , விஷு, ஓணம் பண்டிகை உட்பட விசேச நாட்களில், சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.. நேற்று மாலை 5 மணிக்குச் சித்திரை மாத பூஜை மற்றும் … Read more

திருமணம் செய்யாமல் லிவ்-இன் உறவு: காதலியை கொன்று பீரோவில் அடைத்த வாலிபர்

புதுடெல்லி, டெல்லி துவாரகா அருகே உள்ள தாப்ரி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ருக்சர் ராஜ்புத் (வயது 26) என்ற பெண், விபல் டெய்லர் என்பவருடன் திருமணம் செய்யாமல் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் ஒரு வாரத்துக்கு முன்பு ருக்சர் கொலை செய்யப்பட்டு பீரோவில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இது தொடர்பாக காதலன் விபல் தனது மகளை கொன்றுவிட்டதாக ருக்சரின் தந்தை போலீசில் புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் … Read more