கர்நாடகாவில் 8 அரசு அதிகாரிகளின் வீடுகளில் சோதனை: ரூ.50 கோடி மதிப்பிலான பணம், நகைகள், ஆவணங்கள் பறிமுதல்

பெங்களூரு: கர்​நாட​கா​வில் ஐஏஎஸ் அதி​காரி உட்பட 8 அரசு அதி​காரி​களின் வீடு​களில் லோக் ஆயுக்தா போலீ​ஸார் நேற்று அதிரடி சோதனை நடத்​தினர். இதில் கணக்​கில் வராத ரூ.50 கோடி மதிப்பிலான ​ப‌ணம், தங்க நகைகள் மற்​றும் ஆவணங்கள் சிக்கின. கர்​நாடக மாநிலத்​தில் அரசு பணி​யில் உள்ள முக்​கிய அரசு அதி​காரி​கள் ஊழலில் ஈடு​படு​வ​தாக லோக் ஆயுக்தா போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. அதன் அடிப்​படை​யில் லோக் ஆயுக்தா போலீ​ஸார் நேற்று பெங்​களூரு, மங்​களூரு, மைசூரு, துமக்​கூரு, குடகு, … Read more

மசூதிக்குள் ஆடை கட்டுப்பாட்டை கடைபிடிக்காமல் முஸ்லிம் மத உணர்வை புண்படுத்திவிட்டார் டிம்பிள் யாதவ்: பாஜக குற்றச்சாட்டு

புதுடெல்லி: ச​மாஜ்​வாதி கட்சி தலை​வர் அகிலேஷ் யாதவ், நாடாளு​மன்​றம் அரு​கே​யுள்ள மசூ​தி​யில் நேற்று கட்சி கூட்​டத்தை கூட்டினார். இதில் அகிலேஷ் யாதவ் மனைவி டிம்​பிள் யாதவ் உட்பட சமாஜ்​வாதி தலை​வர்​கள் பலர் கலந்து கொண்​டனர். டிம்​பிள் யாதவ் முக்​காடு போடா​மல் சாதா​ரண​மாக சேலை கட்டி அமர்ந்​திருந்​தார். இதுகுறித்து பாஜக சிறு​பான்​மை​யின மோர்ச்சா அமைப்​பின் தலை​வர் ஜமால் சித்​திக் கூறிய​தாவது: வழி​பாட்​டுத் தலமான மசூதிக்குள் நடை​பெற்ற கட்சி கூட்​டத்​தில் பங்​கேற்ற டிம்​பிள் யாதவ் முறை​யாக ஆடை அணி​யாமல் மசூதி … Read more

LPG பயன்பாடு 70% குறையும்… மக்களும் அதிகளவில் சேமிக்கலாம் – மாநில அரசின் புதிய திட்டம்

Gram Urja Scheme: மாநில அரசு கொண்டு வந்துள்ள இந்த திட்டத்தினால் கிராமப்புறங்களில் 70% LPG கேஸ் பயன்பாடு குறையும் என கூறப்படுகிறது. இத்திட்டம் குறித்து இங்கு காணலாம்.

உ.பி.யில் போலியாக தூதரகம் அமைத்து மோசடி செய்த நபர் கைது

காஜியாபாத்: போலியாக வேலைவாய்ப்பு நிறுவனம், போலீஸ் நிலையம், நீதிமன்றம் அமைத்து மோசடி செய்த செய்திகள்தான் இதுவரை வந்துள்ளன. ஆனால், போலி வெளிநாட்டு தூதரகத்தை உருவாக்கி ஒருவர் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷ்வர்தன் ஜெயின். இவர் காஜியாபாத் பகுதியில் 2 மாடிகள் கொண்ட சொகுசு மாளிகையை வாடகைக்கு எடுத்து அதில் வெஸ்ட்டார்க்டிகா நாட்டு தூதரகம் என்ற பெயரில் போலி தூதரகத்தை நடத்தி வந்துள்ளார். மேலும், அவரது தூதரக வளாகத்தில் விலை உயர்ந்த … Read more

உலகளவில் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் 77-வது இடத்துக்கு முன்னேறியது இந்தியா!

