இங்கிலாந்தில் முதல் பலி வாங்கிய லஸ்ஸா காய்ச்சல்… ஒரே குடும்பத்தில் மூவர் கண்காணிப்பில்

இங்கிலாந்தின் பெட்ஃபோர்ட்ஷையரில் ஒருவர் லஸ்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த காய்ச்சலால் இங்கிலாந்தில் இறக்கும் முதல் நபர் இவர் என இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேற்கு ஆபிரிக்காவில் இருந்து திரும்பிய குடும்பம் ஒன்று லஸ்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட, தற்போது அந்த குடும்பத்தில் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாகவே தெரிய வந்துள்ளது. இதுவரை பிரித்தானியாவில் 10 பேர்களுக்கு மட்டுமே லஸ்ஸா காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2009ம் ஆண்டுக்கு பின்னர் … Read more

வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது திட்டமிட்டபடி விசாரணை நடத்தப்படும்- உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது திட்டமிட்டபடி விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றி அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின்போது உள்ஒதுக்கீடு அரசியல் அமைப்பிற்கு எதிரானது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு … Read more

கனமழை எதிரொலி – திருவாரூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவாரூர்: மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் … Read more

பெரம்பலூர் அருகே பள்ளிக்கு வந்த சிறுமிகளிடம் போதையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் காரை மலையப்பநகர் அரசு தொடக்கபள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை இன்று பள்ளிக்கு வந்து சிறுமிகளிடம் போதையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். தலைமை ஆசிரியரியரை பிடித்து ஊர் மக்கள் போலிசில் ஒப்படைத்துள்ளனர்.

இந்தியா ஹாட்ரிக் வெற்றி * கோப்பை கைப்பற்றி அசத்தல்| Dinamalar

ஆமதாபாத்: விண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றது இந்தியா. மூன்றாவது போட்டியில் 96 ரன்னில் வென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியது. இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. கொரோனா காரணமாக அனைத்து போட்டிகளும் ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மோடி மைதானத்தில் நடந்தன. முதல் இரு போட்டியில் வென்ற இந்திய அணி 2-0 என தொடரை கைப்பற்றியது. மூன்றாவது, கடைசி … Read more

இனி இந்தியாவிலும் ‘இந்தச் சேவை’ கிடைக்கும்.. எலான் மஸ்க்-கிற்குப் போட்டியாக ஒன்வெப்..ஏர்டெல் டீலிங்!

உலகளவில் இண்டர்நெட் சேவையில் தற்போது 5ஜி சேவை எந்த அளவிற்கு முக்கியமாகவும், பிரபலமாகவும் இருக்கிறதோ, அதை விடவும் பிராண்ட்பேன்ட் சேவையில் எலான் மஸ்க் தலைமை வகிக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அளிக்கும் செயற்கைக்கோள் வாயிலான இண்டர்நெட் சேவையான ஸ்டார்லிங்க் தான் தற்போது மிகப்பெரிய டெக்னாலஜி பிரேட்டவுனாக விளங்குகிறது. இந்நிலையில் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்குப் பல தனியார் மற்றும் அரசு நிறுவனங்களும் இத்தகைய சேவையை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் விரைவில் இந்தியாவிலும் செயற்கைக்கோள் வாயிலான இண்டர்நெட் சேவை அறிமுகமாக … Read more

`ஊழல் என்றால் என்னவென்றே தெரியாத எங்கள் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்!' – அண்ணாமலை

விழுப்புரம் மாவட்டத்தில், நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் பரப்புரை மேற்கொண்ட அந்தக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை, “விழுப்புரம் மாவட்டம் அதிகமான தேர்தல்களை சந்தித்துள்ளது. குறிப்பாக, குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு வாக்களித்து அவர்கள் ஆட்சியில் இருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கின்றனவா என்றால் நிச்சயமாக கிடையாது. மக்களது வாழ்க்கைத் தரத்தில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை, அப்படியேதான் இருக்கிறார்கள். 8 ஆண்டுகளில் ஒரு … Read more

பிப்ரவரி 28ம் திகதி முதல் பிரான்சில் அமுலுக்கு வரும் புதிய விதி!

 பிப்ரவரி 28 முதல் பிரான்ஸில் முக்கிய கொரோனா விதி தளர்த்தப்படுதவாக நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதாவது, 28ம் திகதி முதல் உட்புற இடங்களில் மக்கள் இனி முகக் கவசம் அணி வேண்டியதில்லை. நுழைவதற்கு தடுப்பூசி பாஸ்போர்ட் தேவைப்படும் பார்கள் மற்றும் உணவகங்கள், விளையாட்டு அரங்குகள் போன்ற பொது இடங்களில் இந்த விதி பொருந்தும்,  இருப்பினும், பிரான்சில் உள்ள மக்கள் பிப்ரவரி 28 ம் திகதிக்குப் பிறகும் பொது போக்குவரத்தில் முகக் கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும். … Read more

சேலம் சிவராஜ் குழும இயக்குனர் சிவராஜ் சஞ்சய் காலமானார்

சேலம்: சேலம் சிவராஜ் குழுமத்தின் தலைவர் டாக்டர் ஆர் சிவராஜ் சிவகுமாரின் மகன் டாக்டர் சிவராஜ் சஞ்சய் காலமானர். அவருக்கு வயது 50. சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 7 தலைமுறையாக இயங்கி வரும் சிவராஜ் சித்த வைத்திய சாலையின் இயக்குநரான சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார் (78) உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி காலமானார். சிவராஜ் சிவகுமார் மறைவுக்கு பிறகு அவரின் மகன் சஞ்சய் சிவராஜ், சிவராஜ் சித்த வைத்திய … Read more

பந்துவீச்சாளர்கள் அசத்தல் – ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீசை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா

அகமதாபாத்: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பண்ட் அரை சதம் அடித்தனர். ஸ்ரேயாஸ் அய்யர் 80 ரன்னும், ரிஷப் பண்ட் 56 ரன்னும் எடுத்தனர். 7-வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் … Read more