விசா விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத் துறை குற்றச்சாட்டு

புதுடெல்லி: பஞ்சாபில் மின் உற்பத்தி நிலையம் அமைக்க, சீனப் பணியாளர்களுக்கான விசாவை மீண்டும் பயன்படுத்துவதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியைப் பெறுவதற்காக காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் நெருங்கிய உதவியாளர் மூலம் ரூ.50 லட்சம் லஞ்சமாகப் பெற்றதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. அட்வாண்டேஜ் ஸ்ட்ரேடெஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிட். நிறுவனத்துக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை மற்றும் சிபிஐ-யின் முதல் தகவல் அறிக்கையில், “வேதாந்தா குழுமத்தின் தால்வாண்டி சபோ பவர் லிட் (டிஎஸ்பிஎல்) … Read more

ஜனநாயக படுகொலை செய்யும் பாஜக! செய்தியாளர் சந்திப்பில் சோனியா காந்தி குற்றச்சாட்டு!

Sonia Gandhi Rare Press Meet : காங்கிரஸ் கட்சியை பொருளாதார ரீதியாக முடக்குவதற்கு பாஜக திட்டமிடுவதாக சோனியா காந்தி பகிரங்க குற்றச்சாட்டு.. ஜனநாயகத்தை படுகொலை செய்யாதீர்கள்!  

தேர்தல் பத்திரங்களின் முழு விவரமும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கல்: எஸ்பிஐ தகவல் @ உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் குறித்த முழு விவரங்களும் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுப்பவர்கள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக கொடுத்து வந்த நிலையில், அது குறித்த முழு விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்துக்கு வழங்க வேண்டும் என்றும், அந்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, பாரத ஸ்டேட் வங்கி அளித்த விவரங்களை … Read more

பாஜக சார்பாக தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு.. தமிழிசை, எல்.முருகன், கே.அண்ணாமலை……

Lok Sabha Election 2024: லோக்சபா தேர்தலுக்கான மூன்றாவது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தமிழகத்தில் இருந்து 9 வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.

“சாதிவாரி கணக்கெடுப்பை காங். ஆதரிப்பது இந்திரா, ராஜீவ் காந்தியை அவமதிக்கும் செயல்” – ஆனந்த் சர்மா

புதுடெல்லி: நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்துக்கோ, ஏற்றத்தாழ்வுக்கோ சாதிவாரி கணக்கெடுப்பு தீர்வாக இருக்க முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். காங்கிரஸ் தலைமையலான அரசு மத்தியில் அமைந்தால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் சாதிவாரி கணக்கெடுப்பை முக்கிய பிரச்சினையாக அவர் முன்வைத்து … Read more

தயாராகும் ED.. கைதாகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்? டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவால் நெருக்கடி

Arvind Kejriwal Arrested? டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் கெஜ்ரிவாலுக்கு பெரும் நெருக்கடி ஏற்படுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்வதிலிருந்து பாதுகாப்பு அளிக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.

“கொள்ளையடித்த பணத்தை பிரச்சாரத்துக்கு காங்கிரஸ் பயன்படுத்தலாமே” – ஜெ.பி.நட்டா பகடி

புதுடெல்லி: “காங்கிரஸ் கட்சி இத்தனை ஆண்டு காலமாக கொள்ளையடித்த பணத்தை, தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தலாம்” என்று பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா பகடி தொனியில் கருத்து தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர், காங்கிரஸ் கட்சியை நிதி ரீதியாக முடக்க பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டினர். இதற்கு பதில் அளிக்கும் விதமாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக தேசிய … Read more

மோடி அரசின் உண்மை கண்டறியும் குழுவுக்கு (FCU) உச்சநீதிமன்றம் தடை

IT Amendment Rules 2023: மோடி அரசின் உண்மை கண்டறியும் குழு (Fact Check Unit) தொடர்பான அரசாணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிப்பு. “இது கருத்து சுதந்திரம் சம்பந்தப்பட்ட விஷயம்” என தலைமை நீதிபதி அறிவிப்பு.

விளம்பர வழக்கில் நோட்டீஸ் எதிரொலி: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியது பதஞ்சலி

புதுடெல்லி: பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், யோகா குரு பாபா ராம்தேவின் நெருங்கிய உதவியாளருமான ஆச்சார்யா பாலகிருஷ்ணா, நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் அதன் மருத்துவ திறன் குறித்த தவறான விளம்பர கூற்றுக்காக உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பர சர்ச்சை தொடர்பான வழக்கின் நோட்டீஸ்களுக்கு பதில் அளிக்காதது குறித்து நீதிமன்றம் கடுமையாக கண்டனம் தெரிவித்த மறுநாளான நேற்று, பதஞ்சலி நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தது. இந்தநிலை, நீதிபதிகள் … Read more

லோக்சபா தேர்தல் 2024: கண்டுக்கொள்ளாத பாஜக.. கை விட்ட இந்தியா கூட்டணி.. வருண் காந்திக்கு நேர்ந்த நிலை..

Varun Gandhi Political Career: லோக்சபா தேர்தல் 2024: பாஜக மற்றும் சமாஜவாதிக்கு அதிர்ச்சி! வருண் காந்தி இப்போது என்ன செய்வார்?