புதுடெல்லி: ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு அறிக்கை கடந்த 22-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்கள் வைத்திருக்கும் நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் கடந்த ஆண்டு 85-வது இடத்தைப் பெற்றிருந்த இந்தியா, தற்போது 77-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதனால் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இனி உலகளவில் 50 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும் அல்லது விசா-ஆன்-அரைவல் வசதியைப் பெற முடியும். இதில் மலேசியா, இந்தோனேசியா, மாலத்தீவுகள், தாய்லாந்து போன்ற ஆசியாவின் பிரபலமான … Read more

ஆபரேஷன் சிந்தூர் பற்றி மாநிலங்களவையில் பிரதமர் மோடி 29-ம் தேதி உரையாற்றுகிறார்

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து மாநிலங்களவையில் வரும் 29-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக இந்திய முப்படைகளும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள், விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்தின. போர் மூளும் சூழ்நிலை உருவானாலும் இந்த தாக்குதல் மே 7-ம் … Read more

சபோர்கா, பவுல்வியா, லோடோனியா… – உ.பி.யில் வாடகை வீட்டில் போலி தூதரகம் நடத்தி வந்தவர் கைது!

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் நகரில் வாடகை வீட்டில் போலி தூதரகத்தை நடத்தி மோசடியில் ஈடுபட்ட ஹர்ஷ்வர்தன் ஜெயின் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெஸ்டார்டிகா, சபோர்கா, பவுல்வியா, லோடோனியா என இல்லாத நாடுகளின் தூதராக தன்னைக் காட்டிக்கொண்டு கடந்த 7 ஆண்டுகளாக இந்த போலி தூதரகத்தை காசியாபாத்தைச் சேர்ந்த ஹர்ஷ்வர்தன் ஜெயின் நடத்தி வந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு உலக தலைவர்களுடன் தான் இருப்பது போன்று போலி புகைப்படங்களை உருவாக்கி பலரையும் நம்ப … Read more

முழு அரசு மரியாதையுடன் கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் உடல் தகனம்!

ஆலப்புழா: கடந்த 21-ம் தேதி காலமான கேரள முன்னாள் முதல்வரும் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலை​வரு​மான வி.எஸ்​.அச்​சு​தானந்​தன் (101) உடல் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள புன்னப்பாரா – வயலார் தியாகிகள் நினைவிடத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. ஆலப்புழாவில் அரபிக் கடலில் புதன்கிழமை மாலை சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு மக்கள் புடைசூழ அவருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் புன்னப்பாரா – வயலார் தியாகிகள் நினைவிடத்தில் வி.எஸ்​.அச்​சு​தானந்​தன் உடல் அருகே குழுமியிருந்த ‘சகாவு’கள் முழக்கமிட்டு அஞ்சலி செலுத்தினர். அதன் … Read more

ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமாவும், விடை தெரியாத சில கேள்விகளும்! – ஒரு பார்வை

இந்திய குடியரசு துணைத் தலைவர் ஒருவர் தனது பதவிக் காலம் முடிவதற்கு முன்னதாகவே ராஜினாமா செய்திருப்பது நாட்டின் வரலாற்றில் முதன்முறை என்பதால் மட்டுமல்ல, வழக்கம்போல் அலுவலுக்கு வந்தவர், அவரது வழக்கமான இயல்பில் எந்த மாற்றத்தையும் முகத்திலும், உடல்மொழியிலும் சிறு அறிகுறிகளைக் கூட கடத்தாதவர் ராஜினாமா செய்தது ஏன்? 4 மணி நேர இடைவெளியில் நடந்தது என்ன? என்று ஊகங்களை விட்டுவிட்டுச் சென்றதும் இந்திய அரசியலில் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த வேகத்திலேயே, … Read more

அகமதாபாத் விமான விபத்தில் இறந்தோர் உடல்களை ஒப்படைப்பதில் குளறுபடியா? – பிரிட்டன் ஊடக செய்திக்கு இந்தியா மறுப்பு

புதுடெல்லி: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த பிரிட்டன் நாட்டவர்களின் உடல்களை ஒப்படைப்பதில் குளறுபடிகள் நடந்துள்ளதாக பிரிட்டன் ஊடகங்கள் வெளியிட்ட செய்திக்கு இந்திய வெளியுறவுத் துறை மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 12ம் தேதி குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். விமானம் மோதிய மருத்துவமனை விடுதியில் … Read more