இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு 1990 முதல் 26 சதவீதம் அதிகரிப்பு

புதுடெல்லி: இந்​தி​யா​வில் புற்​று​நோய் பாதிப்பு கடந்த 1990-ம் ஆண்டு முதல் 26% அதி​கரித்​துள்​ளது. இதுகுறித்து ‘தி லான்​செட்’ இதழில் வெளி​யான ஆய்வு முடிவு​களின்​படி, இந்​தி​யா​வில் புற்​று​நோய் பாதிப்பு 33 ஆண்​டு​களில் 26% அதி​கரித்​துள்​ளது. 1990-ல் 1 லட்​சம் மக்​கள்​தொகைக்கு 84.8 ஆக இருந்த புற்​று​நோய் பாதிப்பு 2023-ல் 107.2 ஆக உயர்ந்​துள்​ளது. இது​போல் புற்​று​நோய் காரண​மாக ஏற்​படும் உயி​ரிழப்பு 21% அதி​கரித்​துள்​ளது. அதேவேளை​யில் அமெரிக்கா மற்​றும் சீனா​வில் 33 ஆண்​டு​களில் புற்​று​நோய் பாதிப்பு மற்​றும் உயி​ரிழப்பு ஆகிய … Read more

மெலோனி நூலுக்கு முன்னுரை எழுதிய பிரதமர் மோடி

புதுடெல்லி: இத்​தாலி பிரதமர் ஜியார்​ஜியா மெலோனி, I Am Giorgia: My Roots, My Principles என்ற தலைப்​பில், தனது வாழ்க்கை வரலாறை நூலாக எழுதி உள்​ளார். இந்​நூலை ரூபா பப்​ளி​கேஷன்ஸ் இந்​தி​யா​வில் வெளி​யிட உள்​ளது. இந்த நூலில் பிரதமர் நரேந்​திர மோடி முன்​னுரை எழுதி உள்​ளார். அதில் கூறி​யிருப்​ப​தாவது:பிரதமர் மெலோனி​யின் வாழ்க்கை ஒரு​போதும் அரசி​யல் பற்​றிய​தாகவோ அதி​காரத்​தைப் பற்​றிய​தாகவோ இருந்​த​தில்​லை. இது அவருடைய தைரி​யம், உறு​திப்​பாடு, பொது சேவை, இத்​தாலியர்​களின் அர்ப்​பணிப்பு பற்​றியது. பிரதமர் மெலோனி​யின் … Read more

பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு எதிராக போராட்டம்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 2 பேர் உயிரிழப்பு

முசாபராபாத்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதி​ராக​ நேற்று பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற வன்​முறை​யில் 2 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். மேலும் 22 பேர் காயமடைந்​துள்​ளனர். பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் (பிஓகே) அவாமி செயற்​குழு அமைப்​பின்​(ஏஏசி) சார்​பாக இந்​தப் போராட்​டங்​கள் நடத்​தப்​பட்டு வரு​கின்​றன. இந்​தப் போராட்​டத்​தை தொடர்ந்து கால​வரையற்ற போராட்​டத்​துக்​கும் அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது. இதைத் தொடர்ந்து இந்​தப் போராட்​டத்தை நீர்த்​துப் போகச் செய்ய பாகிஸ்​தான் அரசு முயன்று வரு​கிறது. பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்​புப் பகு​தி​களில் பாது​காப்​புப் படை​யினரை … Read more

வாட்ஸ்-அப் மூலம் முத்தலாக் கூறி விவாகரத்து: கணவன், குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு

முசாபர்நகர்: உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம், பசேரா கிராமத்தைச் சேர்ந்த ஹசன் என்பவருக்கும் அஸ்மா என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் அஸ்மா காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: எனக்கு திருமணம் ஆனது முதல் கணவர் வீட்டார், வரதட்சணை கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்தனர். இதையடுத்து நான் என்னுடைய பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டேன். கடந்த மார்ச் 31-ம் தேதி, என் கணவர் வாட்ஸ்-அப் மூலம் மூன்று முறை ‘தலாக்’ என பதிவிட்டு … Read more

