நெல்லை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு; ஆளுநரிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு; பின்னணி என்ன?

அனைத்து மாணவ மாணவிகளையும் போல ஜீன் ராஜன் என்ற மாணவி தனது பட்டத்துடன் மேடையேறி வந்தபோது ஆளுநர் ஆர். என்.ரவி அவருடன் புகைப்படம் எடுக்க கையை நீட்டினார். ஆனால் அவரைக் கண்டுகொள்ளாத மாணவி, துணை வேந்தர் சந்திரசேகருடன் மட்டும் புகைப்படம் எடுத்துக் கொண்டு மேடையை விட்டு இறங்கினார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. முதுகலை, முனைவர் பட்டங்களைப் பெறும் 650 மேற்பட்டோர் பட்டமளிப்பு விழா அரங்கில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். தமிழக ஆளுநரும், … Read more

அமெரிக்க போர் கப்பலை தெறித்து ஓடவைத்த சீன ராணுவம்…

அமெரிக்க போர் கப்பலை விரட்டியடித்ததாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது. தென் சீன கடலின் ஸ்கார்பரோ ஷோல் நீர்வழிப்பாதை அருகே இந்த சம்பவம் நடைபெற்றதாகக் கூறியுள்ளது. புருனே, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் இந்த நீர்வழிப்பாதைக்கு உரிமை கொண்டாடும் நிலையில் சீனாவோ மொத்த தென் சீனக் கடலையும் உரிமை கோருகிறது. 2016 ஆம் ஆண்டில், சர்வதேச நடுவர் தீர்ப்பாயம், பெய்ஜிங்கின் வரலாற்று வரைபடங்களின் அடிப்படையில் அதன் கூற்றுக்களுக்கு சர்வதேச சட்டத்தில் எந்த அடிப்படையும் … Read more

“காசா படுகொலைக்கு எதிராக போராட்டம்'' – CPI(M) அறிவிப்பு; மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி

பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் கடந்த சில மாதங்களாக இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் காரணமாக அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகின்றனர். அத்தியாவசிய பொருள்களை காசாவிற்குள் கொண்டு செல்லவும் இஸ்ரேல் தடை விதித்து இருக்கிறது. இதனால் குழந்தைகள் உணவு இல்லாமல் பட்டினியால் உயிரிழந்து வருகின்றனர். காசாவில் நடந்து வரும் இத்தாக்குதல்களை கண்டித்து மும்பையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதிக்கவேண்டும் என்று கோரி, `அகில இந்திய அமைதி மற்றும் ஒற்றுமை பவுண்டேசன்’ மும்பை போலீஸில் மனு கொடுத்திருந்தனர். … Read more

ஆதார், பான், வோட்டர் ஐடி இருந்தால் மட்டுமே இந்திய குடிமகனாக முடியாது! சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வங்க தேசத்தவர் வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி

மும்பை: ஆதார், பான் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்களை வைத்திருப்பது மட்டுமே ஒருவர் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்காது என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக  நுழைந்து இந்திய குடியுரிமை கோருவதற்காக போலி ஆவணங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஜாமீன் மறுத்த உயர் நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது. சமீப காலமாக நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள பீகார் தீவிர வாக்காளர் பட்டியல் … Read more

தூத்துக்குடி: பாலிடெக்னிக் கல்லூரியில் வெடித்த நாட்டு வெடி; 2 மாணவர்கள் காயம்; என்ன நடந்தது?

தூத்துக்குடி – பாளையங்கோட்டை சாலையில் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் திருச்செந்தூர் அருகிலுள்ள ஆறுமுகநேரியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற மாணவர் மெக்கானிக்கல் பிரிவில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர், அவரது நண்பருடன் ஊரில் நடந்த கோவில் திருவிழாவிற்குச் சென்றுள்ளார். தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அவரது நண்பர் திருவிழாக்களில் வானவேடிக்கைக்காக நாட்டுவெடி செய்து திருவிழாக்களில் வெடிக்கும் தொழில் செய்து வருகிறார். … Read more

பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் தூக்கு பாலத்தில் அடுத்தடுத்து தொழில்நுட்ப கோளாறு! பயணிகள் அவதி

ராமேஸ்வரம்: பிரதமர் மோடி திறந்துவைத்த பாம்பன் தூக்கு பாலத்தில் அடுத்தடுத்து தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு ரயில் போக்குவரத்து தாமதம் ஏற்படுவதால், ரயில் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். பாலம் முறையாக கட்டப்பட்டதா என கேள்வி எழுப்பி உள்ளனர். ராமேஸ்வரத்தில் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் கடந்து செல்லும்போது திறந்து மூடும் வகையில் 77 மீட்டர் நீளமும், 650 டன் … Read more

Maitreyan: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன்? – முன்னாள் எம்.பி., மைத்ரேயன் விளக்கம்

அதிமுக முன்னாள் எம்பி-யான மைத்ரேயன் இன்று (ஆகஸ்ட்13) அதிமுக-வில் இருந்து விலகி திமுக-வில் இணைத்திருக்கிறார். திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மைத்ரேயன், “தளபதி ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். கட்சிக்காக என்னால் இயன்ற பணிகளையும், முயற்சிகளையும் செய்வேன். அதிமுக-வின் போக்கு சரியாக இல்லை. பொதுச்செயலாளர் இபிஎஸ் அவர்கள் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். மைத்ரேயன் அந்தக் கூட்டணியை அறிவித்ததே அமித்ஷாதான். அதுமட்டுமின்றி அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று சொல்லியிருக்கிறார். எந்த அடிப்படையிலும் … Read more

பள்ளிகளில் பிளாஸ்டிக் தேசிய கொடிகளை பயன்படுத்தக்கூடாது! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: ஆகஸ்டு 15ந்தேதி அன்று நடைபெறும் சுதந்திர விழாவின் போது, பள்ளிகளில் பிளாஸ்டிக் தேசிய கொடிகளை பயன்படுத்தக்கூடாது: பள்ளி கல்வித்துறை  அனைத்து கல்வி நிலையங்களுக்கும் அறிவுறுத்தி உள்ளது. சுதந்திர விழாவின் போது, பள்ளிகளில் பிளாஸ்டிக் தேசிய கொடிகளை பயன்படுத்தக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குனரகம், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. நாட்டின் சுதந்திர தின விழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அனைத்து … Read more

இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமானங்கள்; அரசியல் உறவுகளில் மாற்றம்?

இந்தியா மற்றும் சீனா அரசியல் விரிசல்களை சரிசெய்யும் நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கின்றன. இதன் விளைவாக அடுத்தமாதமே இரு நாட்டுக்கும் இடையில் நேரடியான விமானப்போக்குவரத்து தொடங்கப்படலாம் என ப்ளூம்பெர்க் தளம் கூறுகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியா சீனா இடையே நேரடி போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் எல்லைப் பதட்டம் உள்ளிட்ட காரணங்களால் இந்த தடை நீட்டிக்கப்பட்டது. சுமார் 5 ஆண்டுகள் கழித்து இது முடிவுக்கு வரவுள்ளது. ஏர் இந்தியா விமானம் தற்போது சீனா செல்பவர்கள் ஹாங் காங் அல்லது சிங்கப்பூரில் … Read more

நாளை வெளியாகிறது ரஜினியின் ‘கூலி’ – படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கூலி‘ திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி (நாளை) திரைக்கு வருகிறது. இந்த படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் நள்ளிரவு 2மணி வரை 5 காட்சிகள் திரையிட திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள  சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள  ‘கூலி’ படம் , ரஜினிகாந்தின் 171வது படமாகும். இந்த … Read more