18 ஆண்டுகளுக்கு பின் ஐபிஓ.. டாடா குழுமம் எடுத்த முடிவு!.

18 ஆண்டுகளுக்கு பிறகு டாடா குழுமம் முதல் முறையாக ஐபிஓ வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2004ஆம் ஆண்டு டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் ஐபிஓ வெளியிட்டது. அதன்பிறகு தற்போது டாடா மோட்டார்ஸ் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஓ வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டாடா குழுமத்தின் இந்த பங்கினை வாங்கி போடுங்க.. 3 மாதத்தில் நல்ல லாபம் கிடைக்கும்? டாடா குழுமம் ஐபிஓ வெளியிடுவதற்காக வங்கியாளர்களை நியமித்துள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. … Read more

வீடு புகுந்து கடத்தப்பட்ட கனேடிய பெண் வழக்கில் முக்கிய திருப்பம்: வெளியான பின்னணி

கனடாவின் ஒன்ராறியோவில் வீடு புகுந்து கடத்தப்பட்ட பெண் தொடர்பில் 35 வயதான கியூபெக் நபர் மீது வழக்கு பதிந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. கனடாவில் வசாகா கடற்கரை பகுதியில் வீடு புகுந்து கடத்தப்பட்ட 37 வயது Elnaz Hajtamiri தொடர்பில் முக்கிய தகவலை ஒன்ராறியோ பிராந்திய பொலிசார் வெளியிட்டுள்ளனர். ஜனவரி 12ம் திகதி நடந்த இந்த கடத்தல் சம்பவத்தில், இதுவரை துப்புத்துலங்காமல் பொலிசார் திணறி வந்துள்ளனர். பொலிஸ் உடையில் வீடு புகுந்த மூவர் கும்பல் Elnaz Hajtamiri-வை … Read more

ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் மீண்டும் கோளாறு| Dinamalar

புதுடில்லி :’ஸ்பைஸ்ஜெட்’ விமானத்தில் மீண்டும் கோளாறு ஏற்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பயணியர் விமானம் ஒன்று மங்களூரிலிருந்து துபாய் சென்றது. வழக்கம் போல பொறியாளர்கள் விமானத்தை ஆய்வு செய்தனர். அதில், விமானத்தின் முன் டயரில் கோளாறு இருப்பது தெரியவந்ததது. இதையடுத்து விமானம் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:விமானத்தின் முன் டயரில் கோளாறு இருப்பது தெரியவந்தது. இதைஅடுத்து, அதை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. … Read more

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கலாம்.. ஏன் தெரியுமா.. சாமானிய மக்கள் கவலை..!

பொதுவாக ரயில் பயணம் என்பது அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான ஒன்றாக இருந்தாலும், சாமானிய மக்கள் மத்தியில் மிக விருப்பமான போக்குவரத்தாக உள்ளது. இதற்கு காரணம் பாதுகாப்பு என்பது ஒன்றாக இருந்தாலும், கட்டணங்கள் குறைவு என்பது மற்றொரு முக்கிய காரணம். விமான பயணத்துடனோ அல்லது ஸ்லீப்பர் பேருந்துகளுடன் ஒப்பிடும்போது இந்த கட்டண விகிதம் மிக குறைவு தான். இந்தியா – ரஷ்யா: இனி டாலர் தேவையில்லை, ரூபாய் போதும்.. ஆர்பிஐ அதிரடி..! ஏசி பெட்டிகளை அதிகரிக்க திட்டம் ஆனால் … Read more

`சிங்கம்' சூர்யா பாணியில் மீசை வைத்திருந்த காவலர்; கத்தரிக்க உத்தரவிட்ட நீதிபதி – என்ன நடந்தது?!

