உ.பி. முதல்கட்ட தேர்தல் : 60.17 % வாக்குகள் பதிவு..!

லக்னோ, உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில், 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.  இதன் முதல்கட்ட வாக்குப்பதிவு, இன்று நடைபெற்றது  11 மாவட்டங்களில் அடங்கிய 58 தொகுதிகள், முதல்கட்ட தேர்தலை சந்திக்கின்றன. 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 9 பேர் மந்திரிகள் ஆவர். தேர்தலையொட்டி, 58 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மத்திய படையினரும், மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்காளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த பதற்றமான பகுதிகளில் … Read more

பெங்களூர் நிறுவனத்தில் முதலீடு செய்த ரிலையன்ஸ்.. ஆட்டோமொபைல் துறைக்குள் என்டரி..!

இந்தியாவில் கிளீன் எனர்ஜி துறையில் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் குழுமம் 75,000 கோடி ரூபாய் முதலீட்டுத் திட்டத்தை வடிவமைத்துள்ளது. ரிலையன்ஸ் ரீடைல் பிரிவில் எப்படி நிறுவனத்தையும், நிறுவனப் பங்குகளையும் கைப்பற்றி வர்த்தகத்தைக் குறைந்த காலகட்டத்தில் விரிவாக்கம் செய்ததோ அதே முறையைத் தற்போது கிளீன் எனர்ஜி துறையிலும் பயன்படுத்த முடிவு செய்துள்ளார் முகேஷ் அம்பானி. இதுமட்டும் அல்லாமல் எலக்ட்ரிக் வாகனங்கள் மூலம் ஆட்டோமொபைல் துறையில் இறங்கும் மிக … Read more

டாடா டியாகோ & டிகோர் சிஎன்ஜி முன்பதிவு ஆரம்பம்

டியாகோ மற்றும் டிகோர் என இரண்டிலும் CNG மாறுபாட்டை டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வெளியிடுவதனை டீசர் வாயிலாக உறுதி செய்துள்ளது. இந்த மாடல் வரும் வாரங்களில் அறிமுகப்படுத்தப்படலாம் எனவே சிஎன்ஜி மாடலுக்கு முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. தற்போது விற்பனையில் உள்ள பெட்ரோல் மாடலை விட தோற்ற அமைப்பில் அல்லது மெக்கானிக்கல் மாற்றங்கள் எதுவும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது. 1.2-லிட்டர், மூன்று சிலிண்டர், ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படும். அதிகபட்சமாக 85bhp மற்றும் 113Nm டார்க்கை உற்பத்தி … Read more

புதுச்சேரி: `பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் கலாசாரம்!' – பா.ஜ.க-வை சாடும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இரண்டு நாட்களுக்கு முன்பு அரியாங்குப்பம் அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் இஸ்லாமிய மாணவியை ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என கடுமையாக பேசியுள்ளார். எல்லா மதத்தினருக்கும் அவர்களது மதத்தினுடைய கோட்பாடு, கலாசாரத்தை கடைப்பிடிக்க உரிமை உண்டு. இதை பற்றி கேள்வி கேட்க எந்த அரசு அதிகாரிக்கும் உரிமை கிடையாது. பா.ஜ.க இது அதிகார துஷ்பிரயோக செயல். ஒரு மதத்தை சேர்ந்தவரை இழிவுபடுத்தும் வகையில் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து … Read more

பிரித்தானியாவில் பயன்பாட்டுக்கு வரும் புதிய தடுப்பூசி! ஆனால், அது கொரோனாவுக்கானது அல்ல.,

