ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத குழுக்கள் சுதந்திரமாக செயல்படுகின்றன: ஐ.நா.எச்சரிக்கை

நியுயார்க்: சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பால் ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் அதை எதிர்கொள்ளும் உறுப்பு நாடுகள் தொடர்பான ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சமீபகாலமாக வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத குழுக்கள் அதிக சுதந்திரத்தை அனுபவித்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நீண்ட கால போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானில் வெளிநாட்டு பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தற்போதைய தலிபான் தலைமை எந்த நடவடிக்கை எடுத்ததற்கான  அறிகுறியும் இல்லை என்றும் அந்த அறிக்கையில் … Read more

தேவையற்ற கிரகங்கள் விலகியது நல்ல சகுனம்: பாஜவை தாக்கிய ஓ.எஸ்.மணியன்

திருச்சி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி  ஸ்ரீரங்கம் கோட்டத்தில் முதல் 7 வார்டுகளுக்கான அதிமுக வேட்பாளர்கள்  அறிமுகக் கூட்டம் ஸ்ரீரங்கம் தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது.திருச்சி  மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வேட்பாளர்களை  அறிமுகப்படுத்தி பேசுகையில், திருச்சி மாவட்டத்தில் ஒன்பது தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறாத நிலையில், இத்தேர்தலில் முழு வெற்றி பெற்று வரலாறு  படைக்க வேண்டும். ஜாதகத்தில் தேவையில்லாத இடங்களில் தேவையில்லாத கிரகங்கள்  இருப்பது ஆகாது. அதுபோன்று நம்மிடம் இருந்த … Read more

மராட்டியத்தில் மேலும் 7,142 பேருக்கு கொரோனா தொற்று

மும்பை, மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7,142- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் ஒரே நாளில்  20,222- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு  மேலும் 92- பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 82,893- ஆக உள்ளது.  மராட்டியத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 78 லட்சத்து 23 ஆயிரத்து 385- ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 75 … Read more

ஏர்டெல் வாடிக்கையாளர்களே உஷார்.. மீண்டும் கட்டண உயர்வாம்.. பர்ஸ் காலி..!

இந்தியாவில் தற்போது பல துறையில் அதிகப்படியான போட்டி உருவாகியுள்ளது, அதிலும் குறிப்பாக டிஜிட்டல் பேமெண்ட், ஆட்டோமொபைல், ஆன்லைன் ரீடைல் வர்த்தகம் எனப் பல இருந்தாலும், இவை அனைத்திற்கும் அடித்தளமாக இருக்கும் டெலிகாம் துறையில் பிற துறைகளைக் காட்டிலும் அதிகப்படியான போட்டியும், வர்த்தகப் பாதிப்புகளும் உள்ளது. வர்த்தகப் போட்டியின் காரணமாக அதிகளவிலான வருமானத்தை இழந்துள்ள டெலிகாம் நிறுவனங்கள் அடுத்தடுத்துக் கட்டணத்தை உயர்த்தி வருகிறது. இந்நிலையில் நாட்டின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல் முக்கியமான முடிவை எடுத்துள்ளது. … Read more

இன்றைய ராசி பலன் | 10/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOsv Source link

ஜேர்மனியில் 31 கார்களை இடித்து பெரும் விபத்தை ஏற்படுத்திய டிரக் சாரதி! 3 பேர் காயம்

ஜேர்மனியில் டிரக் சாராராதி ஒருவர் குடிபோதையில் வாகனம் ஒட்டி 31 கார்களை இடித்து நாசமாக்கியுள்ளார். இந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. பிப்ரவரி 8-ஆம் திகதி தெற்கு ஜேர்மனியின் Fuerth பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பொலிஸ் அதிகாரிகளின் கூற்றுப்படி, போதையில் இருந்த டிரக் டிரைவர் சிவப்பு விளக்கைப் புறக்கணித்து வேகமாக சென்றுள்ளார். பின்னர், பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட கார்கள் மீது தனது வாகனத்தை மோதி, கட்டிடங்களுக்கு எதிராக கார்களைத் … Read more

கொரோனாவால் உயிரிழந்த 1616 சுகாதார பணியாளர்கள் குடும்பத்துக்கு ரூ.808 கோடி காப்பீடு அளித்த மத்திய அரசு

டில்லி கொரோனாவால் உயிரிழந்த 1616 சுகாதார பணியாளர்களுக்கு ரூ.808 கோடி காப்பீட்டு தொகை அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை   இன்றைய காலை தகவலின்படி இதுவரை இந்தியாவில் 4.24 கோடி பேர் பாதிக்கப்பட்டு அதில் 5.05 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 4.10 கோடி பேர் குணம் அடைந்து தற்போது 8.92 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று கொரோனா குறித்த கேள்வி ஒன்றுக்கு மாநிலங்களவையில் மத்திய சுகாதார … Read more

தமிழர்களின் நாட்டுப் பற்றுக்குப் பிரதமர் மோடியின் சான்றிதழ் தேவையில்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: நாட்டுக்காகப் போராடிய தலைவர்களை, வீரர்களை மதித்துப் போற்றுவதில் தமிழ்நாடு யாருக்கும் சளைத்தது அல்ல என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பேசியதாவது: இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சர் என்ற பெருமையை வட இந்திய ஊடகங்கள் எனக்கு வழங்கியதை எனக்குக் கிடைத்த பாராட்டாக நான் எடுத்துக் கொள்ளவில்லை. தமிழ்நாட்டு மக்களுக்காகவே என்னை நான் அர்ப்பணித்துள்ளேன் என்பதை அகில இந்திய … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ம் தேதி பொது விடுமுறை அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:  தமிழ்நாடு மாநிலத்திலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் (கடம்பூர் பேரூராட்சி நீங்கலாக) என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, சாதாரண தேர்தல் நடைபெற உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளுக்கு வருகிற 19ம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்படுகிறது.