பறக்கும் படையினரால் தாம்ப்ரம் ரயில் நிலையத்தில் ரூ.4.5 கோடி பறிமுதல்

சென்னை நெல்லை எக்ஸ்பிரசில் கொண்டு செலப்பட்ட ரூ. 4.5 கோடியைத் தேர்தல் பறக்கும் படையினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்தனர்.  வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று பிரசாரம் 17-ந்தேதி மாலையுடன் ஓய்கிறது. எனவே அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் வைத்திருப்போர் உரிய ஆவணம் இல்லாமல் … Read more

தேர்வுக்கு படிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் மகளை அடித்துக் கொன்ற தந்தை

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டம் பிரேம் நகரைச் சேர்ந்தவர் ஃபதே முகமது (42 வயது). இவருக்கு 17 வயதில் ஒரு மகள் இருந்தார். 11-ம் வகுப்பு படித்து வந்த அவரது மகள் பள்ளித் தேர்வுக்கு படிக்காமல் இருந்துள்ளார். இதனால் கோபத்தில் இருந்த அவர் வியாழக்கிழமை குச்சியால் சிறுமியை பலமாக அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிறுமி உயிரிழந்தார். இதையடுத்து சிறுமியின் மாமா அளித்த புகாரின் அடிப்படையில், ஃபதே முகமதை போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர். சிறுமி … Read more

4 நாட்கள் அனுமதி: இன்று சனிபிரதோஷம் – சதுரகிரி கோவிலில் குவியும் பக்தர்கள் ….

விருதுநகர்: சதுரகிரி கோவிலில்  சனி பிரதோஷம் மற்றும் அமாவாசை காரணமாக, நான்கு நாட்கள் பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதி வழக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை  பிரசித்தி பெற்ற சனி பிரதோஷம் என்பதால், இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமியை தரிசிக்க குவிந்து வருகின்றனர். இதையடுத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது,. பிரதோஷ நாட்களில் சிறந்தது சனிப் பிரதோஷம் என நம்பப்படுகிறது. சனி பிரதோஷத்தன்று விரதம் இருந்தால் சனியின் தீய பாதிப்புக்களில் இருந்து விடுபட … Read more

"முடக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வங்கி கணக்குகள்…" – வருமான வரித்துறை அதிரடி

திருச்சூர், கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள ஒரு வங்கியில், மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு தனித்தனியாக 5 கணக்குகள் உள்ளன. இந்த கணக்குகளில், கருவண்ணூர் கூட்டுறவு வங்கியில் முறைகேடு செய்த ரூ.3.80 கோடி இருப்பதாகவும், பலமுறை வங்கி கணக்குகளில் பண பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் புகார் எழுந்தது. அதன் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த வங்கியில் நேற்று முன்தினம் திடீரென சோதனை நடத்தினர். 5 பேர் அடங்கிய வருமான வரித்துறையினர் மதியம் முதல் நள்ளிரவு வரை சோதனை … Read more

இந்தியாவில் லெக்சஸ் NX 350h Overtrail எடிசன் விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் லெக்சஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள NX 350h Overtrail எடிசன் புதிய மாடல் விலை ரூபாய் 71.77 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மிக நேர்த்தியான ஸ்போட்டிவ் மற்றும் மிகவும் முரட்டுத்தனமாக அமைந்திருக்கின்றது. Lexus NX 350h ஓவர்ட்ரெயில் எடிசன் ஆனது சிறப்பு மூன் டெசர்ட் நிறத்தை பெறுகின்றது மிகவும் யூனிக்கான இந்த நிறத்துடன் கருமை நிறத்தை பெற்ற கிரில், ரூஃப் ரெயில், கதவு கண்ணாடிகள் மற்றும் கதவு கைப்பிடிகள். போன்றவற்றில் அமைந்திருக்கின்றது. Tazuna காக்பிட் பெறுகின்ற என்எக்ஸ் … Read more

போராடிய ஆசிரியர்களுக்கு ‘சம்பளம் பிடித்தம் கிடையாது’! தேர்தலால் பின்வாங்கியது தமிழக அரசு…

மதுரை:  சமவேலைக்கு சம ஊதியம் என திமுக அரசின் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி அரசுக்கு எதிராக போராடிய ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம் செய்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்களின் அதிருப்தி காரணமாக,  சம்பளம் பிடித்தம் என்ற அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்னும் 13 நாட்களில் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் ஆசிரியர்களே பெருமளவு ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததை கண்டித்து போராட்டம் நடத்திய ஆசிரியர்களின் 19 … Read more

'தேர்தல் பத்திரங்கள் உலகின் மிகப்பெரிய ஊழல்' – மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ஐதராபாத், தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் மத்திய அரசை கடுமையாக குற்றம் சாட்டினார். அவர் பேசும்போது, ‘மத்திய அரசின் தேர்தல் பத்திரம் திட்டம்தான் உலகிலேயே மிகப்பெரிய ஊழல். இந்தியாவில் நாள்தோறும் சுமார் 30 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அவர்களது வேளாண் கடன்களில் ஒரு ரூபாயை கூட மத்திய அரசு தள்ளுபடி செய்யவில்லை. ஆனால் பணக்காரர்களின் ரூ.16 லட்சம் கோடி அளவிலான கடன்களை … Read more

ரூ.1 லட்சம் தள்ளுபடி.., சிட்ரோன் C3, eC3 ப்ளூ எடிசன் அறிமுகமானது

இந்தியாவில் சிட்ரோன் மூன்றாவது ஆண்டு விழாவை கொண்டாடும் நிலையில் C3, eC3 ப்ளூ எடிசன் உட்பட C3 ஏர்கிராஸ் காருக்கு ரூ.1 லட்சம் தள்ளுபடி மற்றும் C3 காருக்கு ரூ.17,000 வரை சலுகையை அறிவித்துள்ளது. இந்நிறுவனம் அறிவித்துள்ள சிறப்பு ஆண்டு விழா சலுகை மற்றும் ப்ளூ எடிசன் எனப்படுகின்ற சிறப்பு பதிப்பில் வெளிப்புறத்தில் ரூஃப் ரெயில், பாடி லைன் மற்றும் கிராபிக்ஸ் என ஒரு சில இடங்களில் நீல நிறம் சேர்க்கப்பட்டுள்ளது. கூடுதலாக இன்டிரியரில் காற்று சுத்திகரிப்பு, … Read more

திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவு: முதல்வர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல்…

சென்னை: திமுக எம்எல்ஏவான விக்கிரவாண்டி  புகழேந்தி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், அவரது மறைவுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். அதுபோல பாமக நிறுவனர் ராமதாசும் இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் புகழேந்தி மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும்,  நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அன்புச் சகோதரர் திரு. … Read more

ஜார்க்கண்ட்: ஸ்டீல் ஆலையில் தீ விபத்து; 21 தொழிலாளர்களுக்கு சிகிச்சை

பொகாரோ,, ஜாரக்கண்டின் பொகாரோ நகரில் இந்திய உருக்காலை நிறுவனம் (செயில் நிறுவனம்) அமைந்துள்ளது. இதில், இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். கியாஸ் குழாயில் பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது குழாய் ஒன்றில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டு, புகை ஆலை முழுவதும் பரவியது. ஆனால், அதில் இருந்து கியாஸ் கசிவு எதுவும் ஏற்படவில்லை. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எச்சரிக்கை ஒலி அடித்தது. அனைத்து தொழிலாளர்களும் ஆலையில் இருந்து … Read more