கிணற்றின் மேல்தளம் உடைந்ததால் உள்ளே விழுந்து 13 பெண்கள் பலி – திருமண நிகழ்ச்சியில் அரங்கேறிய சோகம்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் நிபுவா நவ்ரங்யா என்ற கிராமத்தில் நேற்று திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நூற்றுக்கும் அதிகமான விருந்தினர்கள் வந்திருந்தனர். திருமண நிகழ்ச்சிக்கு பின்னர் இரவு திருமண வரவேற்பு நடைபெற்றது. வரவேற்பு நிகழ்ச்சியின் போது விருந்தினர்களில் பெண்கள் வீட்டிற்கு பின்னால் அமைந்திருந்த கிணற்றின் மேல் ஏறி நின்று பேசிக்கொண்டிருந்தனர்.  கிணற்றின் மேல் பகுதி இரும்பு வலையான ஆன கான்கிரீட் மேடை அமைக்கபப்ட்டிருந்தது. அதன் மீது ஏறி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். … Read more

4 நாள் மட்டுமே வேலை, அதே சம்பளம்.. ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..!

உலகளவில் ஊழியர்களின் வேலைத் திறனை மேம்படுத்தப் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது மிகவும் டிரெண்டான விஷயம் இரண்டு. சீனாவில் பிரபலமாகி வரும் 996 முறை, மேற்கத்திய நாடுகளில் பரவி வரும் வாரத்தில் 4 நாள் மட்டுமே பணியாற்றும் கலாச்சாரம். இதில் வாரத்தில் 4 நாள் மட்டுமே பணியாற்றும் கலாச்சாரம் அதிகப்படியான நாடுகளில் பயன்படுத்தத் துவங்கிய நிலையில் பெல்ஜியம் நாட்டின் முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. வருமான வரித்துறை பிடியில் சிக்கிய சீனா நிறுவனம்.. 3 … Read more

AK- 61: அஜித்துடன் முதல்முறை இணையும் இசையமைப்பாளர்! லுக்கை வடிவமைத்தது யார்? – ஆச்சர்யத் தகவல்கள்!

அஜித்தின் ரசிகர்கள் `வலிமை’ ரிலீஸில் பரபரப்பாக இருக்கிறார்கள். ஆனால் ஹெச்.வினோத்தின் டீமோ ‘ஏகே61’க்கான வேலைகளில் மும்முரமாக இறங்கிவிட்டனர். ஹைதராபாத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. இப்போது அரங்கம் அமைக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. செட் வேலைகள் நிறைவடைந்த பின்பு, படப்பிடிப்புக்கான தேதிகள் முடிவாகின்றன. ஹீரோயினாக தபுவை கமிட் செய்துள்ளனர். ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்திற்குப் பிறகு 22 ஆண்டுகள் கழித்து தற்போது அஜித்துடன் நடிக்கிறார் தபு. ‘வலிமை’யில் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கை மாற்றிய அஜித், இதிலும் … Read more

சுவிட்சர்லாந்தில் நள்ளிரவுடன் முடிவுக்கு வந்த கொரோனா கட்டுப்பாடுகள்

சுவிட்சர்லாந்தில் நேற்று நள்ளிரவுடன் பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டுவிட்டன. ஆகவே, இனி பொது இடங்களுக்குள் நுழைய சுகாதார பாஸ்கள் தேவையில்லை. பணித்தலம், கடைகள், உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளில் இனி மாஸ்க் அணியவேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது இப்போதைக்கு மாஸ்க் அணியவேண்டும். என்றாலும், அந்தக் கட்டுப்பாடும் அடுத்த மாத இறுதியில் முடிவுக்கு வர உள்ளது. இப்போதைக்கு ஒரு விதியில் மட்டும் மாற்றமில்லை. அதாவது கொரோனா பரிசோதனையில் தங்களுக்குக் கொரோனா தொற்று இருப்பதாக தெரியவருவோர் தங்களை … Read more

‘ஹிஜாப்’ முஸ்லிம் பெண்களை பின்னோக்கி இழுக்கிறது! கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான்

திருவனந்தபுரம்: கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில், ஹிஜாப் குறித்து குரானில் ஏதும் சொல்லப்படவில்லை, ஒரு பிரிவினரின் பிற்போக்கானமனநிலையின் விளைவு, முஸ்லிம் பெண்களை பின்னோக்கி இழுக்கிறது என்று கேரள ஆளுநர் ஆரிஃப் முகமதுகான் விமர்சித்துள்ளார். பள்ளிகளில் அனைவரும் சமம் என்பதை உணர்த்திடவே சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அவற்றை சரியாக கடைபிடிக்காத காரணத்தால், தற்போது மத ரீதியிலான பிரச்சினைகள் எழுந்துள்ளன.  கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களில் ஹிஜாப், … Read more

என்னை கொல்ல தி.மு.க.வினர் சதி- சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காந்தி சிலை அருகே இன்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- கடந்த 2006-ம் ஆண்டு என் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஈடுபட்டதாக கூறப்படுபவர், தான் இருந்த கட்சியில் இருந்து மாறி தற்போது தி.மு.க.வில் இணைந்து தனது மனைவிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்றுள்ளார். எனக்கு தரப்பட்ட போலீஸ் … Read more

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சி திமுக வேட்பாளர் மாரடைப்பால் உயிரிழப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சி 9 வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அனுசுயா பரப்புரையின் போது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். மேலும் இன்று காலை ஈரோடு அம்மாபேட்டை திமுக வேட்பாளர் சித்தி ரெட்டி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மேலும் 67 ஆயிரம் பேர் கோவிட்டிலிருந்து குணம்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 67 ஆயிரம் பேர் கோவிட் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,757 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,27,54,315 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 67,538 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,19,10,984 ஆனது. தற்போது 3,32,918 பேர் சிகிச்சையில் … Read more

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் இன்று பொங்கல் வழிபாடு…!

திருவனந்தபுரம், திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் விழாவில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு ஒரே இடத்தில் பொங்கல் வழிபாடு நடத்துவார்கள். இது சர்வதேச அளவில் புகழ் பெற்றதுடன் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. அதன்படி ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலின் வருடாந்திர பொங்கல் விழா கடந்த 9-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் … Read more