தொடர்ந்து 6வது நாளாக ஒத்திவைப்பு பாஜ எம்பிக்கள் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது: அதானி விவகாரத்தை திசைதிருப்பும் முயற்சி என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

புதுடெல்லி: பாஜ எம்பிக்களின் அமளி காரணமாக தொடர்ந்து 6வது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. அதானி விவகாரத்தை திசை திருப்பவே, பாஜவினர் நாடாளுமன்றத்தை முடக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. நாடாளுமன்றத்தில் 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 13ம் தேதி தொடங்கிய நிலையில், தொடர்ந்து 5 நாட்கள் பாஜ எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். லண்டனில் இந்திய ஜனநாயகம் பற்றி பேசியதற்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டுமென பாஜவினர் அமளி செய்து கடந்த வாரம் … Read more

ஒன்றிய அரசு சார்பில் சீலிட்ட உறையில் தாக்கல் செய்த பதிலை ஏற்க மறுப்பு: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: ஒன்றிய அரசு சார்பில் சீலிட்ட உறையில் பதில் தாக்கல் செய்த பதிலை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. பாதுகாப்புத்துறையில் ஒரே வேலைக்கு ஒரே பென்சன் வழங்குவது தொடர்பான வழக்கு நேற்று தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா, ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி ஒன்றிய அரசின் பதிலை சீலிட்ட உறையில் தாக்கல் செய்தார். இதை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. இதுபற்றி நீதிபதிகள் … Read more

எழுத்து மூலமாக அளித்த வாக்குறுதியை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

புதுடெல்லி: ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனை தொடர்ந்து ஒன்றிய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்தது. மேலும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்து மூலமாகவும் உத்தரவாதம் அளித்திருந்தது. இந்நிலையில் சம்யுக்தா கிசன் மோர்சா சார்பாக டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நேற்று விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். பல்வேறு வண்ணங்களில் தலைப்பாகை அணிந்தபடி … Read more

போலீஸ், வழக்குகள் மூலம் என்னை மிரட்ட முடியாது: ராகுல்காந்தி ஆவேசம்

வயநாடு: போலீஸ், வழக்குகள் மூலம் என்னை மிரட்ட முடியாது என்று ராகுல்காந்தி தெரிவித்தார். இந்திய ஒற்றுமை யாத்திரையில் ‘பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்’ என்று பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியிடம், அதுகுறித்து விசாரிக்க டெல்லி போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர். இதுபற்றி கேரள மாநிலம் வயநாட்டில் அவரது எம்பி தொகுதிக்கு உட்பட்ட பல குடும்பங்களுக்கு புதியதாக கட்டிய வீட்டின் சாவியை வழங்கும் விழாவில் ராகுல்காந்தி பேசியதாவது:பிரதமர், பா.ஜ, ஆர்எஸ்எஸ், காவல்துறையை  கண்டு பலர் பயப்படலாம். … Read more

கவிதாவிடம் 10 மணிநேரம் அமலாக்கத்துறை விசாரணை

புதுடெல்லி:  டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேட்டில் தெலங்கானா முதல்வரின் மகளும், எம்எல்சியுமான கவிதாவுக்கு தொடர்புள்ளதாக கூறி அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றது. இது தொடர்பாக கடந்த 11ம் தேதி கவிதா டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம்  சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.  இதனை தொடர்ந்து 2வது முறையாக நேற்று கவிதா விசாரணைக்கு ஆஜரானார். அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். 10 மணி … Read more

மோடி பெயர் குறித்த கருத்து ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு

சூரத்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கில் நாளை மறுநாள் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது கர்நாடக மாநிலம், கோலாரின் நடந்த பேரணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார். அப்போது பேசிய அவர்,  மோடியின் பெயர் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக  பாஜ எம்எல்ஏ மற்றும் குஜராத் முன்னாள் அமைச்சர் புர்னேஷ் மோடி ராகுலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். … Read more

மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான சிசோடியாவுக்கு ஏப்ரல் 2ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கடந்த 9ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். டெல்லி மதுபானக்கொள்கை முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சிபிஐ அதிகாரிகள் கலால் துறை அதிகாரிகள் மற்றும் தொழிலதிபா்கள் சிலரை கைது … Read more

வெளிநாடுகளை சேர்ந்த 3,295 நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் நடத்தி வருகின்றன: நிர்மலா சீதாராமன் பதில்

டெல்லி: வெளிநாடுகளை சேர்ந்த 3,295 நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் நடத்தி வருகின்றன என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் உறுப்பினர் பாரிவேந்தரின் கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். வெளிநாட்டு நிறுவனங்களின் 14,173 துணை நிறுவனங்களும் இந்தியாவில் தொழில் நடத்தி வருகின்றன என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

மேலாளரின் இ-மெயில் மூலம் சல்மானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்: மும்பை போலீசார் வழக்குபதிவு

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மின்னஞ்சல் (இ-மெயில்) மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து சல்மான் கானின் மேனேஜர் பாந்த்ரா காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த 18ம் தேதி சல்மான் கானின் மேலாளரின் மின்னஞ்சலுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் தாதா கோல்டி பிரார், நடிகர் சல்மான் கானுடன் பேச … Read more

புதுடெல்லியில் ஜப்பான் பிரதமர்; ஜி-7 மாநாட்டிற்கு பிரதமர் மோடி அழைப்பு?

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர்  புமியோ கிஷிதா ( Fumio Kishida) -வுக்கு பிரதமர் நரேந்திரமோடி சந்தனத்தால் செய்யப்பட்ட புத்தர் சிலையை பரிசாக அளித்தார். கர்நாடகத்தின் பிரசித்தி பெற்ற வேலைப்பாடு மிக்க பெட்டியில் வைத்து, கர்நாடக கலைஞர்களின் படைப்பான புத்தர் சிலையை பிரதமர் மோடி பரிசாக அளித்தார்.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM