காவல்துறை பணியில் வருங்காலங்களில் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்.

சென்னை: காவல்துறை பணியில் வருங்காலங்களில் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். காவல் பணியில் தொழில்சார்ந்த உயர்தரத்தை பராமரிக்க ஒருங்கிணைந்து செயல்படுவோம் எனவும் அவர் கூறியுள்ளார். 

மீண்டும் அரச குடும்பத்திற்கு திரும்புவீர்களா? வெளிப்படையாக பதிலளித்த ஹரி

இளவரசர் ஹரி அரச குடும்பத்திற்கு திரும்புவது குறித்த தனது திட்டத்தை வெளிப்படுத்தியுளளார். இளவரசர் ஹரி, தனது நினைவுக் குறிப்பு புத்தகமான ‘ஸ்பேர்’ (Spare) வெளியீட்டிற்கு முன்னதாக ஒரு புதிய நேர்காணலில், தனது அரச எதிர்கால திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளார். நேர்காணல் நிகழ்ச்சிகள் ஹரி இரண்டு நேர்காணல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். ஒன்று பிரித்தானியாவில் ஒளிபரப்பப்படும் மற்றும் மற்றொன்று அமெரிக்காவில் ஒளிபரப்பப்படும். இந்த நேர்காணலில் அவர் அரச குடும்பத்திற்குத் திரும்புவது குறித்து அப்பட்டமான பதிலைக் கொடுத்துள்ளார். Getty Images அமெரிக்காவில், சிபிஎஸ் … Read more

சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின் வழக்கை 3 மாதத்துக்குள் முடிக்க ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின் வழக்கை 3 மாதத்துக்குள் முடிக்க மத்திய நிர்வாக தீர்பாயத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அப்போதைய சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

ஊத்துமலை: தோட்டத்தில் போடப்பட்ட சட்ட விரோத மின்வேலி; விவசாயிக்கு நேர்ந்த சோகம்!

தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. அதனால் அப்பகுதியில் விவசாயம் செய்து வருபவர்கள் தங்களின் விளைநிலத்துக்குள் புகுந்து சேதத்தை உருவாக்கும் மான், யானை, காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாக்க சட்ட விரோதமாக மின்வேலி அமைத்துக் கொள்கின்றனர். மின்வேலியில் சிக்கி உயிரிழந்த கஜேந்திரன் சட்ட விரோத மின்வேலிகளைக் கண்டுபிடித்து வனத்துறையினர் அகற்றி வந்தாலும், சில இடங்களில் ரகசியமாக வேலி அமைக்கப்படுகிறது. இந்த நிலையில், … Read more

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கூலித்தொழிலாளி கழுத்தை அறுத்து கொன்ற வழக்கில் சக தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை..!!

ஈரோடு: பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கூலித்தொழிலாளி கழுத்தை அறுத்து கொன்ற வழக்கில் சக தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கூலி வேலைக்கு சென்று வந்த பெருமாள் என்பவர் கடந்த 2020ல் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டார். தொழிலாளி கொலை தொடர்பான வழக்கில் சேலத்தைச் சேர்ந்த தொழிலாளி லட்சுமணனை போலீஸ் கைது செய்தது. வழக்கை விசாரித்த ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி மாலதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.

`வெளி உணவுப்பொருள்களுக்கு தடை விதிக்க தியேட்டர்களுக்கு உரிமை உண்டு!’ – உச்ச நீதிமன்றம்

வெளியில் இருந்து உணவு மற்றும் பானங்களை மல்டிபிளக்ஸ்கள், திரையரங்குகளுக்குள் எடுத்துச் செல்வதைக் கட்டுப்படுத்த, திரையரங்க உரிமையாளருக்கு உரிமை உண்டு என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில், அம்மாநில அரசு வகுத்துள்ள விதிகளின்படி, திரையரங்குகளில் பார்வையாளர்கள் வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுகளை அனுமதிக்க வேண்டும் என்று, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் 2018-ம் ஆண்டு தீர்ப்பை எதிர்த்து, திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் மல்டிஃபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் … Read more

கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.74 கோடியில் 2 உயர் மட்டப் பாலங்கள்! தமிழக அரசு உத்தரவு

சென்னை: கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.74 கோடியில் 2 உயர் மட்டப் பாலங்கள்! அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சாலை போக்குவரத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதற்காக ஏராளமான பாலங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டு, சட்டப்பேரவையிலும் அறிவிக்கப்பட்டு உள்ளது.  சென்னையில் அதிகரித்து வரும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் நகர் முழுவதும் 3 மேம்பாலங்களைக் கட்ட சென்னை மாநகராட்சி திட்டமிட்டு இருப்பதாகவும்,  சிங்கார சென்னை 2.o … Read more

பெரிய மீன் சிக்கியதாக நினைத்த மீனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி: அம்பலமான உண்மை

தாய்லாந்தில் உள்ளூர் ஆற்றில் மீன் பிடிக்க சென்ற மீனவருக்கு திகிலை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. வலையில் பெரிய மீன் தாய்லாந்தின் Phitsanulok பகுதியில் உள்ள ஆற்றில் அந்த மீனவர் மீன் பிடிக்க சென்றுள்ளார். அவரது வலையில் பெரிய மீன் ஒன்று சிக்கியதாக கருதியவருக்கு, நான்கு நாட்களுக்கு முன்னர் மாயமானதாக கூறப்படும் இளம்பெண் ஒருவரின் சடலம் சிகியதை அறிந்து உறைந்து போயுள்ளார். @getty ஜனவரி 2ம் திகதி பகல் 10.30 மணியளவிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. தகவலையடுத்து … Read more

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் அயராது பணியாற்ற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் அயராது பணியாற்ற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போதைப்பொருட்கள் பழக்கத்தை முற்றிலும் ஒழிப்பது குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் உத்தரவிட்டார். பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரங்களை அதிகப்படுத்த வேண்டும். போதைப்பொருள் எந்த வடிவில் வந்தாலும் அதை அடியோடு ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடர் குற்றங்களில் ஈடுபடுவோரிடம் பிணை முறிவு பத்திரம் மூலம் உறுதிமொழி பெற வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தினார்.