முழு அரசு மரியாதையுடன் கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் உடல் தகனம்!

ஆலப்புழா: கடந்த 21-ம் தேதி காலமான கேரள முன்னாள் முதல்வரும் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலை​வரு​மான வி.எஸ்​.அச்​சு​தானந்​தன் (101) உடல் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள புன்னப்பாரா – வயலார் தியாகிகள் நினைவிடத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. ஆலப்புழாவில் அரபிக் கடலில் புதன்கிழமை மாலை சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு மக்கள் புடைசூழ அவருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் புன்னப்பாரா – வயலார் தியாகிகள் நினைவிடத்தில் வி.எஸ்​.அச்​சு​தானந்​தன் உடல் அருகே குழுமியிருந்த ‘சகாவு’கள் முழக்கமிட்டு அஞ்சலி செலுத்தினர். அதன் … Read more

ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமாவும், விடை தெரியாத சில கேள்விகளும்! – ஒரு பார்வை

இந்திய குடியரசு துணைத் தலைவர் ஒருவர் தனது பதவிக் காலம் முடிவதற்கு முன்னதாகவே ராஜினாமா செய்திருப்பது நாட்டின் வரலாற்றில் முதன்முறை என்பதால் மட்டுமல்ல, வழக்கம்போல் அலுவலுக்கு வந்தவர், அவரது வழக்கமான இயல்பில் எந்த மாற்றத்தையும் முகத்திலும், உடல்மொழியிலும் சிறு அறிகுறிகளைக் கூட கடத்தாதவர் ராஜினாமா செய்தது ஏன்? 4 மணி நேர இடைவெளியில் நடந்தது என்ன? என்று ஊகங்களை விட்டுவிட்டுச் சென்றதும் இந்திய அரசியலில் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த வேகத்திலேயே, … Read more

அகமதாபாத் விமான விபத்தில் இறந்தோர் உடல்களை ஒப்படைப்பதில் குளறுபடியா? – பிரிட்டன் ஊடக செய்திக்கு இந்தியா மறுப்பு

புதுடெல்லி: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த பிரிட்டன் நாட்டவர்களின் உடல்களை ஒப்படைப்பதில் குளறுபடிகள் நடந்துள்ளதாக பிரிட்டன் ஊடகங்கள் வெளியிட்ட செய்திக்கு இந்திய வெளியுறவுத் துறை மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 12ம் தேதி குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். விமானம் மோதிய மருத்துவமனை விடுதியில் … Read more

பாபநாசம் பட பாணியில் கொலை! கணவனை கொன்று வீட்டில் புதைத்த மனைவி-காரணம் என்ன?

Drishyam Style Murder : கமல் நடித்த பாபநாபம் பட பாணியில் மகாராஷ்டிராவில் நடந்த கொலை ஒன்றுதான் தற்போது பலரையும் அதிர செய்துள்ளது.   

கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை திருவிழா: ஜூலை 27-ல் பிரதமர் மோடி பங்கேற்பு

புதுடெல்லி: கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ள ஆடித் திருவாதிரை திருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த தினத்தையும், தென்கிழக்கு ஆசியாவில் அவரது கடல்சார் பயணத்தின் 1000-வது ஆண்டையும், கங்கை கொண்ட சோழபுரம் கோயிலின் கட்டுமானத் தொடக்கத்தை நினைவுகூரும் வகையிலும் ஆடித் திருவாதிரை திருவிழாவாக ஜூலை 23 முதல் ஜூலை … Read more

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் எவ்வளவு வீட்டுக்கடன் பெற முடியும்? ஆர்பிஐ அப்டேட்!

Home Loan: உங்களின் மாத சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு வீட்டுக்கடன் தகுதி, இஎம்ஐ கணக்கீடு மற்றும் கூடுதல் விவரங்களை பற்றி பார்ப்போம்.  

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது தேர்தல் ஆணையம்!

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினமா ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, குடியரசு துணைத் தலைவர் தேர்தலை நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசியல் சாசன பிரிவு 324-ன்படி, குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலை நடத்தும் அதிகாரம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. எனவே, … Read more

இங்கிலாந்து, மாலத்தீவுகளுக்கான அரசு முறைப் பயணம்: டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி

புதுடெல்லி: இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு நாடுகளுக்குச் செல்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, புதுடெல்லியில் இருந்து தனி விமானத்தில் இன்று (புதன்கிழமை) புறப்பட்டார். முன்னதாக தனது பயணம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, “ஜூலை 23 முதல் 26 வரை இங்கிலாந்து மற்றும் மாலத்தீவுகளுக்கு நான் பயணம் மேற்கொள்கிறேன். இந்தியாவும் இங்கிலாந்தும் சமீப ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க அளவில் விரிவான கூட்டாண்மையை பகிர்ந்து கொள்கின்றன. இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், புதுமை, பாதுகாப்பு, … Read more

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க ஆக.24 வரை தடை நீட்டிப்பு

புதுடெல்லி: இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடையை ஆகஸ்ட் 24 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஏப்ரல் 30 முதல் இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. இதன்மூலம், பாகிஸ்தான் விமான நிறுவனங்களின் விமானங்கள், ராணுவ விமானங்கள் உட்பட சொந்த அல்லது குத்தகைக்கு எடுத்த விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு … Read more

பிரதமரை வயிறு குலுங்க சிரிக்க வைத்த இளைஞர் காலமானார்… யார் இந்த Atheist கிருஷ்ணா?

Atheist Krishna Passed Away: பிரதமர் மோடியை மனதார சிரிக்கவைத்தவராக அறியப்படும் மீம் கிரியேட்டர் கிருஷ்ணா இன்று காலமானார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.