ஒர்க் பிரம் ஹோம் முடியப் போகுதா.. 25/25 திட்டம் எப்போது.. டிசிஎஸ்-ன் மெகா திட்டம்!

கொரோனாவின் வருகைக்கு பிறகு ஐடி நிறுவன ஊழியர்கள் பெரும்பாலும் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகின்றனர். இன்னும் ஒரு தரப்பு ஹைபிரிட் மாடலிலும் பணியாற்றி வருகின்றனர். எனினும் தற்போது நிறுவனங்கள் ஊழியர்களை திரும்ப அலுவகத்திற்கு அழைக்க ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில் நாட்டில் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் தனது ஊழியர்களுக்கு என்ன சொல்லப்போகிறது என ஊழியர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. புள்ளி கோலங்களையே வருமானம் ஆக்கிய தீபிகா.. மாதம் ரூ.75,000 வருமானம்.. அசத்தும் … Read more

குடகு மக்களுக்கு ஆபத் பாந்தவனாய் திகழ்ந்த வேலுார் அதிகாரி| Dinamalar

காவிரி பிறப்பிடமான குடகில் 2018ல் கன மழை பெய்தது மட்டுமின்றி, நிலச்சரிவு ஏற்பட்டு பலரது வீடுகள் அடித்து செல்லப்பட்டன. வாழ்வதற்கு இடமின்றி பலரும் தவித்த நேரமது. மகளிர், குழந்தைகள், முதியோர் என நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அந்த முக்கியமான கால கட்டத்தில், அரசும் வீடுகள் இழந்தோருக்கும், மலை பகுதியில் ஆபத்தான நிலையில் வசிப்போருக்கும் வீடுகள் கட்டி தருவதாக உறுதியளித்து விட்டது. தரை தளம், அதன் மீது இரண்டு மாடி கொண்ட கட்டடம் கட்டி … Read more

வருமான வரி தாக்கல் செய்யும்போது கவனிக்க வேண்டியது என்ன.. 5 முக்கிய விஷயங்கள் இதோ!

வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு விரைவில் நெருங்கி வருகின்றது. கடந்த 2021 – 22ம் நிதியாண்டு அல்லது 2022 23ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஜூலை 31-க்கு தேதி கடைசி நாளாகும். சம்பளம் பெறும் ஊழியர்கள் மற்றும் தங்கள் கணக்குகளை தணிக்கை செய்ய தேவையில்லாத பிற தனி நபர்கள் ஜூலை 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இந்தியாவின் சொகுசான 6 ரயில்கள் எது தெரியுமா.. அதன் கட்டணம் எவ்வளவு … Read more

உக்கிரத்தில் மக்கள்… காலியாகும் தலைமை… எதை நோக்கிச் நகர்கிறது இலங்கை அரசியல் சூழல்?!

இலங்கையில் இப்போது ஜனாதிபதியும் இல்லை, பிரதமரும் இல்லை என்ற சூழல்தான் நிலவுகிறது. மொத்தத்தில் தலைமையே இல்லை. திரும்பும் வீதியெல்லாம் மக்கள் ஆர்ப்பாட்டத்தை மட்டுமே காணமுடிகிறது. மொத்த குடிமக்களும் வீதியில் இறங்கி ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். பதவியில் எஞ்சியிருந்த கோத்தபய ராஜபக்சேவும் தற்போது தலைமறைவாகியுள்ளார். கோத்தபய ராஜபக்சே, ரணில் விக்கிரமசிங்க சமீபமாகப் பதவியேற்ற பிரதமர் ரணிலும், தான் பதவி விலகத் தயார் என்று கூறியுள்ளார். இவ்வாறிருக்க இலங்கையின் தலைமை வெற்றிடத்தை யார் நிரப்புவார்? நாட்டையும் … Read more

இலங்கையில் தனியாக சிக்கிய ஆர்பாட்டக்காரர்கள்., கொடூரமாக தாக்கிய பாதுகாப்பு படையினர்.. பரபரப்பு காட்சி

இலங்கையில் ஜனாதிபதி மாளிகைக்குள் தனியாக சிக்கிக்கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களை இலங்கை பாதுகாப்பு படையினர் கொடூரமாகவும் தாக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என தெரிவித்து பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று பெருந்திரளான மக்கள் ஒன்று சேர்ந்து அதிபர் மாளிகைக்குள் மற்றும் வீட்டிற்கு நுழைய முற்ப்பட்டனர். அப்போது, அதிபர் மாளிகைக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிய நிலையிலும், போராட்டக்காரர்கள் … Read more

ஒரே வீட்டில் தாக்குதல் நடத்தும் ஒற்றை யானை இரண்டு ஆண்டாக பீதியுடன் வாழும் கிராமத்தினர்| Dinamalar

