"என்னை நானே தேர்வுசெய்ய மாட்டேன்; ஆனால் என் முயற்சி…" – கம்பேக் குறித்து உமேஷ் யாதவ்

இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு காலகட்டத்தில் குறிப்பாக, பும்ரா, ஷமி, சிராஜ் போன்றோருக்கு முன்பாக முன்னணி வேகப்பந்துவீச்சாளராக வலம் வந்தவர் உமேஷ் யாதவ். கடைசியாக 2023-ல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கெதிராக விளையாடிய உமேஷ் யாதவ். தனது சர்வதேச கரியரில் மொத்தமாக 57 டெஸ்ட் போட்டிகளில் 170 விக்கெட்டுகளும், 75 ஒருநாள் போட்டிகளில் 106 விக்கெட்டுகளும், 9 டி20 போட்டிகளில் 12 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கிறார். உமேஷ் யாதவ் குறிப்பாக, 2015 ஒருநாள் உலகக் கோப்பையில் அதிக … Read more

தமிழகத்தில் கனிம சோதனை ஆய்வுகம் அமைக்க திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை விசிக தலைவர் திருமாவளவன் தமிழ்கத்தில் கனிம சோதனை ஆய்வகம் அமைக்க வலியுறுத்தி உள்ளார். இன்று சென்னையில் கீழடி அகழாய்வு ஆய்வறிக்கையை அங்கீகரிக்க மறுத்த மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உரையாற்றினார். திருமாவளவன் தனது உரையில். “தமிழகத்தில் கனிம சோதனைக்கான(Carbon Dating) ஆய்வகத்தை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும். இதற்கான செலவு ரூ.40-45 கோடிதான் ஆகும். ஆய்வு செய்யப்பட வேண்டிய பகுதிகளில் நாம் அகழாய்வுகளை செய்து அறிக்கை தயார் செய்து … Read more

`விவசாயி வேடமிட்டு போலியாகத் திரிகிறார் முதல்வர் ஸ்டாலின்..!' – எடப்பாடி பழனிசாமி காட்டம்

தமிழகத்தில் இந்த ஆண்டு மாம்பழத்தின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டதாலும், மாம்பழக் கூழ் தயாரிக்க மாம்பழங்களை கொள்முதல் செய்வதில் பெரும் பின்னடைவு இருப்பதாலும் இதில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சரிகட்ட வேண்டுமென்று அரசுக்கு மனு அளித்தும், இதுவரை முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என வரும் ஜூன் 20ம் தேதி அன்று நத்தம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்திருக்கிறது. மாம்பழம் இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “‘மா’ விவசாயிகள் விவகாரம் – … Read more

பேருந்தில் ஜன்னல் சீட்டுக்கு சண்டை… இளைஞருக்கு கத்திக்குத்து…

பேருந்தில் ஜன்னல் சீட்டுக்கு நடந்த சண்டையில் இளைஞர் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவம் கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. பெலகாவி நகர பேருந்து நிலையத்தில் பேருந்து ஒன்றில் மாணவர் ஒருவருக்கும் வேறு சில இளைஞர்களுக்கு இடையே இந்த சண்டை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் மேஜர் ரஷீத் சனடி (19) என்ற மாணவரை கத்தியால் குத்திவிட்டு இளைஞர்கள் இரண்டு பேர் தப்பியோடியதாகத் தெரிகிறது. காயமடைந்த இளைஞர் மருத்துவ சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த … Read more

Genelia: “10 மணிநேர வேலை என்பது சாத்தியமானதே…" – ஜெனிலியா ஓப்பன் டாக்

இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படம் ‘ஸ்பிரிட்’. இப்படத்தில் முதலில் கதாநாயகியாக நடிப்பதற்கு தீபிகா படுகோனே கமிட்டாகியிருந்தார். ஆனால், அதன் பிறகு அவர் படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக நடிகை த்ரிப்தி டிம்ரி படத்தில் நடிக்க வந்திருக்கிறார். தீபிகா படுகோனே, இத்திரைப்படத்திலிருந்து விலகியதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. தீபிகா படுகோனே அதில் ஒன்று, தீபிகா படுகோனே தன்னுடைய குழந்தையைப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதினால் ஒரு நாளைக்கு 8 மணி நேரமாக தனது பணி … Read more

காவிரி நீர் திறப்பு : வெள்ள எச்சரிக்கை

பெங்களூரு கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் திறக்கப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.’’ தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததின் காரணமாக கபினி அணை அதன் கொள்ளளவை எட்டவுள்ளது.  சுமார் 2284 அடி உயரம் கொண்ட கபினி அணையில் 2280.84 அடிக்கு நீர் இருப்பு உள்ள நிலையில் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 21 ஆயிரத்து 545 கன அடியாக  உயர்ந்த வண்ணம் உள்ளது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி கபினி … Read more

உங்களது சக நண்பனாக உங்கள் முன் வந்து நிற்பேன்! – மகன்களுக்கு அப்பாவின் கடிதம் | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் என் அன்பு மகன்களே… எப்படி இருக்கிறீர்கள்.. செல்போனில் நீங்கள் தினமும் என்னை அழைத்தாலும், வீடியோ காலில் இருநாட்களுக்கு ஒருமுறை பேசினாலும் திருப்தியைத் தராத உணர்வு என்னவோ தெரியவில்லை கடிதத்தில் தருகிறது. இது கடிதம் அல்ல. அப்பாவின் உணர்வுகள். நீங்கள் இருவரும் பிறந்த போதும் உடன் … Read more

பீகாரில் ;பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட இருவர் சுட்டுக் கொலை

லக்கிசராய் பீகார் மாநிலத்தில் பஞ்சாயத்து தலைவரும் அவர் உதவியாளரும் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் அவரது உதவியாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பஞ்சாயத்துத் தலைவர் முகியா சந்தன் சிங் மற்றும் அவரது உதவியாளர் சந்தன் குமார், கிராமத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொண்டு இன்று அதிகாலை திரும்பி உள்ளனர் அதிகாலை சுமார் 1.30 மணியளவில் ஆயுதமேந்திய சிலர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியுள்ளனர். தகவலறிந்து உஃபனடியாக சம்பவ … Read more

டெல்லி மதராஸி காலனி: 370 தமிழர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.12,000; உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசு

டெல்லி மதராசி காலனி அகற்றப்பட்ட போது தமிழர் குடும்பங்களுக்கு எல்லா வகையிலும் உதவிகளை தமிழ்நாடு அரசு செய்வதற்குத் தயாராக இருக்கிறது எனத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி இந்த வாரத்தின் துவக்கத்தில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாயை ஒதுக்கி முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று பாதிக்கப்பட்ட 370 தமிழ் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம். நாசர் மற்றும் டெல்லியின் சிறப்புப் பிரதிநிதி … Read more

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிகை குறைந்துள்ளது

டெல்லி இந்தியாவில் கொரோனாவால் பாதிகப்பட்டோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவி வருகிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 11 பேர் உயிரிழந்தனர்.  அதாவது கேரளாவில் 7 பேர், டெல்லி, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா ஒருவர் உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 108 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா … Read more