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள அம்பலமூலா காவல்நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார் ராஜேஷ் கண்ணா. இவர் பணியாற்றும் காவல்நிலைய வழக்குகள் விசாரணைத் தொடர்பாக ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்துக்கு இன்று வந்திருக்கிறார். மாவட்ட நீதிபதி முருகனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சல்யூட் அடித்திருக்கிறார். ஊட்டி நீதிமன்றம் அப்போது, ராஜேஷ் கண்ணாவின் பெரிய மீசையைப் பார்த்து ஆத்திரமடைந்த நீதிபதி முருகன், மீசையை உடனடியாக கத்திரித்துவிட்டு வந்து தன்னிடம் காண்பிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார். இதைக் கேட்டு பயந்த காவலர் … Read more

வெங்காயம் விலை கேட்டாலே கண்ணீர் வருது.. அய்யோ தக்காளியா கேட்கவே வேண்டாம்..!

இலங்கை மக்கள் அந்நாட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வீட்டை சூறையாடி வரும் வேளையில் மக்களின் அடிப்படைத் தேவையைப் பூர்த்திச் செய்யக் குறைந்தது 6 பில்லியன் டாலர் தேவை எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் யார் ஆட்சி அமைக்கப்போவது என்ற முக்கியமான கேள்வி எழுந்துள்ள வேளையில் இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாசவை நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக எதிர்வரும் ஜூலை 20ஆம் தேதி நடத்தப்படும் தேர்தலில் நிற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. … Read more

13.07.22 புதன்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | July – 13 | இன்றைய ராசிபலன் | Astrology

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

எரித்துக் கொல்லப்பட்ட கணவன்… வெளிநாட்டில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் பிரித்தானிய பெண்

தமது கணவரைக் கொலை செய்ய உத்தரவிட்ட குற்றச்சாட்டின் பேரில் பிரித்தானிய பெண்மணி ஒருவர் பாகிஸ்தானில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளார். குறித்த வழக்கு தொடர்பில் விசாரணை கைதியாக இருந்த ஒவ்வொரு நாளும் பொலிசார் தம்மை கொடூரமாக துன்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். இரண்டு வார காலம் சிறையில் இருந்தேன், ஒவ்வொரு நாளும் நரகமாகவே இருந்தது என குறிப்பிட்டுள்ளார் 64 வயதான யாஸ்மின் கௌசர். மட்டுமின்றி, தாம் செய்யாத குற்றத்திற்காக அவர்கள் தம்மிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற முயன்றார்கள் எனவும் யாஸ்மின் … Read more

ரீடைல் பணவீக்கம் கணிசமாகச் சரிவு.. உணவு பணவீக்கம் அதீத சுமை..!

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் ஜூன் மாதம் நுகர்வோர் பணவீக்கம் 54.6 சதவீதமாக உயர்ந்துள்ளது உலக நாடுகளையும், ஐஎம்எப் அமைப்பையும் பயமுறுத்தியுள்ளது. மேலும் இலங்கையின் உணவு பணவீக்கம் 80.1 சதவீதமாகவும், போக்குவரத்துப் பணவீக்கம் 128 சதவீதமாக அதிகரித்துள்ளது. அப்போ இந்தியாவின் நிலை என்ன..? செவ்வாய்க்கிழமை காலை வர்த்தகம் துவங்கும் முதல் பணவீக்க தரவுகள் வெளியாகும் நிலையில் மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்தது. இதோடு புதன்கிழமை அமெரிக்காவும் இந்தியாவைப் போல் ஜூன் பணவீக்க தரவுகளை வெளியிடுகிறது. ஜூன் மாதம் … Read more

பாகிஸ்தான்: பொதுவெளியில் சிறுவனைக் கன்னத்தில் அறைந்த பெண் பத்திரிகையாளர்! – வைரலான வீடியோ

பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர், கோபத்தில் சிறுவனை அறையும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. அதே சமயம் சிறுவனைத் தாக்கிய பெண் பத்திரிகையாளருக்கு எதிராகப் பலர் ட்விட்டரில் கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, பக்ரீத் தினத்தைப் பற்றி பத்திரிகையாளர் மைரா ஹாஷ்மி என்பவர் சிறப்புச் செய்தித் தொகுப்புக்காக வீடியோ பதிவுசெய்துகொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது சிறுவன் ஒருவன் அவருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீடியோவின் குறுக்கே வந்து சென்றதாகக் கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த … Read more