சுவிட்சர்லாந்தில் தலிபான்களின் சந்திப்பு: வெடிக்கும் சர்ச்சை

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்க பிரதிநிதிகள் சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை ஒன்றில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை உலகின் எந்த நாடும் தலிபான்களின் அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளாத நிலையில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானை பொறுத்தமட்டில், மொத்தமுள்ள 42 மில்லியன் மக்கள் தொகையில் சரிபாதி மக்கள் பட்டினியால் பரிதவிப்பதாக தெரிய வந்துள்ளது. 2021ல் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் வெளிநாட்டு உதவிகள் அனைத்தும் மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் பொருளாதாரம் … Read more

நிலையான வளர்ச்சியில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம்! நிதிஆயோக் தகவல்…

டெல்லி: மாநிலத்தின் நிலையான வளர்ச்சியில்  இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்து உள்ளது. ஏற்கனவே சுகாதாரத் துறையில் நாட்டிலேயே 2வது இடத்தில் தமிழ்நாடு இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது மாநிலத்தின் வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவின் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள  குழுவே நிதி ஆயோக் (NITI – National Institution for Transforming India) இந்த குழு மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்த பிறகு, 2015ம் … Read more

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆப்கானிஸ்தானை பயன் படுத்தக் கூடாது – குவாட் அமைப்பு வலியுறுத்தல்

மெல்போர்ன்: இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்ற குவாட் மாநாடு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன், ஜப்பான் வெளியுறவுத்துறை மந்திரி யோஷிமாசா ஹயாஷி, ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி மாரைஸ் பெய்ன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.   இந்தோ – பசிபிக் கடல் பிராந்தியத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த மாநாட்டில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்தோ … Read more

அதிமுக வேட்பாளர் திமுகவில் இணைந்தார்

சேலம்: சேலம் மேற்கு மாவட்டம் மேச்சேரி பேரூராட்சியில் 4வது வார்டில் அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தவர் நடராஜ். இவர் கடைசி நாளில் மனுவை வாபஸ் பெற்றார். இந்நிலையில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன் மேச்சேரி 4வது வார்டு முன்னாள் அதிமுக கவுன்சிலர்கள் சின்னதம்பி, மகிபாலன், மற்றும் அதிமுகவை சேர்ந்த ஒபுளிசெட்டியார், சேகர், சிவசங்கர், ராஜா, தியாகராஜன் உள்பட 50க்கும் மேற்பட்டோர் … Read more

காற்றால் கண்டம் வரும்: கோடி மடாதிபதி ஆரூடம்| Dinamalar

சிக்கபல்லாபூர்-“கொரோனாவுக்கு முன்பே நான் கூறியிருந்தேன். சங்கடம் வரும் போது, ‘வெங்கடரமணா’ என கூற வேண்டும். மக்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற காரணத்தாலேயே, கொரோனா பூமிக்கு வந்தது. இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்,” என கோடி சுவாமிகள் தெரிவித்தார்.சிக்கபல்லாபூரில், அவர் நேற்று கூறியதாவது:கொரோனா எப்படி இருந்தது என்பதற்கு கோவில்களின் கதவு மூடப்பட்டதே சாட்சியாக இருந்தது. பிரபலமான திருப்பதி, தர்மஸ்தலா, சாமுண்டேஸ்வரி கோவில்கள் மூடப்பட்டிருந்தன. மடங்களும் கதவை மூட வேண்டிய நிலை உருவானது.கொரோனாவுக்கு முன்பே நான் கூறியிருந்தேன். சங்கடம் … Read more

கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்துக்கு ரூ.73 ஆயிரம் கோடி நிதி – நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

புதுடெல்லி, நாடாளுமன்ற மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பதில் அளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அடுத்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட், ஒரு தொடர்ச்சியை குறிக்கிறது. இது பொருளாதாரத்தில் நிலைத்தன்மை, வரிவிதிப்பு முன்கணிப்பு ஆகியவற்றை கொண்டு வருகிறது. பட்ஜெட்டின் நோக்கம், பொருளாதாரத்தில் நிலையான, நீடித்து நிற்கத்தக்க மீட்புதான். 2008-09 நிதி நெருக்கடியின்போது சில்லரை பணவீக்க விகிதம் 9.1 சதவீதமாக இருந்தது. இருப்பினும், பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிற கொரோனா வைரஸ் … Read more

வேலை தேடுபவர்களுக்கு குட் நியூஸ்.. கிளியர் ட்ரிப் சூப்பர் அறிவிப்பு..!

ஆன்லைன் பயண சேவை நிறுவனமான கிளியர் ட்ரிப் அதன் ஊழியர்களின் எண்ணிக்கையை வரும் காலாண்டில் 40% அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளது. இது டிசம்பர் 2022ல் மொத்த ஊழியர்கள் தொகுப்பினை 700 பேராக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 3 நாளில் 65% உயர்வு.. அசத்தும் அதானி நிறுவனம்.. முதலீட்டாளர்களுக்கு செம லாபம்..! இது கடந்த 2021ல் 240 ஊழியர்களை கொண்டிருந்தது என இந்த நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளில் போக்குவரத்து … Read more

அமெரிக்க மக்களுக்கு 48 மணி நேர கெடு: இராணுவம் மீட்காது என எச்சரிக்கை

உக்ரைனில் தங்கியுள்ள அமெரிக்க மக்கள் அடுத்த 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி புடின் எப்போது வேண்டுமானாலும் உக்ரைன் மீது போர் தொடுக்கலாம் எனவும், அமெரிக்க மக்கள் எவரையும் மீட்க இராணுவம் உக்ரைனுக்கு வர வாய்ப்பில்லை எனவும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அடுத்த 48 மணி நேரத்திற்குள் அனைத்து அமெரிக்க மக்களும் உக்ரைன் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – இரவு 10 மணி வரை பிரசார செய்ய மாநில தேர்தல் ஆணையம் அனுமதி

சென்னை,  வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி ஆளும் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழகம் முழுவதும் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.  இந்தநிலையில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சியினர் பிரசாரத்துக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.  காலை 6 மணி முதல் இரவு 10 … Read more