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

திருவனந்தபுரம்: வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தத்​துக்கு எதி​ராக கேரள சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் பின​ராயி விஜயன் நேற்று தீர்​மானம் கொண்டு வந்​தார். இதற்கு காங்​கிரஸ் தலை​மையி​லான யுடிஎப் கூட்​ட​ணி​யும் ஆதரவு தெரி​வித்​தது. தீர்​மானத்தை தாக்​கல் செய்​து, முதல்​வர் பின​ராயி விஜயன் பேசி​ய​தாவது: கேரள மாநிலத்​தில் வாக்​காளர் பட்​டியல் திருத்​தத்தை வெளிப்​படை​யான முறை​யில் செய்ய வேண்​டும். ஆனால், தலைமை தேர்​தல் ஆணை​யம் மேற்​கொள்ள நினைக்​கும் வாக்​காளர் பட்​டியல் திருத்​தம், உள்​நோக்​கம் கொண்​ட​தாக இருப்​ப​தாக சந்​தேகம் எழுகிறது. தேசிய குடிமக்​கள் … Read more

பிஹார் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – 68.5 லட்சம் பெயர்களை நீக்கியது தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: பிஹார் இறுதி வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 68.5 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. பிஹாரில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் நோக்கில் சிறப்பு தீவிர திருத்த நடைமுறையை தேர்தல் ஆணையம் அமல்படுத்தியது. இதையடுத்து, அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சரிபார்த்தனர். இறந்தவர்கள், இடம் மாறியவர்கள், இரட்டை பதிவு கொண்டவர்கள் என 65 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு … Read more

‘மும்பை தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க விரும்பினேன், ஆனால்…’ – ப.சிதம்பரம்

புதுடெல்லி: கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க விரும்பினேன், ஆனால் சர்வதேச அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் அது நிகழவில்லை என முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ப.சிதம்பரம், “மும்பை பயங்கரவாத தாக்குதல் 2008, நவம்பர் 26-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடந்தது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட கடைசி பயங்கரவாதியும் கொல்லப்பட்ட நிலையில், அப்போது உள்துறை … Read more

அக். 3-ல் பிஹார் பேரவைத் தேர்தல் அட்டவணை

புதுடெல்லி: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான அட்​ட​வணை அக்​டோபர் 3-ம் தேதி வெளி​யிடப்​படும். அன்​றைய தினம் 8 சட்டப் பேர​வைத் தொகு​தி​களுக்​கான இடைத்​தேர்​தல் அட்​ட​வணை​யும் வெளி​யிடப்​படும் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. பிஹார் சட்​டப்​பேர​வை​யின் பதவிக் காலம் வரும் நவம்​பர் 22-ம் தேதி​யுடன் நிறைவடைகிறது. இந்த சூழலில் அக்​டோபர் 3-ம் தேதி பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான அட்​ட​வணை வெளி​யிடப்​படும் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. அதோடு ஜம்மு காஷ்மீரில் பட்​காம், நாக்​ரோட்டா தொகு​தி​கள், ராஜஸ்​தானில் அன்டா தொகு​தி, ஜார்க்கண்டில் … Read more

அக்.1-ல் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா: தலைமை விருந்தினராக பங்கேற்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: அக்டோபர் 1-ம் தேதி புதுடெல்லியில் நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 1-ம் தேதி புதுடெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. இந்நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு … Read more

‘கோயில்முன் இந்து அல்லாதோர் பிரசாதம் விற்றால் தாக்கலாம்’ – பிரக்யா தாக்கூர் பேச்சால் சர்ச்சை!

புதுடெல்லி: “கோயில்கள் முன்பாக இந்து அல்லாதோர் பிரசாதப் பொருட்கள் விற்றால் அவர்களை உதைக்கலாம்” என முன்னாள் பாஜக எம்.பி.யும், பெண் துறவியுமான பிரக்யா தாக்கூர் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ம.பி.யின் தலைநகரான போபாலின் முன்னாள் பாஜக எம்.பி.யாக இருந்தவர் துறவி பிரக்யா சிங் தாக்கூர். இவர், நேற்று முன்தினம் போபாலின் ஒரு நவராத்ரி விழாவில் கலந்துகொண்டு பேசினார். இது, பாஜகவின் தோழமை அமைப்பான விஷ்வ இந்து பரிஷத் சார்பில் நடத்தப்பட்டது. இதில் முக்கிய விருந்தினரான பெண் … Read more