புதிதாக 1249 பேருக்கு கொரோனா

புதுடெல்லி:  நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 1249 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நாடு முழுவதும் புதிதாக 1249 கொரோனா பாதிப்புக்கள் பதிவாகி உள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கையானது 7927ஆக உயர்ந்துள்ளது.கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலத்தில் தலா ஒரு உயிரிழப்பு பதிவாகி உள்ளது. 24 மணி நேரத்தில் 1,05,316பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சுகாதார துறையின் இணைய தகவலின்படி நாடு முழுவதும் 220.65கோடி கொரோனா தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசுக்கு எதிரான 14 எதிர்க்கட்சிகள் மனு ஏப்.5ல் விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: புலனாய்வு அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவது தொடர்பான எதிர்க்கட்சிகளின் மனுவை ஏப்ரல் 5ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகளை அடக்க, தன்னாட்சி மிக்க புலனாய்வு அமைப்புக்களைத் தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.   இது குறித்து, ஆம் ஆத்மி தலைவர் மணிஷ் சிசோடியா கைது விவகாரத்தில்,  9 எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தன. இந்நிலையில், புலனாய்வு அமைப்புகளை … Read more

வாரணாசியில் மோடி அறிவிப்பு 2025க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு

வாரணாசி: ‘வரும் 2025ம் ஆண்டுக்குள் இந்தியாவில் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என வாரணாசியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ரூ.1,780 கோடியில் 28 வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முன்னதாக உலக காசநோய் தினத்தையொட்டி, ‘ஒரே உலகம் காசநோய்’ மாநாட்டில் பங்கேற்று பேசியதாவது: உலகில் ‘ஒரே பூமி, … Read more

எனது குடும்பத்தை அவமதித்த பாஜக தலைவர்களுக்கு எந்த நீதிபதியும் தண்டனை விதிக்கவில்லை: பிரியங்கா காந்தி

புதுடெல்லி: எனது குடும்பத்தை அவமதித்த பாஜக தலைவர்களுக்கு சிறை தண்டனை விதிக்க எந்த நீதிபதியும் உத்தரவிடவில்லை என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தகுதி நீக்கம் தொடர்பாக பேசியுள்ள ப்ரியங்கா காந்தி, “ராகுல் காந்தி, நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அதானி குழுமம் குறித்து கேள்வி எழுப்பியதால் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார். நாங்கள், நாட்டிற்காக தியாகம் செய்தவர்களின் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள், போர்களை கண்டு அஞ்சி தப்பி ஓட மாட்டோம். உங்களுக்கு என்ன தோணுகிறோதோ அதை செய்யுங்கள். ஆனால், … Read more

பாஜ, காங்கிரஸ் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது

புதுடெல்லி:  காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி பேசுவதற்கு வாய்ப்பு வழங்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்பிக்களும், ராகுல் மன்னிப்பு கேட்க கோரி பாஜ உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று முடங்கியது.  பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 13ம் தேதி தொடங்கியது.  தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து முடங்கி வருகின்றது. நேற்றும் மக்களவை தொடங்கியவுடன் காங்கிரஸ் எம்பிக்கள் ராகுல்காந்தியின், ஜனநாயகம் குறித்த கருத்து தொடர்பாக அவரது  நிலைப்பாடு மற்றும் விளக்கத்தை அளிப்பதற்கு வாய்ப்பு … Read more

கன்னட நடிகர் சேத்தன் ஜாமீனில் விடுதலை

பெங்களூரு: இந்துத்துவ அரசியலை விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட கன்னட நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான சேத்தன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். கன்னட நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான சேத்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்துத்துவ அரசியல் பொய்களால் கட்டமைக்கப்பட்டது என விமர்சித்திருந்தார். இதுகுறித்து பஜ்ரங் தள அமைப்பின் நிர்வாகி அளித்த புகாரின் பேரில் பெங்களூரு போலீஸார் அவரை கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இதையடுத்து அவரை பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கு காங்கிரஸாரும் சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு … Read more

2024 மக்களவை தேர்தல் மம்தா பானர்ஜியுடன் குமாரசாமி ஆலோசனை

கொல்கத்தா: கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவருமான குமாரசாமி நேற்று மாலை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.  கொல்கத்தாவின் காளிகாட்டில் உள்ள மம்தா பானர்ஜி இல்லத்துக்கு சென்ற குமாரசாமி, மம்தா பானர்ஜியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.  அப்போது, தற்போதைய அரசியல் சூழல் குறித்தும், 2024 மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்த பிராந்திய கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணி அமைப்பது குறித்தும் இருதலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.  

வார்த்தைகளில் கண்ணியம் இருக்க வேண்டும் – பாஜக தலைவர்கள் கருத்து

புதுடெல்லி: வார்த்தைகளில் கண்ணியம் அவசியம். சூரத் நீதிமன்ற தீர்ப்பு ராகுல் காந்திக்கு படிப்பினையாக அமையும் என்று பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்த குஜராத் எம்எல்ஏ புர்னேஷ் மோடி கூறும்போது, “சிலரது தவறுக்காக ஒட்டு மொத்த சமுதாயத்தின் மீதும் பழி சுமத்துவது சட்டவிரோதம். ராகுல் ஒட்டுமொத்த மோடி சமுதாயத்தை இழிவுபடுத்தினார். அரசியலுக்காக அல்லாமல் சமூகப் பிரச்சினைக்காகவே ராகுல் காந்தி மீது வழக்குத் தொடர்ந்தேன். ராகுல் எத்தனை முறை மேல்முறையீடு செய்தாலும் எனது … Read more

எம்.பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்: 2 ஆண்டு சிறை தண்டனையை காரணம் காட்டி மக்களவை செயலகம் அறிவிப்பு; தலைவர்கள் கண்டனம்

புதுடெல்லி: பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து கூறியது தொடர்பாக குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மக்களவை செயலகம் நேற்று அறிவித்தது. இதற்கு அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரசாரத்தில், கர்நாடக மாநிலம் கோலாரில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘அனைத்து திருடர்களும் … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்துவென்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டது. இதனை அதிகாரபூர்வமாக மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் செய்தியாளர்களிடம் அறிவித்தார். அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவிகிதத்தில் இருந்து 42 சதவிகிதமாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி … Read more