ஆவலுடன் எதிர்நோக்கப்படும் கர்நாடகா தேர்தல் முடிவுகள் – மக்களவை தேர்தலுக்கான திருப்புமுனையாகுமா?

புதுடெல்லி: கர்நாடக சட்டப்பேரவை தேர்தல், அடுத்த வருட மக்களவை தேர்தலுக்கான திருப்புமுனையாகும் வாய்ப்புகள் உள்ளன. இதனால், அம்மாநில முடிவுகளை ஆளும் கட்சியுடன், எதிர்க்கட்சிகளும் ஆவலுடன் எதிர்நோக்குகின்றன. அடுத்த வருட மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக ஒன்பது மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு தொடங்கியது. இவற்றின் தாக்கம் 2024 மக்களவைத் தேர்தலில் ஏற்படும் எனக் கருதப்பட்டது. இப்பட்டியலில் முதலாவதாக திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. கடந்த மார்ச்சில் வெளியான இதன் முடிவுகளுக்குப் பிறகு … Read more

எல்லைத் தாண்டி ஊடுருவ தயார் நிலையில் 10-20 தீவிரவாதிகள் – ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு

எல்லைத் தாண்டி ஊடுருவ தயார்நிலையில் ஏராளமான தீவிரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே நிறுத்தி வைத்திருப்பதாக உளவுத்துறை தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து எல்லைப் பகுதியில் படைகள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த 10 முதல் 20 தீவிரவாதிகள் எல்லையருகே ஊடுருவ சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து நீலம் பள்ளத்தாக்கு, ஜீலம் பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களில்  காத்திருப்பதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் 23, 24 ஆகிய தேதிகளில் ஸ்ரீநகரில் நடைபெற உள்ள ஜி 20 மாநாட்டிற்கு … Read more

சார் இது மெட்ரோ ரயில்.. உங்க பெட்ரூம் இல்ல.. பயணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ஜோடி..!!

டெல்லி மெட்ரோ ரயிலில் தொடர்ந்து அநாகரிகமாக நடந்து வரும் பயணிகளால், ஆபாசமாக நடந்து வரும் பயணிகளால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர். இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தது. உள்ளாடையுடன் பெண்கள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வந்ததை சிலர் வீடியோ எடுத்து வெளியிட அது வைரலாகி வந்த நிலையில் , மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் மெட்ரோ நிர்வாகம் கடும் … Read more

ரூ.40,000 சம்பளத்தில் வேலை! தேர்வு இல்லை | நேர்காணல் மட்டுமே..!!

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதி BE, B.Tech, M.Sc, MCA, ME, M.Tech. தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த CLRI Chennai Job Notification-க்கு, நேரடி நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்களை CLRI Chennai ஆட்சேர்ப்பு செய்கிறது. இந்த CLRI Chennai நிறுவனத்தை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (https://clri.org/) அறிந்து கொள்ளலாம்.  இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 18 … Read more

டெல்லி ஆளுநரைவிட அரசுக்கே அதிகாரம் – உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு

புதுடெல்லி: டெல்லி ஆளுநரைவிட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. யூனியன் பிரதேசமான டெல்லியின் சட்டம்-ஒழுங்கு மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. டெல்லியில் தற்போது முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி நிர்வாகம் தொடர்பாக அரசுக்கும், டெல்லி துணைநிலை ஆளுநருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வந்தன. இது தொடர்பாக 2015-ல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு … Read more

டெல்லியில் யாருக்கு அதிகாரம்..? உண்மையான நிர்வாக அதிகாரம் அரசிடமே இருக்க வேண்டும்.. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ஜனநாயக ஆட்சி முறையில், உண்மையான நிர்வாக அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லியில் முதலமைச்சர் கெஜ்ரிவால் அரசுக்கும், மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்ட துணைநிலை ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவிவந்த சூழலில், டெல்லி நிர்வாக மாற்றம் தொடர்பாக 2019ல் மத்திய அரசு சில சட்டத்திருத்தங்களை செய்தது. இதனை எதிர்த்து டெல்லி அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. … Read more

சிஆர்பிஎப் முகாம் மீது தாக்குதல் நடத்திய ஃபயஸ் அகமது உட்பட காஷ்மீர் தீவிரவாதிகளின் சொத்துகளை முடக்கியது என்ஐஏ

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் லெத்போரா பகுதியில் உள்ள சிஆர்பிஎப் முகாம் மீது கடந்த 2017-ம் ஆண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதி ஃபயஸ் அகமது உட்பட காஷ்மீர் தீவிரவாதிகளின் சொத்துகளை தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) முடக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் லெத்போரா பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ்படையின்(சிஆர்பிஎப்) பயிற்சி மையம் உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 30-ம்தேதி 3 தீவிரவாதிகள் கையெறிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். அப்போது இருதரப்பினர் இடையே 10 மணி நேரத்துக்கும் … Read more

ஊழலுக்கு எதிராக 5 நாள் நடைபயணத்தை தொடங்கினார் சச்சின் பைலட்..

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் ஊழலுக்கு எதிரான வெகுஜன போராட்டம் என்ற பெயரில் முன்னாள் மத்திய அமைச்சர் சச்சின் பைலட் நடைபயணம் தொடங்கி உள்ளார். அம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்த சச்சின் பைலட் போர்க் கொடி தூக்கி வருகிறார். இதன் ஒருபகுதியாக, ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி அஜ்மீரில் இருந்து ஜெய்ப்பூர் வரை 125 கிலோமீட்டர் தூரத்துக்கு 5 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ளப்போவதாக அவர் அறிவித்திருந்தார். அதன்படி தமது ஆதரவாளர்களுடன் … Read more

கேஜ்ரிவாலுக்கு அதிகரிக்கும் அரசு குடியிருப்பு சிக்கல் – சுற்றுச்சூழல் அனுமதி, ஊழல் புகார்கள்மீது விசாரணை

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ரூ.45 கோடியில் புதுப்பித்த அரசு குடியிருப்பால் சிக்கல் அதிகரித்து வருகிறது. இதன் மீதான சுற்றுச்சூழல் மற்றும் ஊழல் புகார்கள் மீது விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. டெல்லியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தனது அரசு குடியிருப்பை முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அண்மையில் புதுப்பித்திருந்தார். இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் அதன் விதிகள் மீறப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இதன் மீது நரேஷ் சவுத்ரி என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்தக் … Read more

பெண் தோழியுடன் ஸ்கூட்டரில் சென்று சாலை கண்காணிப்பு கேமராவில் சிக்கிய கணவர்

திருவனந்தபுரம்: பெண் தோழியுடன் கணவர் ஸ்கூட்டரில் சென்ற விவரம் சாலை கண்காணிப்பு கேமரா மூலம் அம்பலமானது. இதையடுத்து தன்னைத் தாக்கியதாக கணவர் மீது போலீஸில் மனைவி புகார் கொடுத்துள்ளார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான ஒருவர், தனது தோழியுடன் ஸ்கூட்டரில் ஹெல்மெட் போடாமல் சென்றுள்ளார். தற்போது கேரளாவின் பெரும்பாலான நகரங்களில் சாலை கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அவர்கள் வீட்டுக்கே நோட்டீஸ் அனுப்பப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த வகையில் ஹெல்மெட் … Read more