எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு – ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்கு மாநிலங்களவையில் பாராட்டு

புதுடெல்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை சுமுகமாக நடைபெற்று வருகிறது. ஓய்வு பெறும் வைகோ உள்ளிட்ட எம்பிக்களுக்கு அவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற மக்களவை இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்குக் கூடியதும், சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி நேரத்தைத் தொடங்கினார். இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கேள்வி நேரம் மற்றும் நேரமில்லா நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, பிஹாரில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் … Read more

மும்பை குண்டுவெடிப்பு வழக்கு – உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை

புதுடெல்லி: மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் சிறப்பு நதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 12 பேரை, உயர் நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி மும்பை புறநகர் ரயில்​களில் அடுத்​தடுத்து குண்​டு​கள் வெடித்​த​தில் 189 பேர் உயி​ரிழந்​தனர். 800-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இது தொடர்​பாக 12 பேர் கைது செய்​யப்​பட்​டனர். இந்த வழக்கை விசா​ரித்த மும்பை சிறப்பு நீதி​மன்​றம் கடந்த … Read more

அமலாக்கத்துறை சோதனை எங்கள் மீது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது -ரிலையன்ஸ் நிறுவனங்கள்

Reliance Power Statement In Tamil: அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் தொடர்பான வணிகங்களில் அமலாக்க இயக்குநரகம் (ED) சமீபத்தில் அதிரடி சோதனைகளை நடத்தியுள்ளன. அதுக்கு குறித்து ரிலையன்ஸ் நிறுவனங்கள் அளித்த பதில் என்ன? முழு தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

“எஸ்ஐஆர் நிறுத்தப்படாவிட்டால் பிஹார் தேர்தலை புறக்கணிப்போம்” – தேஜஸ்வி எச்சரிக்கை

பாட்னா: தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர ஆய்வு (எஸ்ஐஆர்) என்ற பெயரிலான வாக்காளர் பட்டியல் திருத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிப்போம் என்றும் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதைக் கருத்தில் கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தகுதி வாய்ந்த எந்த வாக்காளரின் பெயரும் விடுபட்டுவிடக் … Read more

இங்கிலாந்துக்கு இனி 95% வேளாண் பொருட்களை வரியின்றி ஏற்றுமதி செய்யலாம்: பியூஷ் கோயல்

புதுடெல்லி: 95% இந்திய வேளாண் பொருட்களும், 99% இந்திய கடல்சார் உணவுப் பொருட்களும் வரி இன்றி இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பை இந்தியா – இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வழிவகை செய்கிறது என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்தியா – இங்கிலாந்து இடையே விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CETA) என்ற பெயரிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து, இதனால் இந்தியாவுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து பியூஷ் … Read more

கீழடி அறிக்கை நிலை என்ன? – நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் விளக்கம்

புதுடெல்லி: கீழடி அகழாய்வின் துல்லியமான கண்டுபிடிப்புகளை வெளியிடுவதில் உலகளாவிய அறிவியல் நடைமுறைகளை பின்பற்ற இந்திய தொல்லியல் துறை உறுதி பூண்டுள்ளதாக மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று திமுக உறுப்பினர் திருச்சி சிவா எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியது: “கீழடி அகழாய்வுக்கு தலைமை ஏற்ற தொல்பொருள் ஆய்வாளரின் அறிக்கை நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டது. அவரது ஒப்புதலுடன் நிபுணர்களின் முடிவுகளையும் இணைத்து அதிகாரப்பூர்வ … Read more

இந்தியா – பிரிட்டன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்… இனி இந்த பொருள்களின் விலை குறையும்

இந்தியா- இங்கிலாந்து இடையிலான தடையற்ற வாணிப ஒப்பந்தம் (FTA) மூலம் மூலம் பிரிட்டனில் இருந்து வரும் 90% பொருட்களுக்கு இந்தியா வரி விலக்கு அளிக்கும். 

“தப்பிக்க முடியும் என்று நினைக்காதீர்கள்” – தேர்தல் ஆணையத்துக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை

புதுடெல்லி: “முறைகேடுகளைச் செய்துவிட்டு தப்பித்துவிட முடியும் என தேர்தல் ஆணையம் நினைத்தால் அது நடக்காது. ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் அழிக்க முயற்சிப்பவர்கள் அதற்குரிய தண்டனையை நிச்சயம் பெறுவார்கள்.” என்று ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் பிஹாரில் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கவுரவ் … Read more

இந்தியாவில் காணாமல் போன சிறுமிகள்..வெளிநாட்டில் பிணமாக கண்டெடுப்பு! நடந்தது என்ன?

2 Indian Sisters Found Dead In Bhaktapur : இரண்டு டீன் ஏஜ் சகோதரிகள், வீட்டிற்குள் பிணமாக கிடந்தது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.  

பேராசிரியரின் மறு நியமன பதவிக் காலத்தை குறைத்த சென்னை பல்கலை. உத்தரவு: ஐகோர்ட் ரத்து

சென்னை: கல்வியாண்டு முடிவடைவதற்கு முன், பேராசிரியரின் மறு நியமன பதவிக்காலத்தை குறைத்த சென்னை பல்கலைகழகத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் துறை தலைவராக பணியாற்றிய வெங்கடாசலபதி, 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பணி ஓய்வு பெற்றார். பல்கலைக்கழக சட்டப்படி, கல்வியாண்டு முடிவடையும் ஜூன் 30 ஆம் தேதி வரை பணியாற்ற அவருக்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்நிலையில், துறைக்கு புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை பணி நீட்டிப்பு வழங்கக் கோரி … Read more