பிரித்தானியாவின் NHS மருத்துவமனைகளில் புதிதாக எடை குறைப்புக்கான தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரவுள்ளது. எடை தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் உள்ள பருமனான மக்களுக்கு, எடையைக் குறைக்க ஒரு புதிய மருந்து, பிரித்தானியாவின் தேசிய சுகாதாரம் மற்றும் பராமரிப்பு சிறப்பு நிறுவனத்தால் (NICE), NHS-ல் பயன்பாட்டுக்கு கொண்டுவர பரிந்துரைக்கப்பட்டுள்ளது. Wegovy என சந்தைப்படுத்தப்படும் Semaglutide எனும் இந்த மருந்து, ஒருவர் தங்கள் வயிற்றை முழுதாக உணர வைப்பதன் மூலம் பசியைக் குறைக்கிறது. இதனை, ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் சேர்த்துப் … Read more

இஸ்ரோ இதுவரை 36 நாடுகளின் செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது! நாடாளுமன்றத்தில் தகவல்…

டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ  இதுவரை 36 நாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணில் வெற்றிகரமாக ஏவி சாதனை புரிந்துள்ளது என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. உலக வல்லரசு நாடுகளுக்கு இணையாக செயற்கை கோள்களை செலுத்துவதில், இஸ்ரோவும் தீவிரமாக செயலாற்றி வருகிறது. சந்திரனுக்கு ஏற்கனவே விண்கலத்தை அனுப்பிய நிலையில், இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் சத்திரயான்3 விண்கலத்தை அனுப்ப தயாராகி வருகிறது. இதற்கிடையில் வரும் 14ந்தேதி பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டு உள்ளது. இதுமட்டுமின்றி  இந்திய … Read more

99 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம்

பிளாக்பூல் இங்கிலாந்தின் ஐரிஷ் கடற்கரை நகரமான பிளாப்பூல் அருகே உள்ள லங்காஷயர் பகுதியில்  99 வயதான மூதாட்டி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. மன அழத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த அந்த மூதாட்டியின் நடத்தையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தை கண்ட அவரது குடும்பத்தினர் அவரது அறையில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராவை கண்காணித்தனர். அதில் 48 வயதான வீட்டின் பராமரிப்பாளர் பிலிப் கேரி என்பவர்  அந்த மூதாட்டியின் அறைக்குள் நுழைவதையும், பின்னர் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் … Read more

ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் தெப்போற்சவம்

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் ஆனந்தவல்லி நாயக சமேத ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு, தெப்போற்சவ விழா நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நடந்தது. இதையெட்டி தேவி, பூதேவியுடன், சுந்தரவரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, கோயில் வளாகத்தில் அமைந்துள்ள குளத்தில் வண்ண மலர்கள் மற்றும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட  தெப்பத்தில் தேவி, பூதேவியுடன் உற்சவர் சுந்தரவரதராஜப் பெருமாள் எழுந்தருளி குளத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதில், உத்திரமேரூர் மற்றும் பல்வேறு பகுதிகளை … Read more

சபரிமலையில்மாசி மாத பூஜைகளுக்காக நடை திறப்பு| Dinamalar

சபரிமலை:மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை மாலை, 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது.மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்த பின், 18ம் படி வழியாக சென்று ஆழியில் தீ வளர்ப்பார். இரவு, 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும். பிப்.13 அதிகாலை, 5:00 மணி முதல் பூஜைகள் துவங்கும். 17 இரவு, 10:00 மணி வரை நடை திறந்திருக்கும். பிப்., 13 முதல் 17 வரை தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு, ‘ஆன்லைன்’ முன்பதிவு வாயிலாக தரிசனத்திற்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளது. … Read more

நேரு நினைத்திருந்தால் சில மணி நேரத்தில் கோவாவை விடுதலை செய்திருக்கலாம் – பிரதமர் மோடி பாய்ச்சல்

பனாஜி, 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபைக்கு வரும் 14-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட உள்ளன. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருவதால் கோவா அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. இந்நிலையில், கோவாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். பிரசாரத்தின் போது பிரதமர் மோடி பேசியதாவது:- இந்தியா சுதந்திரம் அடைந்த (1947) பிறகு … Read more