கர்நாடக முதல்வருக்கு கோவிட் | Dinamalar

பெங்களூரூ: கர்நாடக முதல்வர் பொம்மைக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ” எனக்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் லேசான கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நான் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டேன், இதன் காரணமாக பொது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். பெங்களூரூ: கர்நாடக முதல்வர் பொம்மைக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ” எனக்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் லேசான … Read more

உள்ளாடையில் பொருளாதாரம்.. சுவாரஸ்யமான கணக்கு..!

ஒரு நாட்டின் பொருளாதாரம் என்பது அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), சர்வதேச வர்த்தகம், பட்ஜெட் திட்டங்கள் போன்ற பொருளாதார அம்சங்களை அளவிடுவதன் மூலம் கணக்கிடலாம். பொருளாதார அறிஞர்கள் மேற்கண்ட அம்சங்களை கணக்கில் கொண்டு ஒரு நாடு பொருளாதாரத்தில் முன்னேறி உள்ளதா? அல்லது பின் தங்கியுள்ளதா? என்பதை அளவிடுவர். ஆனால் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அளவிட நீங்கள் எப்போதாவது உள்ளாடைகளை பயன்படுத்தியுள்ளீர்களா? நாட்டு மக்கள் அணியும் உள்ளாடைக்கும் பொருளாதாரத்திற்கும் சம்பந்தம் உண்டா? இதுகுறித்து தற்போது பார்ப்போம். … Read more

உயிருக்கு அச்சுறுத்தல்; முன்னாள் அமைச்சரின் உதவியாளரான நடிகைக்கு சிறையில் 24 மணி நேர பாதுகாப்பு!

மேற்கு வங்கத்தில் நடந்த ஆசிரியர் தேர்வு முறைகேடு தொடர்பாக அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியும் அவருக்கு மிகவும் நெருக்கமான அர்பிதா முகர்ஜியும் கைது செய்யப்பட்டுள்ளனர். அர்பிதாவின் இரண்டு வீடுகளில் இருந்து ரூ.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதோடு 5 கிலோ தங்கம் மற்றும் சொத்து வாங்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தனது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தனக்கு சொந்தமானது இல்லை என்றும், தான் இல்லாத நேரத்தில் பணத்தை கொண்டு வந்து வைத்துவிட்டதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகளிடம் அர்பிதா முகர்ஜி … Read more

தமிழகத்தின் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை வாங்க 7 நிறுவனங்கள் முன்வந்துள்ளது.: அனில் அகர்வால் தகவல்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை வாங்க 7 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை செயல்பட தேடிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்ததாகவும் அனில் அகர்வால் கூறியுள்ளார்.

டுவிட்டருக்கு எதிரான வழக்கு.. இந்தியாவை கோர்த்துவிட்ட எலான் மஸ்க்!

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க போவதாக அறிவித்த நிலையில் திடீரென அந்த முடிவிலிருந்து பின்வாங்கினார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்க மறுத்ததை அடுத்து ட்விட்டர் நிறுவனம் இது குறித்து வழக்கு தொடர்ந்தது. ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக எலான் மஸ்க் வழக்கு தொடர்ந்த வழக்கில் இந்திய அரசை தனது தரப்பில் நீதிமன்றத்தில் மேற்கோள்காட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ‘வின்டர் இஸ் கம்மிங்’ 3 … Read more

Doctor Vikatan: பிரசவ தேதியைக் கடந்தும் டெலிவரி ஆகவில்லை… காலம் கடப்பது ஆபத்தானதா?

என் மகளுக்கு பிரசவ தேதி நெருங்குகிறது. ஆனாலும் அவளிடம் அதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. குறைமாதப் பிரசவம் போல, நிறை மாதம் கடந்த பிரசவமும் சாத்தியமா? எதிர்பார்க்கப்பட்ட பிரசவ தேதிக்குப் பிறகு எத்தனை நாள்கள் காத்திருக்கலாம்? அப்படிக் காத்திருப்பது எந்த அளவுக்குப் பாதுகாப்பானது? மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி Doctor Vikatan: குழந்தைக்கு அஜீரணக் கோளாறு… ஓம வாட்டர் கொடுக்கலாமா? பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி 37 வாரங்கள் … Read more

மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் திடீர் ஆய்வு

சென்னை: மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்தார். அங்கு, முதலமைச்சர் ஸ்டாலின், மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து, வெள்ளம் பாதித்த பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது “வீட்டுக்குள்ள தண்ணீர் போயிடுச்சா? உணவு, மருத்துவ வசதி எல்லாம் கிடைக்குதா?” என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

மேட்டூர் அணையில் இருந்து 1.80 லட்சம் கனஅடி நீர் திறப்பு.: 1.77 லட்சம் கனஅடி நீர்வரத்து

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து 1.80 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் – 120.04 அடி, நீர் இருப்பு – 93,534 டிஎம்சி, நீர்வரத்து – 1,77,000 கனஅடி, நீர் வெளியேற்றம் 1,80,000 கன அடியாக உள்ளது.

மும்பை ஹவுஸ் ஓனர்களுக்கு செம கொண்டாட்டம்… உச்சம் சென்ற வாடகை!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது, சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூர் உள்பட பெருநகரங்களில் ஏராளமான வீடுகள் காலியாக இருந்தன. ஊரடங்கு காரணமாக ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மீண்டும் இயல்பு நிலை திரும்பியுள்ளதை அடுத்து பெருநகரங்களில் குறிப்பாக மும்பையில் மீண்டும் வாடகைச்சந்தை உச்சத்திற்கு சென்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் 5 லட்சம் யூரோக்களை முதலீடு செய்யும் ஜெர்மனி.. … Read more