2வது ஒருநாள் போட்டி – வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 238 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

அகமதாபாத்: இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகளும் அகமதாபாத்தில் உள்ள மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், 2-வது ஒருநாள் போட்டி இன்று பகல் 1.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ரிஷ்ப் ப்ண்டும் களமிறங்கினர். ரோகித் சர்மா 5 ரன்னிலும், … Read more

பெரம்பலூர் பச்சைமலை பகுதியில் சைனிக் பள்ளி அமைக்க வேண்டும்: மக்களவையில் பாரிவேந்தர் வலியுறுத்தல்

டெல்லி: பெரம்பலூர் பச்சைமலை பகுதியில் சைனிக் பள்ளி அமைக்க வேண்டும் என மக்களவையில் பாரிவேந்தர் வலியுறுத்தியுள்ளார். பச்சைமலையில் சைனிக் பள்ளி அமைத்து அப்பகுதி மக்களுக்கு சிறப்பான கல்வி கிடைக்க நடவடிக்கை தேவை என பாரிவேந்தர் கூறியுள்ளார்.

பாஸ்டேக் மூலம் ரூ.26 ஆயிரம் கோடி வசூல்: மத்திய அமைச்சர் தகவல்| Dinamalar

புதுடில்லி: கடந்த ஜனவரி மாதம் வரை பாஸ்டேக் மூலமாக ரூ.26,622.93 கோடி வசூலாகியுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் அளித்துள்ளார். சுங்கச் சாவடிகளில், வாகனங்களுக்காக சுங்கக் கட்டணத்தை மின்னணு முறையில் செலுத்தும் பாஸ்ட்டேக் வசதி நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளது. வங்கிகள் மற்றும் தொலை தொடர்பு நிறுவனங்கள் வாயிலாக, ‘பாஸ்டேக்’ எனப்படும், மின்னணு அட்டைகள் வழங்கப்படுகின்றன. பாஸ்ட்டேக் மூலம் பெறப்படும் வருவாய் தொடர்பாக ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி … Read more

டிவிஎஸ் அழைத்து வந்த வெளிநாட்டு அதிகாரி.. இனி பஜாஜ், ஹீரோவுக்குக் கஷ்டம் தான்..!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தற்போது மகிப்பெரிய போட்டி உருவாகியுள்ளது, இந்தப் போட்டியில் யார் முதலில் அதிகப்படியான வாடிக்கையாளர்களையும், வர்த்தகச் சந்தையும் பிடிக்கிறார்களோ அவர்களுக்குத் தான் தொடர்ந்து பயணிக்க முடியும். இந்தச் சூழ்நிலையில் அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தனது வர்த்தகம், உற்பத்தி, டிசைன், திறன் ஆகியவற்றை மேம்படுத்தப் பல முயற்சிகளைச் செய்து வருகிறது. எல்ஐசி பாலிசி உங்களிடம் இருக்கா.. அப்போ 5% டிஸ்கவுண்ட் கட்டாயம் கிடைக்கும்..! இதன் படி சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் இருசக்கர … Read more

“தமிழகத்தின் நதிநீர் இணைப்பு திட்டத்தை எதிர்க்கிறோம்!" – கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

குண்டாறு, வைகை நதிகளை இணைக்கும் தமிழகத்தின் திட்டத்துக்கு நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை Also Read: மேக்கேதாட்டூ அணைக்கு விரைவில் அனுமதி? மத்திய அமைச்சரின் சூசக பதிலால் கொதிக்கும் தமிழக விவசாயிகள்! மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப் பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்திய பின்னர், டெல்லியில்  செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “நிலம் மற்றும் நீர் தொடர்பான மாநில நலன்களை பாதுகாப்பதில் கர்நாடகா எப்போதும் ஒன்றுபட்டிருக்கும். எங்கள் … Read more

உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள்: கனேடியர்களுக்கு அரசு எச்சரிக்கை

உக்ரைன் நாட்டிலிருக்கும் கனேடியர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்ய இராணுவம் ஊடுருவும் வாய்ப்பு உள்ளதால், முடிந்தவரையில் சீக்கிரமாக உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறுமாறு தனது மக்களை கனடா அரசு கேட்டுக்கொண்டுள்ளது. உக்ரைன் நாட்டில் உள்ள நமது தூதரகத்தின் தூதரக உதவிகளை செய்யும் திறன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என, உக்ரைனில் வாழும், பதிவு செய்துகொண்டுள்ள 780 கனேடியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மின்னஞ்சலில் தெரிவித்துள்ள கனேடிய அரசு, நீங்கள் உக்ரைனிலிருந்து வெளியேற கனடா அரசின் உதவியை … Read more

தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்க பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள்! அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் ராஜன்

மதுரை: தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்க வர இருக்கும் தமிழக பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளதாக அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் ராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ந்தேதி நடைபெற உள்ளது. மொத்தமுள்ள  12,607 பதவியிடங்களுக்கு 57,778 பேர் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் இதுவரை  218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருகின்றனர்.  இந்த நிலையில், தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் வேட்பாளர் அறிமுகம் செய்யும் கூட்டங்களும், நடைப்பெற்று … Read more

பர்தா தொடர்பான வழக்கு – கூடுதல் அமர்வுக்கு மாற்றி கர்நாடக ஐகோர்ட்டு தனி நீதிபதி உத்தரவு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.   இந்தப் போராட்டத்துக்கு எதிராக, சில மாணவர்கள் காவித்துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஹிஜாப் அணியும் மாணவிகளை வகுப்புக்குள் அனுமதித்தால் காவித்துண்டு அணிந்த எங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று அந்த மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர். … Read more

இரு வேறு சாதிகளை சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோர்களின் விருப்பத்தின் அடிப்படையில் சான்றிதழ் வழங்க உத்தரவு

சென்னை: இரு வேறு சாதிகளை சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோர்களின் விருப்பத்தின் அடிப்படையில் சான்றிதழ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பெற்றோர்களின் விருப்பத்தின் அடிப்படையில் தந்தை அல்லது தாயின் சாதியில் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.

இந்திய அணி 237 ரன்| Dinamalar

ஆமதாபாத்: விண்டீசுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் விளாச இந்திய அணி 50 ஓவரில் 237 ரன் எடுத்தது. இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய மோடி மைதானத்தில் நடக்கிறது. இந்திய அணியில் இஷான் கிஷான் நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல் தேர்வானார். விண்டீஸ் ரெகுலர் கேப்டன் போலார்டு காயத்தால் விலகினார். … Read more