கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை – நெல்லை சிறப்பு ரயில்

திருநெல்வேலி கோடை விடுமுறையையொட்டி சென்னை மற்றும் நெல்லைஇடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. பெரும்பாலானோர் கோடை விடுமுறையையொட்டி தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அதிலும் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அதிக அளவு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் அவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள்கள் மற்றும் ரயில்கள் இயக்கப்படும். தென்னக ரயில்வே கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது. அதன்படி சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் இந்த ரயில் வியாழக்கிழமை … Read more

பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில்.. பெண்ணுக்கு முத்தம் கொடுத்த பாஜக வேட்பாளர்.. வெடித்த சர்ச்சை

கொல்கத்தா: பிரச்சாரத்தின் போது பெண் ஒருவருக்குப் பொதுவெளியில் பாஜக வேட்பாளர் முத்தமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தில் இப்போது லோக்சபா தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. அங்கே திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ்- இடதுசாரிகள் கூட்டணி என்று கடுமையான போட்டி நிலவுகிறது.   இதற்கிடையே மேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளர் ஒருவர் Source Link

2024 ஜாவா பெராக், 42 பாபர் விற்பனைக்கு வெளியானது

2024 ஆம் ஆண்டிற்கான ஜாவா பெராக் மற்றும் 42 பாபர் என இரு மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. புதிய பெராக்கில் ஸ்டைலிஷான மேம்பாடுகளுடன் எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் இல்லை. 42 பாபர் பைக்கில் இரண்டு புதிய வேரியண்ட் மற்றும் அலாய் வீல் கொண்ட மாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளது. பொதுவாக 334 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 29.92ps மற்றும் 32.74Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.  இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இரு பைக்குகளும் பொதுவாக … Read more

வேலூர்: ‘‘நான் விரித்த கம்பளத்தில்தான் மோடி வருகிறார்!’’ – சொல்கிறார் கதிர் ஆனந்த்

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம் உட்பட கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, வேலூர் கோட்டை மைதானத்தில் நாளை நடைபெறவிருக்கும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டுப் பேசுகிறார். வேலூர் அருகேயுள்ள அப்துல்லாபுரம் விமான நிலையத்துக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கும் பிரதமர் மோடி, அங்கிருந்து சாலை மார்க்கமாக கோட்டை மைதானத்தை வந்தடைகிறார். பிரதமரின் வருகையையொட்டி, பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வேலூர் கொண்டுவரப்பட்டிருக்கிறது. பிரதமரின் வருகைக் குறித்து நம்மிடம் பேசிய வேலூர் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த், … Read more

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆர் எம் வீரப்பன் மறைவுக்கு இரங்கல்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன்னாள் அமைச்சர் ஆர் எம் வீரப்பன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.  இன்று தமிழக முன்னாள் அமைச்சரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் காலமானார். 98 வயதாகும் ஆர் எம் வீரப்பன் வயது மூப்பு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த நிலையில் அவருக்கு இன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டது.  உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர்.எம்.வீரப்பன், சிகிச்சை பலனளிக்காமல் இன்று பிற்பகல் உயிரிழந்தார். முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு … Read more

Basalt: எஸ்யூவி வாங்கப் போறீங்களா? சிட்ரனில் இருந்து புது கூபே வருது! ஆனால் விலை பயமுறுத்துமோ?

சிட்ரனில் இருந்து பசால்ட் என்றொரு கார் வருவதாக சில மாதங்களுக்கு முன்பிருந்தே செய்திகள் வந்து கொண்டிருந்தன. நம் மோட்டார் விகடன் வாசகர்கள் சிலரே பசால்ட் கார், சென்னையில் டெஸ்ட் டிரைவ் செய்யப்பட்டு வருவதைப் படம் எடுத்து அனுப்பி வந்தனர். உண்மையில் பசால்ட் என்கிற காரின் முந்தைய பெயர் C3X என்பதாகத்தான் இருந்தது. அந்தக் காருக்குத்தான் இப்போது Basalt என்று நாமம் சூட்டியிருக்கிறது சிட்ரன் நிறுவனம். இப்போது பசால்ட் காரை, நமது வாசகரான ஸ்ரீராம் என்பவர், ஸ்பை புகைப்படங்கள் … Read more

முதுபெரும் அரசியல்வாதி ஆர்.எம்.வீரப்பன் காலமானார்!

சென்னை: தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல்வாதிகளில் ஒருவரான முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார். அவருக்கு வயது 98. அதிமுக ஆட்சி காலத்தின் போது, மறைந்த எம்.ஜி.ஆரின் வலதுகரமாக செயல்பட்டதுடன், மறைந்த ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் அமைச்சராக பணியாற்றியவரும், திரைப்பட தயாராப்பாளருமான, முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார். அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆர். கழகம் என்ற பெயரில் கட்சியை நடத்தி வந்த நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலமானாதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வயது … Read more

கடலூர்: பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது! – என்ன காரணம்?!

கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ம.க வேட்பாளராக போட்டியிடும் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான், மாவட்டம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று தென்னம்பாக்கம் கிராமத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவர், பிரசித்தி பெற்ற கோயிலான அழகு முத்து அய்யனார் கோயிலுக்குச் சென்றார். அப்போது அங்கு மரத்தடியில் அமர்ந்து கிளி ஜோசியம் பார்த்துக் கொண்டிருந்தவரிடம் சென்ற தங்கர் பச்சான், `இந்த தேர்தலில் நான் வெற்று பெறுவேனா என்று பார்த்துச் சொல்லுங்கள்’ என்று கேட்டார். உடனே, `என் கிளி … Read more

பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது!

கடலூர்: கடலூர் தொகுதியில் போட்டியிடும்  பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது செய்யப்பட்டு உள்ளார். தமிழ்நாடுஅரசின் இந்த நடவடிக்கை கேலிக்குரியதாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. மக்களவைத் தேர்தலில் பாமக பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.  அதன்படி,  கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளராக  இயக்குநர் தங்கர்பச்சான் களமிறக்கப்பட்டு உள்ளார். இவர் அந்த பகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார்.  பிரசாரதின்போது, நேற்று  (திங்கட்கிழமை) … Read more

சென்னையில் சங்கர விஜயம்: 7 நாள்கள், ஆன்மிகக் கருத்தரங்குகள், அறிஞர்களின் சொற்பொழிவுகள்!

பாரத தேசமெங்கும் ஆதிசங்கரர் பயணம் செய்து தேசத்தின் நான்கு திசைகளிலும் திருமடங்களை நிறுவி ஆன்மிகப் பணி சிறக்க வகை செய்தார். அந்த வகையில் தேசத்தின் தெற்கு திசையில் அவரால் நிர்மாணிக்கப்பட்ட மடம் சிருங்கேரி சாரதா பீடம். இந்த பீடத்தைப் பல்வேறு மகான்கள் பீடாதிபதிகளாக இருந்து அலங்கரித்து வந்திருக்கிறார்கள். 1954 முதல் 1989 வரை சிருங்கேடி மடத்தின் பீடாதிபதியாக இருந்து சேவை செய்தவர் ஜகத்குரு ஶ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மகாசுவாமிகள். இவரின் ஆசியோடு தொடங்கப்பட்டது, சென்னை ஶ்ரீ வித்யாதீர்த்த … Read more