21 பேரை பலி வாங்கிய தென்கொரிய வெப்ப அலை

சியோல் தென்கொரிய வெப்ப அலையால் 21 பேர் மரணமடைந்துள்ளனர். தற்போது தென் கொரியாவில் கடும் வெப்பம் நிலவி வருகிறது.  இங்கு அடிக்கும் வெப்ப அலையால்  கிட்டத்தட்ட 2,300 பேர் வெப்பம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடெங்கும் வெப்பம் கொளுத்தும் நிலையில், மே 20 முதல் ஆகஸ்ட் 11 வரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஒருவர் நேற்று இறந்துள்ளார். கடந்த மே 20 முதல் ஆகஸ்ட் 11க்கு இடையில் வெப்பம் தொடர்பான … Read more

தேதி காலாவதியான முறுக்கு விற்பனை; `சூப்பர் மார்க்கெட், உணவு நிறுவனம் இழப்பீடு வழங்க' கோர்ட் உத்தரவு!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தேதி காலாவதியான முறுக்கு பாக்கெட் விற்ற சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவு தயாரிப்பு நிறுவனம், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கூறி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது இது குறித்து நீதிமன்ற அலுவலர்களிடம் விசாரித்தோம் அப்போது நம்மிடம் பேசியவர்கள், “ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் செல்லத்துரை. இவர், தனது வசிப்பிடப் பகுதியில் செயல்பட்டு வரும் ஏ.எல்.என் சூப்பர் மார்க்கெட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 2 முறுக்கு பாக்கெட்டுகளை 90 ரூபாய்க்கு வாங்கி உள்ளார். வீட்டிற்கு … Read more

இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருமயானம், ஆதிகடவூர், திருக்கடையூர்,

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருமயானம், ஆதிகடவூர், திருக்கடையூர், ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் சிவன், பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி உலகத்தை அழித்து விடுவார். இச்சமயத்தில், படைப்புக் கடவுளான பிரம்மாவும் அழிந்து போவார். புது யுகம் துவங்கும்போது, மீண்டும் பிரம்மாவை உண்டாக்கி, அவர் மூலமாக ஜீவராசிகள் பிறக்கும்படி செய்வார். அவ்வாறு பிரம்மாவை அழித்து, மீண்டும் உயிர்ப்பித்த தலம் இது. அதோடு, பிரம்மாவுக்கு உயிர்களை படைக்கும் இரகசியம் பற்றி இங்கு ஞான உபதேசம் செய்தருளினார். “பிரம்மபுரீஸ்வரர்” என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளார். வள்ளி, தெய்வானையுடன் சிங்காரவேலர் … Read more

ஆர்ம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமான ரூ. 150 கோடி மதிப்பிலான 14.5 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு…

ஆர்ம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமான ரூ. 150 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை திருவள்ளூர் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் இன்று மீட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஒரக்காட்டில் அரசுக்கு சொந்தமான 14.5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து ‘பொன்வண்டு’ சோப்பு நிறுவனம் தனது சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்து செயல்பட்டு வந்தது. தற்போது இந்த சோப்பு நிறுவனம் தனது தயாரிப்பை நிறுத்தி வேறு பெயரில் இயங்கி வரும் நிலையில் சர்ச்சைக்குரிய இந்த நிலத்தை வேறு நபருக்கு கைமாற்றிவிட முயற்சி மேற்கொண்டது. … Read more

ஆகஸ்ட் 22 அன்று ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்து நாடெங்கும் காங்கிரஸ் போராட்டம்

டெல்லி வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி அன்று ஹிண்டன்பர்க் விவ்காரம் குறித்து நாடெங்கும் காங்கிரஸ் போராட்டம் நடத்த உள்ளது. கடந்த ஆண்டு அதானி குழுமம் மீது பங்குச்சந்தை முறைகேடு புகார் தெரிவித்த ஹிண்டன்பர்க் நிறுவனம், தற்போது ‘செபி’ தலைவர் மாதபி புச் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளது. அதன்படி அதானி குழும நிதி முறைகேட்டுடன் தொடர்புடைய நிறுவனங்களில் மாதபி புச் மற்றும் அவருடைய கணவர் தவல் புச் ஆகியோர் முதலீடு செய்திருப்பதாக கூறியிருக்கிறது. இந்திய … Read more

உச்சநீதிமன்றம் பதஞ்சலி நிறுவன வழக்கை முடித்து வைத்தது

டெல்லி இன்று உச்சநீதிமன்றம் பதஞ்சலி நிறுவனத்தின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்துள்ளது. புகழ்பெற்ற யோகா குரு பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம், ஆயுர்வேத மருந்துகள், அழகுசாதன பொருட்கள் முதல் உணவுப் பொருட்கள் வரை பல்வேறு தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருகிறது. இந்த நிறுவனம் நவீன மருந்துகளுக்கு எதிராக தவறான விளம்பரங்களை செய்து வருவதாக இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்ற்த்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பதஞ்சலி நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன், தவறான விளம்பரங்களை வெளியிட்டால் … Read more

சட்டமன்றத் தேர்தல்களை குறிவைத்தே வக்பு வாரிய சட்டத்திருத்தத்தை கொண்டு வருகிறதா மத்திய அரசு?

ஜி.கே.நாகராஜ் ஜி.கே.நாகராஜ், மாநில விவசாய அணித் தலைவர், பா.ஜ.க “நாட்டு மக்களுக்காக ஒரு நல்ல திருத்தத்தைக் கொண்டுவரும்போது அதை எதிர்ப்பதே எதிர்க்கட்சிகளுக்கு வேலையாகிவிட்டது. ஏற்கெனவே, முத்தலாக் தடைச் சட்டத்தை கொண்டுவந்தபோதும் இவர்கள் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், பா.ஜ.க கொண்டுவந்த முத்தலாக் தடைச் சட்டத்தை இஸ்லாமியப் பெண்கள் கொண்டாடி வருவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். அதேபோலவே, இந்த வக்பு வாரிய சட்டத் திருத்தமும், இஸ்லாமிய மக்களுக்குப் பெருமளவில் பலனளிக்கும். தமிழகத்தில் எப்படி அறநிலையத்துறையின் மூலம் இந்துக்கள் பயன்பெறாமல், ஆளுங்கட்சியினர் … Read more

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு இல்லை : போக்குவரத்து துறை

சென்னை தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு இல்லை என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டீசல் விலை உயர்வு,தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஆகியவற்றுக்கு இணையாக பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து தனி ஆணையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து, அந்த முடிவை கைவிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக வெளியாகும் செய்திக்கு அரசு போக்குவரத்துத் துறை … Read more