ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்: 100 மணிநேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்பு

வியட்நாமில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவன் பல மணி நேர போராட்டத்திற்கு பின் சடலமாக மீட்கப்பட்டான். வியட்நாமின் தெற்கு மாநிலமான டோங் தாப் என் இடத்தில் புத்தாண்டுக்கு முந்தைய நாள் மாலை, 10 வயது சிறுவன் அங்குள்ள 115 அடி (30 மீற்றர்) ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். சிறுவனை உயிருடன் மீட்கும் முயற்சியில் அந்நாட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் நவீன இயந்திரங்கள் மூலம் பல்வேறு மீட்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். WPA … Read more

ஜன.05: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற நபருக்கு தூக்கு| Hang the man who raped and killed a 5-year-old girl

பண்டா : உத்தர பிரதேசத்தில் 5 வயது சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற நபருக்கு, துாக்கு தண்டனை விதித்து ‘போக்சோ’ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் உள்ள மார்கா கிராமத்தில் வசித்தவர் ராம்பஹதூர் பிராஜாபதி, 45. கடந்த 2021ல், இவரது வீட்டின் அருகே வசித்த 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதற்காக கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு, போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. … Read more

புதுக்கோட்டை: “நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்டது தமிழகத்துக்கே அவமானம்” – துரை வைகோ

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, அந்த கிராமத்தை ம.தி.மு.கவின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பார்வையிட்டார். ஒவ்வொரு வீடாகச் சென்றவர், இந்த செயலில் ஈடுபட்டதாக, யார் மீதாவது சந்தேகம் உள்ளதா என்ற பட்டியலின மக்களிடம் கேள்வியை எழுப்பினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம், “மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது, மிகவும் இழிவான செயல், … Read more

பிரித்தானியாவில் 18 வயது வரை ஒவ்வொரு மாணவருக்கும் இது கட்டாயம்., பிரதமர் ரிஷி சுனக்கின் புதிய திட்டம்

பிரித்தானியாவில் அனைத்து மாணவர்களும் 18 வயது வரை கணிதம் படிக்கவேண்டியது கட்டாயம் என பிரதமர் ரிஷி சுனக் அதிரடி உத்தரவை பிறப்பிக்கவுள்ளார். 18 வயது வரை கணிதம் கட்டாயம் பிரித்தானியாவில் உள்ள அனைத்து மாணவர்களும் 18 வயது வரை ஏதேனும் ஒரு கணிதத்தை படிக்க வேண்டும் என்று பிரதமர் ரிஷி சுனக் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பும் கல்வியில் இருந்து தொடங்கியது” என்று ரிஷி சுனக் 2023-ஆம் ஆண்டிற்கான … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,702,918 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.02 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,702,918 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 666,380,485 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 638,401,926 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 42,470 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாலை விபத்தில் உயிரிழந்த பெண் மது அருந்தவில்லை என தகவல் மது அருந்தவில்லை என்கிறது அறிக்கை| The report says that the woman who died in the road accident did not drink alcohol

புதுடில்லி, புதுடில்லியில் புத்தாண்டு தினத்தில் நடந்த கொடூர சாலை விபத்தில் உயிரிழந்த பெண், மது அருந்தி இருந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் மது அருந்தவில்லை என, பிரேத பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. புத்தாண்டு தினமான ஜன., 1ம் தேதி அதிகாலையில், புதுடில்லியின் சுல்தான்புரி என்ற இடத்தில் இருசக்கர வாகனம் ஒன்றின் மீது கார் மோதியது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அஞ்சலி சிங், 20, என்ற பெண் கார் சக்கரத்தில் சிக்கிய நிலையில், அவரது … Read more

மெஸ்ஸியை வன்மத்துடன் வரவேற்ற கைலியின் எம்பாப்பேயின் தம்பி! வைரலாகும் ஈத்தனின் ரியாக்ஷன்

மெஸ்ஸியை பார்த்து முறைத்துக்கொண்டு முகத்தில் ஒருவித வெறுப்புணர்ச்சியுடன் வரவேற்ற கைலியின் எம்பாப்பேவின் சகோதரர் ஈத்தன் எம்பாப்பே. கத்தார் 2022 FIFA உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு PSG அணிக்கு திரும்பிய அர்ஜென்டினா ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மெஸ்ஸிக்கு PSG-ன் ஆலோசகர் Lluis Campos சிறப்பு நினைவு பரிசும் வழங்கி கௌரவித்தார். கைலியின் எம்பாப்பேயின் சகோதரர் ஈத்தன் எம்பாப்பே PSG அணியுடன் இணைந்த லியோனல் மெஸ்ஸியை அனைவரும் கைதட்டி ஆரவாரத்துடன் வரவேற்றபோது, ஒருவர் மட்டும் மெஸ்ஸியை … Read more

விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த போதை ஆசாமி| Drug addict urinates on female passenger in flight

புதுடில்லி, நியூயார்க்கில் இருந்து புதுடில்லி வந்த, ‘ஏர் இந்தியா’ விமானத்தில், 70 வயது பெண் பயணி மீது, குடிபோதையில் இருந்த சக பயணி சிறுநீர் கழித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து புதுடில்லிக்கு, ஏர் இந்தியா விமானம் கடந்த நவ., 26ல் புறப்பட்டது. மாற்று உடை பயணியருக்கு மதிய உணவு அளிக்கப்பட்ட பின், விளக்குகளின் வெளிச்சம் குறைக்கப்பட்டு அனைவரும் துாங்க தயாராகினர். அப்போது, ‘பிசினஸ் கிளாஸ்’ வகுப்பில் இருந்த பயணி … Read more