மைசூரு : இரண்டு ஆண்டுகளாக, ஒரே வீட்டை குறி வைத்து ஒற்றை யானை, அவ்வப்போது தாக்குதல் நடத்துகிறது. வீட்டில் உயிர் பயத்துடன் வசிக்கின்றனர்.மைசூரு ஹுன்சூரின், ஹனகோடு பேரூராட்சிக்குட்பட்ட கிராமங்களில், காட்டு யானைகளின் தொந்தரவு, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. நேரலகட்டே கிராமத்தின், பிரதான சாலை ஓரத்தில் திம்மஷெட்டா என்பவரின் வீடு உள்ளது. நேற்று முன் தினம், இங்கு வந்த ஒற்றை யானை, வீட்டின் முன் பகுதி சுவர், மேற்கூரையின் சிமென்ட் ஷீட்களை உடைத்து சேதப்படுத்தியது. கொட்டகையில் இருந்த ஆடுகளை, … Read more

இதுவரை இல்லாத அளவு; 2020-2021 நிதியாண்டில் இந்திய பாதுகாப்புத் துறையின் ஏற்றுமதி எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் பாதுகாப்புத் துறை சார்ந்த தொழில்நுட்பங்கள், சாதனங்களை பொதுத்துறை மற்றும் தனியார்த்துறை நிறுவனங்கள் உற்பத்தி செய்து வருகின்றன. அவற்றை இந்தியா மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவாய் ஈட்டி வருகிறது. இந்த நிலையில், 2021-2022 ஆண்டுக்கான வருவாயைப் பாதுகாப்பு உற்பத்தித் துறையின் (Dept Of Defence production) செயலாளர்களான அஜய்குமார், சஞ்சய் ஜாஜூ இருவரும் வெளியிட்டிருக்கின்றனர். அதன்படி 2021-2022 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 13,000 கோடி ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டுகளை விடவும் … Read more

உக்ரேனிய ராணுவத்தினரைக் கண்டு பதுங்கும் மக்கள்… அவசரமாக விடுக்கப்பட்ட உத்தரவு

உக்ரேனிய ராணுவம் கடும் பின்னடைவை எதிர்கொண்டுவரும் நிலையில், ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பொதுமக்களை போர்முனையில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவல் வெளியான நிலையில், ராணுவத்தினருக்கு அஞ்சி பொதுமக்கள் பதுங்கி வருகின்றனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு பல பகுதிகளில் உக்கிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் இரு தரப்பினரும் கடும் இழப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, சிறைக் கைதிகள், கொடூர கொலைகாரர்கள் என ரஷ்யா தரப்பில் களமிறக்க ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் உக்ரைன் தரப்பில், பொதுமக்களை … Read more

மின் கசிவால் தீ விபத்து அலங்கார பொருட்கள் சேதம்| Dinamalar

அரியாங்குப்பம் : மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள திருமண நிகழ்ச்சி அலங்கார பொருட்கள் எரிந்து சாம்பலாயின.அரியாங்குப்பம் அடுத்த சின்னவீராம்பட்டினத்தை சேர்ந்தவர் அருண்குமார். இருவர், திருமண நிகழ்ச்சிகளுக்கு தேவையான அலங்கார பொருட்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், அலங்கார பொருட்கள் வைத்திருந்த ஷெட் நேற்று திடீரென தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும், ஷெட்டில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள அலங்கார … Read more

“ஸ்டாலின் போன்றவர்கள் சாதி, மத அடிப்படையில் அரசியல் செய்கிறார்கள்..!" – பாஜக எம்.பி சாடல்

பா.ஜ.க தலைவரும், தெலங்கானவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருமான கே.லட்சுமணன், `ஸ்டாலின் போன்றவர்கள் சாதி, மத அடிப்படையிலான அரசியல் செய்கிறார்கள்’ என விமர்சனம் செய்துள்ளார். திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், “ஆன்மிகத்தின் பெயரால் இன்றைக்கு அவர்கள் அரசியல் நடத்த முயற்சிக்கிறார்கள். ஆன்மிகத்தின் பெயரால் மனிதர்களைச் சாதியால், மதத்தால் பிளவு படுத்துபவர்களுக்குத்தான் நாங்கள் எதிரிகள்” என பா.ஜ.க-வை மறைமுகமாகச் சாடியிருந்தார். பாஜக எம்.பி கே.லட்சுமணன் இந்த நிலையில் ஸ்டாலினின் இத்தகைய பேச்சுக்கு, பா.ஜ.க எம்.பி கே.லட்சுமணன் … Read more